தேசபக்தி என்பதை வியாபாரமாக, அரசியல் அதிகாரமாக, ஏன் போதையாகவும் கூட பலர் பயன்படுத்துகின்றனர்! இதையெல்லாம் பார்த்து அலுத்த சூழலில் அதை இயல்பான கண்ணோட்டத்துடன், நம்பகமான தன்மையில் சித்தரித்துள்ள வகையில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது சர்தார் உதம்.பொய்யான, பகட்டுத்தனமான தேசபக்தியாளர்களையும், அப்படியான கமர்ஷியல் படங்களையும் கண்டு சலிப்படைந்துள்ள நமக்கு இந்தப் படம் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இன்று நினைத்தாலும் மனதை உலுக்கிப் போடக்கூடிய ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றுவிட சபதம் ஏற்று அதை பல வருட முயற்சிக்கு ...

ப.வ.தமிழரசன், சூலூர், கோயம்புத்தூர் ஒரு தலைசிறந்த பத்திரிக்கையளாராக வர என்ன செய்ய வேண்டும்? மானுட நேசமும், அறச் சீற்றமும், உண்மையைக் கண்டறியும் வரை சலிப்பில்லாத ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும். கே.எஸ்.கவின், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஶ்ரீபெரும்புதூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பட மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த நூறுகோடி இலக்கை விரைவில் எட்டி இருக்கலாம்தானே? இந்த நூறு கோடி இலக்கை யாருக்கு சாதகமாக எட்ட நிர்ணயித்தார்களோ.., அதன்படி மட்டுமே செயல்படுவார்கள்! கே.ராஜாராம், முகையூர், விழுப்புரம் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதே..?ஆனால், திருவிழாக்கள், அரசியல் ...

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு பல தடைகளைக் கடந்து நடக்கவுள்ளது. ஆனால், அதை நீட் தேர்வு பாணியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அணுகுகிறதா..? என்ற கேள்வியும், வேதனையும் தேர்வு எழுதும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது! தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. பல்வேறு தடைகளைக் கடந்து தற்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு ...

தேசிய கல்வி கொள்கை 2020  க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி  பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்‌.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கல்விக் கொள்கை  மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ...

சிறைச்சாலையின் வித்தியாசமான அனுபவங்களைச் சொல்லும் நூலே, ‘கூண்டின் நிறங்கள் – சிறையின் நினைவுகள்’! மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரான அருண்பெரைரா சிறைச்சாலையின் கொடூரங்களை அறிந்து கொள்ளவும், அதை வெளிப்படுத்தவுமான வாய்ப்பாகவும் சிறைவாழ்வை பயன்படுத்திக் கொண்டதே இந்த நூல்! விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொண்ட விதார்பாவில் சமூகப் பணிபுரிந்த அருண்பெரைராவை நக்சல் என கைது செய்து, வழக்கு, வழக்கு, மேலும் வழக்கு என பதினோரு வழக்குகளில் கைது செய்ததையும் பிணையில் வர முடியாமல் தடுத்து தொடர்ந்து சிறைப்படுத்தியதையும் சொல்கிறது இந்த நூல்! நாக்பூரில் ...

காசி மாணிக்கம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் ‘மோசடி செய்தவர்கள் உலகில் எங்கும் ஓடி ஒளிய முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாரே ‘ பிரதமர் மோடி? உலகில் எங்கு ஒளிந்தாலும் நடவடிக்கை எடுத்துவிடலாம் தான். பாஜகவிற்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனரே! ப.சரஸ்வதி, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ‘கரோனா மூன்றாவது அலை ஜனவரி,பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக’ சுகாதாரத்துறையினர் சொல்கிறார்களே? சுகாதாரத்துறை ஜோசியத்துறையாகிவிட்டதா? இதை திட்டமிட்டு பரப்புகிறார்களா..? அல்லது பரப்புபவர்களின் குரலாக ஒலிக்கிறார்களா? செந்தில், ஜாபகர்கான்பேட்டை, சென்னை எடப்பாடி உள்ளிட்ட அதிமுக முன்னாள் மாஜிக்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்களே..? ஆளுநர் ...

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி வந்த பிறகு திமுக அரசு சட்டம், ஒழுங்கில் தன்னை, அசகாய சூரனாக காட்டிக் கொள்ள அதிரடியாக மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை கைது செய்து, ”ரவுடிகளை ஒடுக்குகிறோம்” என்றது. சமீபத்தில் தூத்துக்குடியில் இளைஞர் துரைமுருகன் என்கெளண்டரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர்   முர்துஷா ஷேக் கொல்லப்பட்டுள்ளார். ”களத்தில் இறங்கி உண்மையைக் கண்டறிந்தால், காவல்துறையின் மீது சந்தேகம் வலுக்கிறது”  என்கிறது தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO).                    ...

ராஜமார்த்தாண்டன், புதுவண்ணாரப் பேட்டை, சென்னை அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் அறச்சீற்றமா? கண் துடைப்பா? 1996 திமுக ஆட்சியில்ரெய்டுக்குள்ளான முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ரெய்டு முடிந்த கையோடு கைது செய்யப்பட்டனர்!  அதிமுக ஆட்சியில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்ற அமைச்சர்களை கைது செய்து சிறையில் தள்ளினார் ஜெயலலிதா! தற்போது ரெய்டுக்கு முன்னும், பின்னும் தெனாவட்டாக பேசி வருகின்றனர் அதிமுக மாஜிக்கள்! முடிவை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன். தா. மணிகண்டன், ராஜபாளையம், விருதுநகர் சசிகலாவுக்கு சிறைக்கு சென்ற பொழுது இருந்த தைரியம் கூட இப்பொழுது ...

அறம் நிலைக்கச் செய்வதற்கான ஒரு துறையை இந்துத்துவ போட்டி அரசியலுக்கான கருவியாக்கப் பார்க்கிறதா திமுக அரசு..? அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்றால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்துக்கள் நிலை என்னாவது..? மத்திய அரசு நிர்பந்திக்கிறதா? மாநில அரசின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறதா..? அறநிலையத் துறை வரலாற்றில் இவரைப் போன்ற செயல் திறனுள்ள இன்னொருவரில்லை எனச் சொல்லத் தக்க வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், கடவுளை வெறுப்பவர்கள் என்று ...

இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்! உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர ...