வேண்டாம், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

-ம.வி.ராஜதுரை

மருத்துவ வல்லுநர் குழுவின் எதிர்ப்பை பொருட்படுத்தால், மூர்க்கதனமாக குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன? மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிறார்களுக்கு கைவிடக் கூறி, மக்கள் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை!

கடந்த  மூன்று அலைகளிலும் கொரானா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறார்களின் சதவீதம் 0.02 தான். இந்தத் தொற்று நோய் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  பாதிக்காது என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் சொன்ன பிறகும் “தடுப்பு மருந்து, தடுப்பு மருந்து “என்று இவர்கள் ஏன் அலைய வேண்டும்?

இந்திய அளவிலும், உலக அலவிலும் உள்ள மிகப் பிரபலமான மருத்துவ நிபுணர்கள் ஒருமித்த கருத்துடன், ‘குழந்தைகளுக்கு, வேண்டாம் கொரோனா தடுப்பூசி’ எனக் கூறியவற்றை தொகுத்து நமது அறம் இதழில் ,

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி! பிரபல மருத்துவ நிபுணர்களின் வலுக்கும் எதிர்ப்பு

என நாம் எழுதி இருந்தோம்.

மக்கள் மருத்துவ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கி. வெங்கட்ராமன் (தமிழ் தேசிய பேரியக்கம்) எஸ். ஏ .வசீர் சுல்தான் (அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு -இந்தியா) மருத்துவர் முகமது யூசுப் (அனைத்து தமிழ்நாடு அக்குபஞ்சர் மற்றும் மாற்றுமுறை மருத்துவ சங்கம் ATAMA)சமூக ஆர்வலர்கள் அருணபாரதி,சையது அபுதாகிர் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு  கூட்டாக அளித்த பேட்டி:

” தடுப்பூசி குறித்து அரசுக்கு பரிந்துரை அளித்துவரும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு    (National Technical Advisory group on Immunization -NTAGI) வின் பரிந்துரை பெறாமலேயே 15 வயதுக்கு கீழ் இருக்கிற சிறார்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவது என இந்திய அரசு அறிவித்துள்ளது. இது ஒரு பொறுப்பற்ற செயலாகும்.

இந்திய அரசின் முடிவை அப்படியே பின்பற்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு கோர்பிவேக்ஸ்(Corbevax) தடுப்பூசியை கட்டாயமாக அளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே  செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பு ஊசிகூட இப்போது  அதிகம் பரவி வரும் ஓமிக்ரானுக்கு எதிராக போதிய அளவு பரிசோதித்து பார்க்கப்படவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது அரசு அமைத்துள்ள மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையை பெறாமலேயே அவசர அவசரமாக சிறார்களுக்கு கட்டாய தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன?.இந்த கேள்வி இயல்பாக எழுகிறது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்று நோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய் மற்றும் தேசிய கொரோனா தடுப்பு குழு உறுப்பினர் மருத்துவர் ககன்தீப் காங் போன்ற மருத்துவ வல்லுநர்கள் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த 2021 டிசம்பர் 30ஆம் தேதி தில்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின்(ICMR) தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பர்கவா, ” அனைத்து கோவிட் தடுப்பூசிகளும் தொற்றுநோயை தடுப்பதில்லை. அவை நோயை மாற்றக்கூடியவை (Disease Modifying), நோய்த் தொற்றின் தீவிரம், மருத்துவமனையில் சேர்க்கப் படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றை தணிப்பதற்காக வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்திருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்‌ அதுபற்றி மத்திய அரசு கிஞ்சித்தும் யோசித்து பார்த்ததாக தெரியவில்லை

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ வல்லுநர்கள் கட்டாய தடுப்பூசியை கண்டித்து பெரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

முன்னேறிய , சுகாதார கட்டமைப்பு கொண்ட நாடுகளில் மக்கள் எதற்காக இதை எதிர்க்கிறார்கள், அங்குள்ள வல்லுநர்கள் என்னதான் சொல்கிறார்கள், என்பதைல்லாம் மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு விவாதிப்பார்கள்.

நம்ம நாட்டு அரசியல்வாதிகளோ இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்ததாக தெரியவில்லை. மத்திய அரசின் ஓர் அங்கமாக திகழும் மருத்துவ குழுவின் பரிந்துரை பெறாமலேயே 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த இந்திய அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசும் தமிழக அரசும் சிறுவர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்  என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் பேசுகையில் அவர்கள் தெரிவித்த கருத்துகள்:

” குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால், மிகுந்த மன வேதனையுடன் பத்திரிக்கையாளர்கள் ஆகிய உங்களை சந்திக்கிறோம். உங்கள் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்கு  இந்த கருத்துக்கள் எட்ட வேண்டும்.

