கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் இன்றும் பரவலாக பலரால் விரும்பி வாசிக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்தினம் இதை பிரம்மாண்ட திரைப்படமாக எடுத்து வருகிறார். ஆனால், இந்த நாவலில் உள்ள இந்துத்துவக் கூறுகளும், பிராமணப் பெருமிதங்களும் ஆபத்தானவை என்கிறார் ஆய்வாளர் பொ.வேல்சாமி.
தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால சோழப் பேரரசு பற்றியும், அக்கால வாழ்க்கை முறை, சமூகம், கலை, கலாச்சாரம், இயற்கை வளம், போர் முறைகள் அனைத்தையும் கற்பனை வளத்துடன் பிரதிபலிக்கும் நாவல் தான் கல்கியின் பொன்னியின் செல்வன்!
1999-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி தான் கல்கியின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது என்பது நினைவு கூறத்தக்கது. கல்கியின் வாரிசுகளுக்கு தங்க சுரங்கம் போல அள்ளக் குறையாத வருமானத்தை தொடர்ந்து தந்து கொண்டிருந்த படைப்புகளை ஏன் பாஜக அரசு நாட்டுடமை ஆக்கியது? அதன் பின்னணி என்னவாக இருக்க முடியும் என்பதை இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கும் நண்பர்கள் தெளிவு பெற முடியும்.
இந்த நாவலில் வரும் ஒரு சில சொற்றொடர்களை இங்கு மேற்கோள் காட்டுகிறேன். ஏனென்றால், அன்றைக்கு மன்னர்களின் அவையில் பதவி பெற்ற பிராமணர்கள் மன்னர்களை குறித்து மக்களுக்கு எப்படியான பிம்பத்தை கட்டி எழுப்பினார்கள் என்பதை புரிந்து கொள்ள இவை உதவும்;
கீழே உள்ள இந்த வசனங்கள் எல்லாமே சோழனின் அரசவையில் முதன் மந்திரியாக இருந்த பார்ப்பனரான அநிருத்தப் பிரம்மராயர் பேசுவதாக அமைந்தவையாகும். இவரை மிக உன்னதமானவராக, உத்தம சிரேஷ்டராக கல்கி வருணித்து இருப்பார்.
”அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன!”
”புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.” ( அரசர் இருக்கும் இடம் சந்நிதானமாம்!)
அநிருத்தப் பிரமராயர் தன்னுடைய சீடனிடம் பேசுவது, ” அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கீதாச்சாரியார் அருள் புரிந்திருக்கிறார் அல்லவா?” ( அதாவது அந்தந்த குலத்தவர் அவரவர்குரிய தொழில்களைத் தான் செய்ய வேண்டுமாம்! ஆனால், இப்படி சொல்பவரே சனாதன தர்மத்திற்கு மாறாக சோழ அரசனிடம் முதன் மந்திரியாக இருந்தது தான் விசித்திரம்.)
மற்றொரு வசனம்;
“சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச் சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த மகான். அவர் என்ன சொன்னார் தெரியுமா? வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும். அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில் வழிபாடு – ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத்தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகா ஞானிகளும், பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள்!’’
கதை பத்தாம் நூற்றாண்டில் நிகழ்கிறது. ஆனால், அதன் பிறகான காலகட்டத்தில் நிகழ்ந்த இஸ்லாமிய படை எடுப்பு குறித்து கல்கி எவ்வாறு கொண்டு வருகிறார் பாருங்கள்! ஒரு ஞானி தீர்க்க தரிசனத்துடன் சொன்னாராம். உண்மை என்னவென்றால், வட நாட்டில் இஸ்லாமிய படை எடுப்பு நடந்த போது அங்கிருந்து விரட்டப்பட்ட பீகார் பார்ப்பனர்களுக்கு அடைக்கலம் தந்து தங்கள் ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகள் கொடுத்து வைத்துக் கொண்ட சோழ அரசர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகவே கல்கி இவ்வாறு எழுதியுள்ளார் என்கிறார் ஆய்வாளர் பொ.வேல்சாமி.
தற்கால தமிழ் சமூகத்தின் இலக்கிய மற்றும் வரலாற்று ஆய்வாளரான பொ.வேல்சாமி அவர்களோடு பேசிக் கொண்டு இருந்த போது, பொன்னியின் செல்வன் குறித்த பேச்சு வந்தது! அப்போது, அவர் கூறியவை எனக்கு சற்று அதிர்ச்சி ரகம்! ‘சமகால சமூக வரலாறு குறித்த புதிய கதவுகளை திறந்து விட்டன’ என்றும் சொல்லலாம்!
