எங்களை பற்றி
செய்திகளை சொல்வதற்கும்,எழுதுவதற்கும் ஏராளமான ஊடகங்கள் உள்ளன!
நாள்தோறும் வெளிவரும் அனைத்து செய்திகளையும் நாங்கள் அப்படியே உடனுக்குடன் தரப்போவதில்லை.
ஆனால்,வெளிவரக் கூடிய செய்திகளில் எது சமூகதின் நலன் சார்ந்து கூடுதல் அக்கரை சார்ந்து பார்க்க வேண்டியதோ அல்லது அந்த செய்திகளை எதை கவனப்படுத்தாமல் வெகுஜன ஊடகங்கள் அலட்சியமாக கடந்துள்ளதோ, அவற்றை எடுத்துக் காட்டி முழு பரிமாணத்துடன் தர வேண்டும் என்பதே நோக்கம்.
பரபரப்பிற்காகவோ,கவனத்தை தேவையற்ற விஷயங்களில் சிதறடிப்பதற்கோ ஊடகத்தை பயன்படுத்துவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை!
வெகுஜன ஊடகங்களில் பல நேரங்களில் உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே சொல்லப்படுகிறது. மறுபக்கம் மறைக்கப்படுகிறது. ஒரு சார்பாக செய்தியை தருவதன் மூலம் வாசகர்களை தவறான புரிதலுக்கு கொண்டு செல்லும் அணுகுமுறை ஆபத்தானது.ஆனால்,இன்று அதைத் தான் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் செய்கின்றன! இது அறமாகாது!
உண்மையில் இன்று கவனம் பெற வேண்டிய பல முக்கிய மக்கள் நலன் சார்ந்த செய்திகள் மிக மேலோட்டமாக சொல்லப்படுகின்றன,அல்லது அலட்சியப்படுத்தப்படுகின்றன.இதனால் சமூக,அரசியல் விழிப்புணர்வு மிகவும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை அறம் சார்ந்த பார்வையில் அணுகி,வெளிப்படுத்தும் எளிய நோக்கம் தவிர,வேறெதையும் நாங்கள் பிரமாதமாகச் செய்யப் போகிறோம் என நான் உத்திரவாதம் தரப் போவதில்லை.
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர் – ‘அறம்’
[email protected]