அன்பு நண்பர்களே, தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்!
அஞ்சா நெஞ்சுரத்துடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையை பற்றிக் கொண்டு பயணிக்கிறது!
நாம் விளம்பரத்தை ஏற்பதில்லை என்பதில் இன்றளவும் உறுதிப்பாட்டுடன் இயங்கி வருகிறோம். தன் வாசகர் தரும் சந்தாவால் மட்டுமே இயங்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வாசகர் அல்லாத வசதி படைத்த எவரிடமும் நாம் நிதி உதவிகள் கேட்பதில்லை.
எந்த ஒரு அரசியல் இயக்கத்தையும் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொள்ளாமல் பிரச்சினை சார்ந்து, அதில் மக்கள் நலன் சார்ந்த நிலை எடுத்து எழுதி வருகிறோம். ஆகவே, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ, அவற்றின் ஆதரவாளர்களோ நம்மை ஆதரிக்க வாய்ப்பில்லை.
சமூக மனசாட்சியுடன் இயங்க இது போன்ற பாதுகாப்புக் கவசங்கள் தேவை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால் மட்டுமே இந்தப்படி செயல்படுகிறோம். ஆகவே, அறம் தன் சுயபலத்துடன் இயங்க அதை வாசிக்கும் வாசகர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதை நான் அவ்வப்போது நினைவுபடுத்தினாலும், கமிட்மெண்டாக அறத்திற்கு அரண் செய்பவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலே சொற்பமாகத் தான் உள்ளனர். அந்த ஒவ்வொருவரையும் நன்றி பெருக்கோடு நெஞ்சில் நிறுத்தி, தொடர்ந்து பயணிக்கிறோம்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள் நல்ல காரியங்கள் சில தனி மனிதர்களால் முன்னெடுக்கப்படலாம்! ஆனால், அது நின்று நிலை பெற்று சமூகம் தொடர்ந்து பலன் பெறுவதற்கு, அதற்கான மனநிலை கொண்டவர்கள் ஒன்று சேர்வதாலும், தங்களுக்கான பங்களிப்பை சுயமாக முன் வந்து இடையறாது செய்தாலும் மட்டுமே சாத்தியமாகும்!
அறத்தை வாசிக்கும் சமூக நலன் சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆகவே, அவரவர் சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துங்கள் நண்பர்களே!
www.aramonline.in என்ற தளத்திற்கு நேரடியாக – தினமும் ஏதாவது ஒரு நேரம் வந்து – படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! மற்றபடி சப்கிரைப்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், ஒவ்வொரு பதிவும் இமெயிலில் உடனுக்குடன் அனுப்பப்பட்டுவிடும்!
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – அறம் இணைய இதழ்
https://aramonline.in/support-aram/
Google pay 9444427351
Bank Name: STATE BANK OF INDIA
Account Name: ARAM ONLINE
Bank Account No: 39713109068
Branch: SHASTHRI NAGAR
IFSC code:SBIN0007106
The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you. https://www.gate.io/es/signup/XwNAU