”கண்ணன், நான் சொல்ல வருவது என்னவென்றால், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மிக சுவாரஷ்யமான நாவல் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த எழுத்து நடையும், கற்பனை வளமும் நம்மை இனிமையான ஒரு வரலாற்று காலத்திற்கே சென்று வாழ்ந்த உணர்வை தரும். என்னுடைய கல்லூரி காலத்தில் நான் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு தஞ்சாவூர் கீழவாசல் சந்தையில் உள்ள என் கடையில் அமர்ந்தவாறு பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படிக்கத் தொடங்கினேன். அது மட்டும் தான் தெரியும். பின்னர் டீக்கடைக்காரர்களின் அடுப்பு பற்ற வைக்கும் சத்தமும், மீன் கடைக்காரர்களின் கூச்சலும் கேட்டுத்தான் ஆ ..,இதென்ன விடிந்துவிட்டதே.. என்ன நேரம்? எனப் பார்த்த போது, காலை ஐந்தரை மணியாகி இருந்ததை உணர்ந்தேன். கடையும் இரவு முழுக்க திறந்தபடி இருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.
அன்று இரவு முழுவதும் என்னை ஆக்கிரமித்து தன்வயப்படுத்திய கல்கியின் பொன்னியின் செல்வனை மீண்டும் 30 ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு படிக்க நேர்ந்த போது, அதே வேகம், ஈர்ப்பு ஆகியவற்றை உணர முடிந்தாலும், அன்று என்னை பிரமிக்க வைத்த பொன்னியின் செல்வன் இன்று அச்சத்துடனும், கவனத்துடனும் அணுக வேண்டிய நூல்பிரதியாக உணர முடிகிறது. தேனில் விஷம் கலந்து கொடுப்பது போல கதைப் போக்கின் ஊடே பார்ப்பனியம், இந்துத்துவ சொல்லாடல்கள், வைதீகத்திற்கு மாற்று மதங்களாக பார்க்கப்பட்ட பெளத்த, சமண மதங்களின் மீதான அக்கிரமான அவதூறுகள், பார்ப்பன பெருமைகள், சனாதன தர்மத்தின் பார்வைகள், ஆணாதிக்க மனோபாவம் ஆகிய அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரே அடியில் வாசகர் நெஞ்சில் இறக்கி விடுகிறார் கல்கி!
எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், இது வரையிலும் கல்கியை விமர்சிக்கும் பெரிய இலக்கியவாதிகள் கூட, ”கல்கியின் படைப்புகள் இலக்கிய தரத்தில் மிக சுமாரானவை, ஜனரஞ்சகம் மேலோங்கியவை” என்று தான் குற்றம் சாட்டினார்களே தவிர, இந்த கோணத்தில் சொல்லவே இல்லை.
கல்கியின் நூல்களை நாம் வியந்தும், மயங்கியும் வாசிப்பதைக் கடந்து ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என நான் கருதுகிறேன். ஜைன, பௌத்த மதங்கள் ஒரு காலத்தில் சாதிகளைக் கடந்து தமிழ் மக்களை ஒன்றாக இணைத்து வைத்த மதங்கள். அப்படி ஒரு இணைப்பு ஏற்பட்ட காலம்தான் தமிழகம் கலைகளிலும், வணிகத்திலும் தத்துவ சிந்தனைகளிலும் உயர்ந்தோங்கியிருந்தது என்று நாம் கருதுவதற்கான சான்றுகளும் உள்ளன. ஆனால், பின் வந்த காலங்களில் பக்தி இயக்கம் என்பது இந்த மக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவில்லை என்பதையும் தமிழக வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது. ஆகவே பெளத்த, சமண மத துறவிகளை மொட்டைத் தலை முரடர்களாகவும், அயோக்கியவர்களாகவும் சித்தரிக்கும் கல்கியின் நோக்கம் இந்துவத்தை உயர்த்திச் சொல்வதற்காக சொல்லப்பட்ட கற்பிதங்களே!
பொன்னியின் செல்வன் நூலை கல்வெட்டுகள்,செப்பு பட்டயங்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து எழுதியதாகத் தான் கல்கி சொல்கிறார்! மாமன்னர் இராசராச சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பது அக்கால கல்வெட்டுகளில் பிராமணர்கள் என்பதாக தெளிவாக கூறப்பட்டு உள்ளது.தொல்லியல் துறை ஆவணங்களிலும் இவை உள்ளன (ARE- 557ஃ1920). அவர்கள் பெயர் சோமன், ரவிதாச பஞ்சவேர் பிரமாதிராயன், இரு முடிசோழ பிரமாதிராயன், மலையனூரான், இவர்கள் தம் மக்கள் என கூறப்பட்டு உள்ளன! இந்த அனைவருமே ஒரே பிராமணகுலத்தை சேர்ந்தவர்கள்! பிரமாதிராயன் என்பது அந்த காலத்தில் சோழர் படைப்பிரிவில் இருந்த பிராமணத் தளபதிகளுக்கான பட்டமாகும்.
அப்படி இருக்க, ‘ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் பாண்டிய நாட்டில் இருந்து வந்த மறவர்கள்’ என்பதாக கூசாமல் பொய்யாகச் சித்தரித்து கல்கி எழுதி இருப்பது நியாயமல்ல. உண்மையான கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்றாலும், அவரது சுயசாதி அபிமானம் அந்த உண்மையை பல நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் கூட சொல்ல இடம் தரவில்லை.
இத்தனைக்கும் அன்றைய மனு நீதிப்படி கொலை செய்த பார்ப்பனர்களை கொல்ல முடியாது என்பதால், மாமன்னர் ராஜராஜன் இவர்களின் சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்து நாட்டைவிட்டு வெளியேற்றுவதாகத் தான் வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் எழுதியுள்ளார்.
Also read
பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே கல்வெட்டுகளை ஆராய்ந்தவர்கள் தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்று ஆய்வாளருமான சுப்பராயலுவும், ஜப்பானிய கல்வெட்டு தமிழ் அறிஞரும், ஆய்வாளருமான நொபோரு கரஷிமாவும்! இவர்களின் நூல்களை படித்து தெளிந்த பிறகு தான் கல்கி எவ்வளவு மோசடியாக வரலாற்றை சித்தரித்து உள்ளார் என்று நான் புரிந்து கொண்டேன்’’ என்றார் பொ.வேல்சாமி!
ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்; கல்கியின் பொன்னியின் செல்வன் சுவையான வரலாற்று புதினம் தான்! ஆனால், அதில் புதைந்துள்ள நோக்கங்கள் ஆபத்தானவையாகும்! மணிரத்தினமும், ஜெயமோகனும் திரையில் என்ன செய்துள்ளார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.
சாவித்திரி கண்ணன்
Excellent article. We need to break the stronghold of these Kalki paithiyangal and spread the true historical findings
வரலாற்று உண்மைகளை தெளிவாக எடுத்து காட்ட வேண்டியது ஒரு அறம் மிக்க ஆசிரியருக்கு உள்ள பத்திரிகை தர்மம் தான். ஆனாலும் கல்வி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில் மூன்றாம் முறையாக படித்த பிறகும் அவருடைய தமிழ் நடை காதுகளுக்கும், மனதுக்கும் மிகவும் இனிமையாக, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அது மற்றவற்றை வெளிகாட்டவில்லை என்று தோன்றுகிறது. நன்றி வணக்கம்.
ஐயா வணக்கம்.
உங்களின் பொருள் பொதிந்த பதிவு எத்தனை தமிழர்களின் கண்களை திறக்கும்?
தமிழனின் கலாச்சார அழிவை துவக்கிவைத்தவர்கள் வடநாட்டிலிருந்து வந்த பல்லவர்களும்,அதைத்தொடர்ந்து வந்த சோழ அரசர்களும் தான்.
சமஸ்கிருதம்,பிராமினிஸம் இரண்டையும் தங்கு தடையின்றி தமிழகத்தில் ஊடாட விட்டவர்கள் இவர்களே.
இவர்கள் காலத்தில்தான் .ஹிந்து கோயில்கள் வந்தன.
கோயிலை கட்டியவர்கள்,சாமி சிலையை செயுதவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கி வைத்துவிட்டு கோவிலுக்கு ஒரு சொட்டு வியர்வையையும் விடாத பிராமணர்களை கருவறையில் தொழில்செய்ய அனுமதித்தது இந்த பல்லவனும்,சோழனும்தான்.
பிராமணர்களுக்கு பதவி,பட்டையம், ஊர் தானங்களை அளித்து ஊக்கப்படுத்திக்கொண்டு தனி சேரி அமைத்து தீண்டாமையை செம்மையாக வளர்த்தவர்கள் இவர்களே.
இந்த கோயில்கள்தான் ஜாதிய அடிமைத்தளையை வலுபடுத்திய கேவலங்கள்.
