திமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்த செய்திகள் மக்களிடம் மட்டுமல்ல, அந்த கட்சிக்குள் இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் குழம்ப வைத்துக் கொண்டுள்ளன! தேர்தல் கூட்டணிக்கு கொள்கை ரீதியிலான இணக்கமோ, புரிதலோ அவசியமில்லை சதவிகித கணக்குகள் போதும் என்ற குறுகிய கால ஆதாய அரசியல் கூட்டணிக்குள் பொருந்தாமல் சேரும் கட்சிகளின் அடையாளத்தை காலப்போக்கில் காணாமலடித்துவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்லமுடியும்! திமுகவுக்கு தன் சுயபலம் குறித்த சந்தேகங்கள் மேலெழத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது! கொள்கை சார்ந்த பிடிமானங்கள் தளர்ந்து, சந்தர்ப்பவாத அரசியலால் ஈர்க்கப்படும் யாருக்குமே இந்த சந்தேகம் ...

கடந்த சில நாட்களாக அதிமுக அரசின் சாதனைகள் விளம்பரங்கள் தொடர்ச்சியாக சன் தொலைகாட்சியில் வந்து கொண்டிருக்கின்றது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையுமேற்படுத்தியுள்ளது! சன் தொலைகாட்சி தான் தமிழக மக்கள் அதிகமாக பார்க்கும் தொலைகாட்சி! பூமாலை என்ற வீடியோ மேகசீனை நடத்தி மிகுந்த நட்டப்பட்டிருந்த தன் பிள்ளைகளை கரைசேர்க்க முரசொலிமாறன் தவித்தார்.அப்போது, மேக்னம் டாட்டியா என்ற இந்திய தொழில் அதிபரிடம் ரஷ்ய சேட்டிலைட் ஒன்றின் காரிஜாண்டர் டிரான்ஸ்பார்மர் இருந்தது! அதை திமுகவின் எம்.பி என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி வாங்கித் தந்தார் முரசொலிமாறன். சேனல் ஆரம்பிக்க கருணாநிதியிடம் ...

2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 96 லட்சம் உயிர்களை புற்று நோய் களவாடிச் சென்றுள்ளது! புற்று நோயை ஒப்பிடும் போது கொரானா எல்லாம் கால்தூசாகும்! இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ’கேன்சர்’ எனப்படும் புற்று நோய்க்கு ஆளானவர்கள் 13,92,179 பேர்! இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் புற்று நோய் தாக்கத்தால் எட்டு லட்சம் பேர் பிறக்கவுள்ள 2021 ஆம் ஆண்டை பார்க்க வாய்ப்பில்லாதவர்களாக சென்று சேர்ந்துவிட்டனர்! தமிழகத்தில் மட்டுமே இந்த ஆண்டு புற்று நோய்க்கு ஆளானவர்கள் 78,641. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை ...

நம்மிடையே வாழ்ந்த நவீன காந்தியாகத் தான் நான் அவரை உணர்ந்தேன்! சுய நலம் துறத்தல், வேறுபாடுகளின்றி அனைவரையும் அரவணைத்தல், இடையறாத மக்கள் சேவை, எளிமை, மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்த நேர்மை, போராடுவதில் காட்டிய நெஞ்சுரம், அன்பை பொழிவதில் வெளிப்படுத்திய தாய்மை குணம் என பன்முகத் தன்மை கொண்டவர் நம்மாழ்வார்! தான் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை தன் எண்ணங்களால், செயல்களால் உருவாக்கிச் சென்றவர் நம்மாழ்வார்! 1969 தொடங்கி அவர் களப் பணிகளுக்கு தன்னை ஒப்புவித்துக் கொண்டவர் என்றாலும், 1990 களில் சிறு விவசாயப் ...

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும்,; மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் மாநில அதிமுக அரசு மக்கள், விவசாயிகள் விரோதசட்டங்களை ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் விவசாயிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பொதுமக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும்  மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியிலே நடைப்பெரும்  “டெல்லிசலோ”(Delhi Chalo ) என்கின்ற விவசாயிகளின் மாபெரும் ...

ரஜினிகாந்த் நிம்மதியா, ஆரோக்கியமாக வாழட்டும்! அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார்! இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்! குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் ...

விவசாயப் போராட்டத்திற்கான முழுமுதற் காரணிகள் அம்பானியும், அதானியும் தான்! அவர்களால் வடிவமைக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் தாம் பாராளுமன்றத்தில் அராஜகமாக பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது! அம்பானிக்கும், அதானிக்கும் சேவை செய்வதற்காகவே பாஜக அரசு தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது தான் என்றாலும், இந்த விவசாய திட்ட அமலாக்கத்தின் மூலம் அது சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுவிட்டது! அது தான் விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது, மாநில அரசாங்கங்களின் A.P.M.C என்ற விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை ...

உலகத்தின் பழமையான தொழில் விவசாயம். தற்போது விவசாயிகள் புதுதில்லியை முற்றுகை இட்டு, தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்; ஆனால் அரசு வழக்கறிஞர் ’முடியாது’ என்கிறார். உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதே நேரம் போராட்டத்திற்கு தடை விதிக்கவும் இல்லை. ஏனெனில் அவர்களால் ...

பாஜகவின் சடு,குடு ஆட்டம் ஆரமித்துவிட்டது! அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை இன்னும் பாஜக ஏற்கவில்லை! இதை பாஜகவின் தமிழக தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் தொடங்கி புதிதாக கட்சிக்கு வந்த குஷ்பு வரை அனைவரும் மீண்டும், மீண்டும்  கூலாகச் சொல்லி வருகிறார்கள்! ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாத அதிமுக, தன்னை பெரிய பலமுள்ள கட்சியாக கருத்த முடியாது. நாங்கள் தான் உங்கள் ஊழல்களை மன்னித்து, தண்டிக்காமல் நான்காண்டுகளாக காப்பாற்றி வருகிறோம். ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற காரணத்தால், நீங்கள் கூட்டணியை கலந்து பேசாமல் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் ...

‘’இந்தாங்க..ரஜினிகாந்த் வந்தப்ப கொடுத்துட்டு போனாரு’’ ன்னு என் கையில ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்தார் துக்ளக் தலைமை துணை ஆசிரியர் மதலை! அதை வாங்கி பார்த்தப்ப சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த ’பாபா’படப் பாடல்களின் ஆடியோ கேசட் என புரிய வந்தது! ‘’ரஜினிகாந்த் குடுத்தாரா..?’’ என்றேன் புருவத்தை உயர்த்தியபடி! ‘’ஆமா,அவர் தான் நம்ம சாரை பார்க்க வந்த போது இங்கே நம்ம இடத்திற்கும் வந்து ஒவ்வொருவராக தேடி வந்து இதை கொடுத்துட்டு, இன்னும் யாராவது விடுபட்டு இருக்காங்களான்னு கேட்டு, உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போனாரு..’’ வாங்கி ...