விக்ரம் சேத்  எழுதிய ‘A Suitable Boy’ என்ற ஆங்கில நாவல் 1993 ஆம் ஆண்டில் வெளியானது! இதன் அடிப்படையில் பிபிசிக்காக  இந்தத் தொடர்  எடுக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடைபெறும் கதை.  நெட்பிளிக்சில்  இந்த ஆறு மணிநேர தொடரைக் காணலாம். கடந்த மாதம் வெளிவந்துள்ளது. ‘சலாம் பாம்பே’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கிய மீரா நாயர் ‘ A Suitable Boy’ என்ற பெயரிலேயே இந்தத் தொடரை பிபிசி 1 க்காக இயக்கியுள்ளார். ஆண்ட்ரூ டேவிஸ் கதையை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ...

தமிழக பாஜக வேல் யாத்திரை என்ற பெயரில் கையில் எடுத்திருக்கும் அரசியல் ஆயுதத்தை தமிழக திராவிடக் கட்சிகள் மிக நுட்பமாக எதிர் கொண்டு வருகின்றன! இந்த யாத்திரையை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும்,கொந்தளிக்கும் தடுக்கத் துடிக்கும் …, அது பாஜகவிற்கு பெரிய விளம்பரமாக அமையும். முருகனைக் கும்பிடவும்,வழிபடவும் மறுக்கப்பட்டோம் என்பதை சொல்லி மக்களிடம் அனுதாபம் தேடலாம் என நினைத்தனர். ஆனால், பாஜகவின் தந்திரத்தை புரிந்து கொண்ட அதிமுக,திமுக தலைமைகள் இது பற்றி பொருட்படுத்தியதாகவே காட்டிக் கொள்ளவில்லை! அதே சமயம் அரசு இதை நிர்வாக ரீதியாக அணுகியது.அனுமதி ...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மின்சார திருத்தச் சட்டத்தால் இனி மின்சார கட்டணங்கள் தாறுமாறாக உயரவுள்ளன! ’’அப்படி உயர்த்தும் போது மானியம் தருவோம் கவலப்படாதீர்கள்’ ’என்கிறது அரசு! இப்படித்தான் சமையல் எரிவாயு  விலை  உயர்த்தபட்ட போது அதற்கான  மானியத்தை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம் என்று சொல்லப்பட்டது. பிறகு  அப்படி செலுத்தி வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் ரூ.25 மட்டுமே! ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாம் தரும் பணம் ரூ.610.  இதே நிலை நாளை மின்கட்டண விவகாரத்திலும் ...

நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.காற்றை எப்படி நம் உடலுக்கு கையாள வேண்டும் என்பதை மட்டும் ஒருவர் உணர்ந்து கொண்டால், அவரால் உலகில் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளமுடியும் என்பது சித்தர்கள் வாக்கு! உங்கள் கண்களை மூடி நீங்கள் மூச்சை எவ்வாறு உள்ளுக்கிழுத்து வெளிவிடுகிறிர்கள் என்பதை ஆழ்ந்து பாருங்கள்! ஒவ்வொரு சுவாசத்தையும் அனுபவித்து உணர முடிந்தவர்களின் சித்தம் வெகு தெளிவாக இருக்கும்! மூச்சை சிறப்பாக ...

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் புதிதல்ல, எத்தனையோ முறை ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால்,அர்னாப் கைதான போது தான் பத்திரிகை சுதந்திரம் குறித்த அக்கரை  உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது! அடடா என்னாமா துடிச்சு போயிட்டாங்க. அர்னாபிற்கு நீதிமன்றம்  வெறும் 14 நாட்கள் தான் சிறை என தீர்ப்பளித்தது. அதுவும் ஜாமீன் வேண்டுமென்றால், கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றது. ஆனால், அர்னாப் சாதரணமானவரா? ’’விட்டேனா பார்’’ என உச்ச நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். உச்ச ...

துணிச்சலுக்கு பேர் போன பத்திரிகையாளர்! மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகப் பேசும் தைரியம் இவரது பலம்! சுற்றி வளைத்து நாசூக்காக சொல்வது என்பதெல்லாம் இல்லை. எதற்குமே நேர்பட சொல்லிவிடுவார். இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து தனக்கே உரிய அழுத்தமான பாணியில் அறம் இணைய இதழுக்கு சவுக்கு சங்கர் தந்த நேர்காணல். சசிகலா டிசம்பர் மாதத்திற்குள் விடுதலையானால் பிஜேபி உடன் சமாதானம் ஆகிட்டாங்க என்று அர்த்தம். திமுக  தோற்கிறது என்றால் அதற்கு  உதயநிதி ஸ்டாலினும் முக்கிய காரணம். வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு இல்லையென்றாலும் பரவாயில்லை ...

கமலா ஹாரிஸை எப்படி புரிந்து கொள்வது?   ”கருப்பினப் பெண்ணான என்னை இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்துள்ள அமெரிக்கா மக்கள் அனைவருக்கும் நன்றி” என்கிறார் கமலா ஹாரிஸ். “ஆப்பிரிக்க, ஆசிய அமெரிக்கப் பெண்ணொருவர் முதன் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்” என்கிறது ஊடகங்கள். இந்தியப் பெண்மணி துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் இந்தியா மகிழ்கிறது. தமிழ்ப்பெண் தேர்வு எனத் தமிழகம் கொண்டாடுகிறது. பிராமணப் பெண் அமெரிக்காத் துணை அதிபராகி விட்டார் எனத் தமிழக பிராமணர்கள் மகிழ்கிறார்கள். இனவெறி ஆணவத்தின் இருமுகங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட ட்ரம்பின் தோல்வியில் மனம் சோர்ந்த ...

இன்னும் கூட தன் தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் சட்ட போராட்டம் நடத்தப் போவதாக சொல்கிறார்…! அகில உலகமும் ஒரு உண்மையை ஒப்புக் கொண்ட போதும் அதை தான் மட்டும் ஏற்க முடியாது என்று டிரம்ப் பிடிவாதம் காட்டுகிறார் என்றால், அது ஏதோ அவர் இப்போது தான் அப்படி சொல்வதாக நினைத்து விடக் கூடாது! அவருடைய கடந்த கால வரலாறுகளை பார்த்தால், அது, ’தான் திருடன் பிறரை நம்பான் கதை’யாகத் தான் இருக்கிறது! ’’பிராடுத்தனம் என்பது ரொம்ப,ரொம்ப பொதுவானது, சகஜமானது தானே..’’ என்பது தான் ...

பீகார் தேர்தல் பல படிப்பினைகளை தந்துள்ளன! இந்த படிப்பினைகளை தமிழக அரசியலுக்கும் பொருத்தி பார்க்கமுடியும்! ஆர்.ஜே.டியும், காங்கிரஸும் தாங்களே அதிக தொகுதிகளின் நின்றது, சிறிய கட்சிகளை அரவணைக்க தவறியது மட்டுமின்றி அவர்களை எதிர்முகாமுக்கு தள்ளியது, அடையாள அரசியல் குறித்த பாஜக ஏற்படுத்தியுள்ள பிம்பத்திற்கு பயந்தது…ஒவைசியை மதிப்பிடத் தவறியது…இப்படி பலவற்றை அலசலாம்…! அதே சமயம் இடதுசாரிகளின் எழுச்சியானது ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது. அதில் முக்கியமானது கூட்டாளிகளை சரியாக அடையாளம் காணத் தவறுவது! சென்ற முறை ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தூள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் The trail of Chicago 7 (சிகாகோ விசாரணை) என்ற ஆங்கிலப் படம் வெளிவந்ததானது, ஒரு வகையில் வெள்ளை நிறவெறி ஆதரவாளர்களின் முகத்திரையை கிழிக்க உதவியதன் மூலம் ஜோபிடன் வெற்றிக்கு ஒரளவு உதவியது என்றும் சொல்லாம்! 1968 ஆம் ஆண்டு  சிகாகோ நகரில் நடத்த கலவரத்தைத் தொடர்ந்து  நடந்த நீதிமன்ற விசாரணைதான், இந்தப் படம். ஆரோன் சொர்கின்(Aron Sorkin) என்பவர் திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார். இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளது.நெட் பிளிக்சில் ...