வரலாற்று உண்மைகளை தெளிவாக எடுத்து காட்ட வேண்டியது ஒரு அறம் மிக்க ஆசிரியருக்கு உள்ள பத்திரிகை தர்மம் தான். ஆனாலும் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில் மூன்றாம் முறையாக படித்த பிறகும் அவருடைய தமிழ் நடை காதுகளுக்கும், மனதுக்கும் மிகவும் இனிமையாக, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அது மற்றவற்றை வெளிகாட்டவில்லை என்று தோன்றுகிறது. நன்றி வணக்கம்.
பொதுவாகவே தமிழ் மன்னர்கள் பார்ப்பனர்களின் அடிவருடிகளாக இருந்துள்ளனர் என்பதற்கு பக்தி இலக்கியங்களும் இங்கு எழுப்பப்பட்ட பிரமாண்ட கோயில்களுமே சாட்சி. பிராமனர்களின் சுகபோக வாழ்க்கைக்கு கோயில் உரிமைகளையும் நில தானங்களையும் தாராளமாக வழங்கியுள்ளனர். எடுத்துக்காட்டுக்கு சிதம்பரம நடராஜர் கோயில் ஒன்றே போதுமே!
ஆட்சியாளர்கள் பதவிக்காக தனது உறவுகளை கொலை செய்வது என்பது காலம் காலமாக இருந்து கொண்டு இருக்கிறது.
. தேச தந்தை காந்தியின் படுகொலையில் ஈடுபட்ட உயர் சாதி சித்பவ பார்ப்பனர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது.
ஆனால், ஆதித்த கரிகாலன் கொலையில் ஈடுபட்ட பிரம்மாதிராஜா பார்ப்பனர்களுக்கு என்ன நோக்கம் இருந்திருக்கும். பாண்டிய மன்னர் வீரபாண்டியனின் கொலைக்கு (revenge) பழிக்கு பழி என்று இதனை எடுத்து கொள்ள முடியாது.ஆதித்த கரிகாலனின் செயலில் ஏதோ ஒன்று பார்ப்பனர்களை பாதித்திருக்க வேண்டும்.அது மிக பாரிய விசயமாக இருந்திருக்க வேண்டும்.இதன் காரணமாக தான் பார்ப்பனர்கள் ஆதித்த கரிகாலனை கொலை செய்ய நேரடியாக தூண்டி இருக்கிறது. இதை வேண்டுமென்றே
கல்கி,நீலகண்ட சாஸ்திரி,kk பிள்ளை போன்றவர்கள் மறைத்தார்கள்,திரித்தார்கள். தற்பொழுது;
மணித்தினம் இந்த ரகசியத்தை
மறைப்பாரா?திரிப்பாரா? அல்லது ஒரெடியாக குழி தோண்டி புதைக்கப்பாரா?
மட்டுமல்லாமல் குந்தவை என்னும் கதாபாத்திரம் இவள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தையில் தழுவியதாக குறிப்பு இருக்கிறது.அதையும் கல்கி மறைத்தார். ஆதித்த கரிகாலன் பௌத்த மதத்தில் ஈடுபாடு கட்டினான்,இதையும் கல்கி மரைத்தார்.
இறுதியாக ஆசிரியருக்கு இந்தியாவில் இஸ்லாம் கி.பி. 628 இல் வந்து விட்டது.அதே சமயம் வட இந்தியாவில் கி.பி.711 முஹம்மது பின் காசிம் என்பாரின் தலைமையில் படை சிந்துவை இன்றைய பாகிஸ்தான் வென்றது என்பது வரலாறு.எனவே ராஜராஜன் காலத்தில் இஸ்லாயர்கள் சோழர்கள்,பாண்டியர்கள் படையில் இருந்திருக்கிறார்கள்.
இன்றைக்கும் திருச்சியில் அதற்கான ஆதாரமாக திகழ்கிறது நத்தர் ஷா( வலி)
அடகஷ்தாலம்.இவரின் மூலம் தான் குந்தவை இஸ்லாத்தை ஏற்றார்.
PothigaiVasanthan
குந்துவை இஸ்லாத்தை ஏற்றதாக ஒரு குறிப்பு இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள் அந்த குறிப்பு கிடைக்குமா?
பொன்னியின் செல்வன் இன்றுவரை படிப்பவரின் மனதில் முழுமையாக ஆட்கொள்கின்றது. கல்கியின் எழுத்து மக்களை கட்டிபோடும் ஆற்றல் கொண்டது. அதற்கு அடிப்படை தமிழர் வரலாறு. கதைக்களம் தமிழ்நாடு. கதைமாந்தர் தமிழர் என்பதால் நம் மனது அதனோடு ஒன்றிவிடுகின்றது.
