ஜனவரி- 3 முதல் 15 லிருந்து 18 வயதிற்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளதை புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்கள் பலர் ”இது அறிவியல் பூர்வற்றது, அவசர கதியிலானது, தேவையற்றது” என தெரிவித்துள்ளனர்! எதிர்ப்பு வலுக்கிறது!
புகழ்பெற்ற எய்ம்ஸ் நிறுவனத்தின் மருத்துவர் சஞ்சய் கே ராய். இவர் கோவேக்சின் பரிசோதனை முயற்சிகளின் முதன்மை ஆய்வாளர். இவர் பப்ளிக் ஹெல்த் அசோஷேசியன் தலைவராகவும் உள்ளார். சிறுவர்களுக்கு கொரானா தடுப்பூசி குறித்து இவர் கூறும் போது, ”குழந்தைகளுக்கு கொரானா மிகவும் அரிதாகவே வருகிறது. நம்முடைய புள்ளிவிபரப்படி பத்து லட்சம் குழந்தைகளில் இருவர் மட்டுமே கொரானாவில் இறந்துள்ளனர். ஆகவே, எந்த விதத்தில் பார்த்தாலும் இயல்பான நோய் எதிர்ப்பாற்றலுடன் திகழும் குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையற்றது. குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பதை ஒரு அறிவியல்பூர்வமற்ற அணுகுமுறையாகவே நான் பார்க்கிறேன்!
இந்த துறையில் ஆரம்பம் முதல் தொடர்ந்து இயங்கி வருகிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு பெரு மதிப்பு உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்கான கேள்விக்கு ஆய்வு செய்த நியாயமான பதில் நம்மிடம் இல்லை. அப்படியே போட முடிவெடுத்தாலும், இதை முன் கூட்டியே நன்கைந்து மாதங்களாக செயல்படுத்தி வரும் நாடுகளில் என்ன விளை வு ஏற்ப்பட்டு உள்ளது என்ற டேட்டாவை வைத்து ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் இரண்டுகட்ட கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் பேர் மீண்டும் பாதிக்கப்படும் எண்ணிக்கை தினசரி சுமார் 50,000 மாக பிரிட்டனில் உள்ளது. ஆகவே, நாம் பல விஷயங்களில் மறு பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்’’ என அவர் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கான நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராபர்ட் மேலோன் என்ற மேலை நாட்டு மரபணு ஊசி விஞ்ஞானி கூறிய கருத்து தற்போது உலகம் முழுக்க கவனம் பெற்று உள்ளது. கொரானா ஊசியில் உள்ள கூர்புரதம்,மரபணுக்கள் உடலுக்கு தீய விளைவுகளைத் தரும். குழந்தைகள் இயற்கையாக அதிக நோய் எதிர்ப்பு பெற்றவர்கள்.கொரானா தடுப்பூசியால் அவர்களுக்கு பலனில்லை. ஆபத்துகளே அதிகம் என தெரிவித்துள்ளார்.
சஞ்சய் கே ராய் மற்றும் ராபர்ட் மேலோன் போலவே சிறுவர், சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசின் கொரோனா பணிக்குழு உறுப்பினரும், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் வைரலாஜி துறையின் இயக்குநருமான மருத்துவர் ககன்தீப் அவர்கள், ” பொதுவாக கரோனா வைரஸ் தொற்று, குழந்தைகளுக்குப் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பள்ளியிலும், வகுப்பிலும் கரோனா தொற்று ஏற்படும், தீவிரமடையும் என்று எண்ணக் கூடாது. மாறாக, அவர்கள் வகுப்புகளிலும், சக மாணவர்களிடமும் உரையாடும்போதும், பழகும்போதும் அவர்கள் பெறும் பலன்கள்தான் அதிகம்.
குழந்தைகளைப் பொறுத்தவரை சார்ஸ் கோவிட் தொற்று அவர்களுக்கு நல்வாய்ப்பாக தீவிரமாக இருக்கவில்லை. நலமாக உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்சமயம் புள்ளிவிவரங்கள் அதிகம் இல்லாததால், அது குறித்து முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள திறன் குறைந்த (Sub-optimal) தடுப்பூசிகளை பயன்படுத்துவதைக் காட்டிலும், ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
பொதுவாக மரபணு பிறழ்வு காரணமாக ஒமிக்ரான் தொற்று தடுப்பூசிகளுக்கு சரியாக கட்டுப்படுவதில்லை. கோவேக்சினுக்கும் அதே நிலைதான். ஆக, அதுகுறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளின் திறன் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் குறைவதால், தடுப்பூசிகள் மேற்கொண்டு தேவையா என ஆராயப்பட வேண்டும்”.என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒமிக்கிரான் பரவும் போது, தடுப்பூசி என்ற வீரியம் குறைந்த கொரானா வைரஸை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிப்பது மனித உடலை இரண்டுகட்ட தாக்குதலுக்கு உட்படுத்துவதாகிவிடும். என்று சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தான் ஆப்ரிக்காவில் மக்கள் தடுப்பூசிக்கு ஆர்வம் காட்டவில்லை. அரசும் நிர்பந்திக்கவில்லை. இதனால் பல லட்சம் தடுப்பூசி மருந்தை நைஜிரியாவில் உள்ள அபூஜாவில் பெரிய பள்ளம் தோண்டி புதைத்தார்கள் என்பது கவனத்திற்கு உரியது.
மேற்படி ஆங்கில மருத்துவ நிபுணர்களே இந்த கருத்தை கூறி இருப்பதால், அரசாங்கம் கண்டிப்பாக தன் நிலைபாட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு ஒன்று வந்தால் கூட தாங்கிக் கொள்வார்கள். ஆனால், தடுப்பூசியால் குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்களால் தாங்க முடியாது. கொதித்து எழுந்துவிடுவார்கள்! தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக யாருமே நினைக்கவில்லை. இப்படித்தான் முதலில் கற்பிணிகளுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று கூறிவிட்டு நிர்பந்தப்படுத்தினீர்கள். அதன் விளைவாய் ஏராளமான பெண்களின் கரு கலைந்தது தான் கண்ட பலன்.
இரண்டுகட்ட தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே ஒமிக்கிரான் தாக்குகிறது என்றால், தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதே சரியாக இருக்கும் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
This has to be represented to the Central and State Governments, the PM and the CM s to be clearly explained about this and then a decision taken, after careful study of various criterion.