மற்றத்துறை  நிறுவனங்களோடு ஒப்பிடும்போது மருத்துவத் துறையில் உள்ள மருந்து நிறுவனங்கள்தான் லஞ்சம் கொடுப்பதில் கோலோச்சி நிற்கின்றன. கோவிட் தடுப்பு மருந்தையும் இந்த பின்னணியில் இருந்து  பார்க்க வேண்டும். பின் விளைவு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று இந்த மருந்தை விற்கும் நிறுவனங்களும் இதை  வாங்கிப் போடும் மத்திய, மாநில அரசுகளும் சொல்லி விட்டன.

புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழ்களில், இந்த தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி வல்லுநர்கள் விரிவாக தெரிவித்து வருகிறார்கள். இந்த தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளும் மக்களுக்கு பின் நாட்களில் மூளை நரம்பு தொடர்பான பிரச்சனைகள், இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

தடுப்பூசி எடுத்துக் கொள்வோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட பாதிப்பு வரலாம் என்ற கருத்துக்களும் மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்களால் முன்வைக்கப்படுகிறது.

இப்போது சுறுசுறுப்பாக செயல்படும் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் எல்லாம் இந்த மருந்தால் நாளைக்கு பின்விளைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் போது களத்தில் இருக்க மாட்டார்கள். எனவே மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பு ஊசி கூட இப்போது அதிகம் பரவி வரும் ஓமி க்ரானுக்கு எதிராக போதிய அளவு பரிசோதித்து பார்க்கப்படவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது அரசு அமைத்துள்ள மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையை பெறாமலேயே அவசர அவசரமாக சிறார்களுக்கு கட்டாய தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன?

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்று நோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய் மற்றும் தேசிய கொரோனா தடுப்பு குழு உறுப்பினர் மருத்துவர் ககன்தீப் காங் போன்ற மருத்துவ வல்லுநர்கள் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த 2021 டிசம்பர் 30ஆம் தேதி தில்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின்(ICMR) தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பர்கவா, “அனைத்து கோவிட் தடுப்பூசிகளும் தொற்று நோயை தடுப்பதில்லை. அவை நோயை மாற்றக் கூடியவை (Disease Modifying), நோய்த் தொற்றின் தீவிரம், மருத்துவமனையில் சேர்க்கப் படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றை தணிப்பதற்காக வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்திருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ வல்லுநர்கள் கட்டாய தடுப்பூசியை கண்டித்து பெரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசின் ஓர் அங்கமாக திகழும் மருத்துவ குழுவின் பரிந்துரை பெறாமலேயே 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த இந்திய அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசும் தமிழக அரசும் சிறுவர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர்கள் தெரிவித்தது;

” சர்வதேச அளவில்  மருந்து நிறுவனங்கள் தான் தங்கள் மருந்துகளை விற்க மிகப்பெரிய அளவில் லஞ்சம் கொடுக்கிறார்கள்.ஒரு மருந்து 10 முதல் 100 மடங்கு வரை அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

மோடி அரசு செய்த ஒரு நல்ல காரியம் மக்கள்  மருந்தகங்களை ஆங்காங்கு திறந்து வைத்திருப்பது. மருந்துகள் விலை வித்தியாசத்தை நிரூபிக்க  இந்த கடைகள் ஒரு சான்று.

தடுப்பூசி எடுத்துக் கொள்வோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட பாதிப்பு வரலாம் என்ற கருத்துக்களும் மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்களால் முன்வைக்கப்படுகிறது.

கடந்த  மூன்று அலைகளிலும் கொரானா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறார்களின் சதவீதம் 0.02 தான். அப்படியிருக்கும் போது, சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் ஏன் இவ்வளவு அவசரம்? இந்த கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து வலுவாக எழவேண்டும்.

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி! பிரபல மருத்துவ நிபுணர்களின்  வலுக்கும் எதிர்ப்பு

ஆட்சியில் இருப்பவர்கள்  லஞ்சம் வாங்குவது இப்போது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. லஞ்ச பணத்தை வேறு துறைகளில் வாங்கிக் கொள்ளுங்கள், குழந்தைகள், சிறுவர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசைவிட தமிழ்நாடு அரசு ஒருபடி மேலாக வேகம் காட்டுவது தான் மிகுந்த மன வேதனை தருகிறது.

ஜனநாயகம் வலுவாக உள்ள அயல் நாடுகளில் தடுப்பு மருந்துகளால் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. அது பற்றிய விவரங்களை மக்களிடம் கேட்டு அங்கு உள்ள பத்திரிகைகள் வெளியிடுகின்றன. நம் நாட்டில் அதற்கும் வழியில்லை.

நமது மத்திய மாநில அரசுகளை இந்த விவகாரத்தில் புரியவைக்க முடியாது. ஆனால் பணிய வைக்க முடியும், அதை மக்கள் செய்ய வேண்டும்.” என்று மக்கள் மருத்துவக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

செய்தி தொகுப்பு; ம.வி.ராஜதுரை

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time