திரைப்பட வடிவம் பெற்று மேலும் மக்களின் மனதில் இடம் பிடிப்பது தவிர்க்க முடியாதது.
விமர்சனம் வரவேற்கத்தக்கது.
ஆனால் படம் தமிழரிடம் வரலாற்று உணர்ச்சியை மேலோங்கி எழ வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
நீலகண்ட சாஸ்திரின் ஆய்வு ஒருபக்கம் சார்புடையது இவரின் ஆய்வுதான் சோழருக்கும் பார்பனருக்கும் உள்ள நெருக்கம் சிறப்பானது என பதிவு செய்துள்ளது. இதனைக் கொண்டுத்தான் தமிழருக்கு எதிராக நஞ்சை வாந்தி எடுத்து வருகின்றனர்.
சுப்பாராயலு, நொருபுமா, மே.தூ.இராச்குமார் போன்றோர் தமிழர் வரலாற்றின் மீது பொ. வேல்சாமி போன்ற எண்ணற்றோர் பூசிய கரியை துடைத்து எறிந்துவிட்டனர்.
இதுகாறும் திராவிட பேச்சாளராலும் மார்க்சிய ஆய்வாளராக அதுவும் நேர்மையாளராக தம்மைதாமே விளம்பரடுத்தி தமிழர்.வரலாற்றை திரித்து பதிவு செய்துவந்ததை அண்மையில் கிடைக்கும் அகழ்வாய்வு சான்றுகளால் தவிடுபொடி ஆக்கிவிட்டது.
ஆதித்தன் கொலை செய்த ஐந்து பார்ப்னரை நாடு கடத்தினான் இராசராசன் என்பது வரலாற்று திரிபு. அவன் ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது அந்த ஐவரும் சோழ நாட்டைவிட்டு ஓடிவிட்டனர். அந்த ஐவர் குடும்பத்தை சொத்துகளைக் கையகப்படுத்தி கட்டியிருக்கும் துணியோடு வெளியேற்றினார் இராசராசன் என்று கல்வெட்டு கூறுகின்றது. அது அரசாணை என்பது உறுதி. இதில் மனுதருமம் என்பது குறுக்குசால் ஓட்டுவது . காந்தளூர் சாலை போர் இந்த ஐந்துபேரால் வந்தது .சேரர் இந்த ஐந்துபேரை ஒப்படைக்க மறுத்ததால் அந்த போர். அதன்.பிறகு சேர அரசே முடிவுக்கு வந்து விட்டது.
அடைக்கலம் கேட்டு வருபவருக்கு ஆதரிப்பதும் அதனை பெருமையாக கல்வெட்டு எடுப்பது என்பது இயல்பானது. சுந்திர இந்தியாவில் ஆர்.எசு.எசு. தடை, மிசா சட்டக்காலத்தில் சங்பரிவாரங்களின் ஊழியர் பலர் தஞ்சமடைந்தது தமிழ்நாட்டில்தான். அதனால் தமிழ்நாட்டை அன்று ஆட்சி செய்தவர் ஆர்.எசு.எசு. ஆதரித்தனர் என பொருள் கொள்ளலாமா
பொன்னியின் செல்வனில் பொதிந்துள்ள உண்மைகள்!
-சாவித்திரி கண்ணன் – அற்புதமான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். பொன்னியின் செல்வன் படித்தவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். இந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களும் நிறைய விபரங்கள் வெளிக்கொணர்கின்றன. நண்பர்கள் பின்னூட்டங்களையும் தவறாது படிக்க வேண்டுகிறேன். சிறப்பான பதிவு. பாராட்டுகள் சார் திரு சாவித்திரி கண்ணன் – திரு பொ. வேல்சாமி
பார்ப்பனிய விஷக்கிருமிகளின் சூழ்ச்சியே பொன்னியின் செல்வன், ஜெயமோகன் இந்துத்துவா ஆதரவு விஷக்கிருமி தலையிடும் போதே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் பெரியார் சொல்வது உண்மையாகி விட்டது சூழ்ச்சி, தந்திரம், விஷமத்தனம் தான் பார்ப்பனர்களின் பிறவி குணம்
I may need your help. I’ve been doing research on gate io recently, and I’ve tried a lot of different things. Later, I read your article, and I think your way of writing has given me some innovative ideas, thank you very much.