ஜனவரி 3 ஆம் தேதி முதல் அதிரடியாக பள்ளிக் குழந்தைகளுக்கு (15 -18) தடுப்பூசி படுவேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஐந்து பள்ளிக் குழந்தைகள் இறந்ததாக அவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளனர்.
குழந்தைகளை கொரோனா மிகக் குறைவாகவே தொற்றுகிறது. அப்படியே தொற்றினாலும் மரண பாதிப்பு இல்லை. ஆகவே தேவையில்லை என உலக மருத்துவ நிபுணர்கள் பலர் சொல்லியும் கேளாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி பள்ளிகளில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி போடப்படுகிறது!
இது குறித்து மூன்று நாட்கள் முன்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், ஹரியானா, ஆந்திரா, கர்நாடக அரசுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என கூறும் அறிக்கைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைப் பார்த்த உச்ச நீதிமன்றம் அவ்வாறு கூறக் கூடாது” என அறிவுறுத்தியது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகதிற்கு கேட்கப்பட்டது. மத்திய அரசு நீதிமன்றத்தில், ”தடுப்பூசியை கட்டயாப்படுத்தவில்லை.விருப்பபடுபவர்கள் போட்டு கொள்ளலாம்” எனக் கூறி சமாளித்தது.
இந்தியாவின் புகழ் பெற்ற மருத்துவர்களில் ஒருவரான சஞ்சய் கே.ராய், ”எந்த விதத்தில் பார்த்தாலும் இயல்பான நோய் எதிர்ப்பாற்றலுடன் திகழும் குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையற்றது. குழந்தைகளுக்கு தடுப்பூசி என்பதை ஒரு அறிவியல்பூர்வமற்ற அணுகுமுறையாகவே நான் பார்க்கிறேன்!’’ என கூறி இருக்கிறார் என்பது கவனத்திற்கு உரியது. இது குறித்து நாம் அறம் இணைய இதழில்,
குழந்தைகளுக்கு தடுப்பூசி கூடாது – பிரபல டாக்டர்கள் எதிர்ப்பு
என்ற கட்டுரையில் விரிவாக எழுதி இருந்தோம்
மலேசியாவிலும் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரு மாணவர்கள் இறந்தது ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் புதுவையில் லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் சங்கல்ப் ரெட்டி தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம் இறந்தது சர்ச்சைக்கு ஆளானது.
மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆண்ரூ சைமன் என்ற இளைஞர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட அடுத்த நாளே இறந்தது அப் பகுதியில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
சென்ற ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசியை திணித்து வரும் மத்திய, மா நில அரசுகள் ஆரம்ப காலங்களில் தடுப்பூசி போட்டவர்கள் இறக்க நேரும் போது தடுப்பூசி காரணமல்ல, என அடித்துப் பேசி மறுத்து வந்தது. ஜீன் மாதத்தில் இருந்து தான் முதல் தடுப்பூசி மரணத்தையே கணக்கில் எடுத்தது.
ஆனால், சென்ற ஏப்ரல் முதல் வாரத்தில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிக்கு 2.7 இறப்புகளும்,. 4.8 சதவீத ஆபத்தான ஆஸ்பத்திரி சேர்க்கைகளும் நடந்ததாக தரவுகள் கூறுகின்றன.
இந்தச் சூழலில் மாநிலங்களவையில் எழுத்து மூலமாக பதில் தந்த அமைச்சர் பாரதி பிரவீன்பவார், ”நவம்பர் 30 வரையிலான நிலவரப்படி தடுப்பூசி செலுத்தியவர்களில் 49,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார். இதில், ‘குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு தீவீர, மற்றும் மோசமான விளைவுகள் ஏற்பட்டது என்றும், அவர்களில் 946 பேர் இறந்துவிட்டதாகவும்’ கூறியுள்ளார்.
கொரானா தடுப்பூசி போட்டதால் தங்கள் பிள்ளைகள் இறந்ததாக 5 பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரமணா மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகிய இரு நீதிபதிகள் விசாரித்தனர்.
15 முதல் 18 வயதினருக்கு கொரானா தடுப்பூசி தேவையா என்றும் ஆராய நடுநிலை மருத்துவர்கள் குழு அமைக்கவும் கோரப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசியிலுள்ள கூர் புரதம் என்பதே உடலுக்கு ஆபத்தானதாக உள்ளதால், இந்த தடுப்பூசி போட்டபின் இறந்த அத்தனை 15-18 வயதினர் பட்டியலும் தயாரிக்கவும், நீதி வழங்கவும் பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது.
அந்த வகையில் டாக்டர்கள் அரவிந்த் குஷ்வா, அமித் பானர்ஜி, பட்டேல், சஞ்சய் கே.ராய், ஜெயப்பிரகாஷ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தர உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தலை நகர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ”இந்தியாவில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக தடுப்பூசி போட்ட பள்ளிக் குழந்தைகள் பாதிப்பு அடைவதும், இறப்பதும் நடந்த வண்ணம் உள்ளது. ஆனால், நாங்கள் ஐந்து குடும்பத்தினர் மட்டுமே இதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஆகவே பாதிப்படைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும்” என அந்த பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர். முன்னதாக அவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் புடை சூழ ”குழந்தைகளுக்கான கட்டாய தடுப்பூசியை கைவிட வேண்டும்” என கூட்டாக சேர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதை எந்த ஊடகமும் செய்தியாக்காத வகையில் அழுத்தம் தரப்பட்டு உள்ளது. ஆனால், இந்தச் செய்தியை livelaw.in ஊடகம் மட்டும் பிரசுரித்துள்ளது.
இதற்கிடையில் சர்வதேச ரீதியாக ஒரு மாபெரும் மாற்றமாக இங்கிலாந்து அரசு கொரானா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வரும் 27ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் அமலில் இருந்துவரும் பிளான்-பி கரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ளார். கொரானா கட்டுபாடுகளுக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் அங்கு வெற்றிகரமாக நடைபெற்றதன் காரணமாக பிளான்-பி கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இனி முகக் கவசம் கட்டாயமில்லை, இரவு நேரக் கிளப்புகள் திறக்கபடலாம். விருந்துகள், வைபவங்களை நடத்தலாம். வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டியதில்லை. தடையின்றி எங்கும் செல்லலாம்’’ என அவர் கூறியுள்ளார்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
இந்தியா முழுவதும் தடுப்பூசி கட்டாயம் அல்ல என்ற நிலைப்பாடு எடுக்கப்பட வேண்டும். விருப்பமுள்ளவர்கள் போட்டுகொள்ளட்டும்.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/sv/register?ref=WTOZ531Y