இயற்கை வேளாண் விஞ்ஞானி, சூழலியல் போராளி, இயற்கை விவசாயத்தில் 30 ஆண்டுகால முன்னோடி,இயற்கை விவசாயப் பயிற்சியாளர்,எழுத்தாளர்,இதழாளர்.. என பன்முகம் கொண்டவர் பாமயன்!. தமிழகத்தின் தற்போதை விவசாயச் சூழல்கள் குறித்தும், சமீபத்திய மூன்று  வேளாண்மைச் சட்டங்கள் குறித்தும்  பீட்டர்துரைராஜுக்கு அவர் தந்த நேர்காணல். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய  வேளாண்மைச் சட்டங்கள் குறித்து்?  மத்திய பாஜக அரசானது, அதிர்ச்சிகரமான வகையில், #  உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) #  விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தம், # பண்ணைச் சேவை ...

ஜெயலலிதா இறப்பு தமிழக மக்களுக்கு இன்னும் ஒரு அவிழ்க்கப்படாத மர்மமாகவே தொடர்கிறது! ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்ற ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ ஏற்படுத்தியுள்ள தடையைக் கூட அகற்றாமல், ஒன்றரை ஆண்டுகளாக அலட்சியம் செய்கிறார்கள்.விசாரணையே நடக்காமல் பலகோடிகள் ஆணையத்திற்கும்,வழக்கிற்குமாக விரயமாகிக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன…? ’’அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்களே ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவருவதை விரும்பவில்லை…’’ என்ற குற்றச்சாட்டையும் ...

தமிழகம் ஊழலில் உச்சபட்ச சாதனைகளைப் படைத்துக் கொண்டுள்ளது என்பதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகளே அத்தாட்சியாகும்! ஏற்கனவே இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து உள்ளன. தலைமைப் பொறியாளர் நியமனம் தொடங்கி,அடிமட்டத் துப்புறவுப் பணியாளர் நியமனம் வரை எல்லாவற்றிலும்,கையூட்டு,லஞ்சம் என ஊழலில் ஊறித் திளைக்கும் வேலுமணிக்கு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் இவர் தலையில் நன்றாகக் கொட்டு வைத்துள்ளது! உள்ளாட்சி அமைப்புகளை உதாசீனப்படுத்தி,உள்ளாட்சிகளின் தேவைகளை அறியாமலும், உரிமைகளை மதிக்காமலும்,பணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளாட்சித் துறை டெண்டர் விட்ட 2,369 கோடி அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பஞ்சாயத்து ராஜ் ...

சித்தர்களின் வழியே பெற்ற ஆழமான அறிவு! எதிலும் தெளிவான உறுதியான பார்வை, நடைமுறை சார்ந்த தீர்வு…ஆகிய சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்றவர் மருத்துவர் வேலாயுதம். கொரோனா  வைரஸை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 400 பேரை கொரோனவிலிருந்து குணப்படுத்தியுள்ளார். நோயாளிகளைக் காக்கும் களப்பணியில் தன் பங்கையும் தான் சார்ந்துள்ள சித்தமருத்துவத்தின் பங்களிப்பையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் . “அறம்” இணையதள இதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து… கொரோனா வைரஸ் நோய்க்கும் உரிய மருந்து எது என  சித்தர்களின் பாடல்களை ...

தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்,தன் அதிகாரத்தை செல்லுபடியாக்கிக் கொள்ளவும்  தான் வழிகாட்டுக் குழுவைக் கேட்டார் ஒ.பி.எஸ். அது தற்போது அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ளது. எடப்பாடிக்கும் இது தான் நிலைமை! ஐந்து பேரை தேர்ந்தெடுத்ததன் மூலம் அனைத்து ஆதரவாளர்களையும் தன்னளவில் எதிரியாக்கிக் கொண்டார் பன்னீர். அவரால் கைவிடப்பட்டவர்கள் அல்லது அவரை கைகழுவும் நிலைக்கு தங்களை தள்ளியதாக உணருபவர்களான அவரை நம்பி வந்த 11 பேரில் ஒருவருக்கு கூட அந்தக் குழுவில் இடமில்லை. அவருக்கு அணுக்கமாக இருந்து பல்வேறு தருணங்களில் அவரை பாதுகாத்த கே.பி.முனுசாமிக்கு இடமில்லை.டெல்லியில் ...

’’ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கிறீங்க…’’ ’’ஐயோ…அவன் காட்டுமிரண்டித்தனமாக நடந்துக்கிறவனாச்சே…’’ ’’நீங்க படிச்சவரு தான…பிறகு ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக ’பிகேவ்’ பண்றீங்க…’’ இதெல்லாமே… காட்டுவாசிகளைப் பற்றிய அறியாமையில் அடிக்கடி நம்மிடையே வெளிப்படும் வார்த்தைகள்…! சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளர் கூட அவரது கட்டுரையில் அடிக்கடி காட்டுமிராண்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். இது அவருக்குப் பிடித்த சொல்லாக இருக்கலாம். தவறு செய்பவர்களைப் பார்த்து ஏன் காட்டுமிராண்டி மாதிரி செய்கிறாய் என்று குறிப்பிடும் சொல்லாக இவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். காட்டு மிராண்டி என்பது மிக ஆபத்தான சொல்லா? ...

காந்தி ஜெயந்தியை வெறும் சடங்காக கடந்து போகிறது சமூகம்! ஒரு நாள் அரசு விடுமுறை அவ்வளவே! ஆனால், காந்தியப் பற்றாளர்களுக்கு அந்த நாள் மிக முக்கியமானதாகும்..உலகம் முழுவதும்  “உலக அமைதி நாளாக”  காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள் கொண்டாடப்பட்டது. ’இந்த நாளின்போது நீங்கள் என்ன செய்தீர்கள்’’ என்ற கேள்வியை காந்தியப் பற்றாளர்கள் ஒரு சிலரிடம் கேட்டோம். ஆசைத்தம்பி, பத்திரிகையாளர் : (காந்தி பிறந்த 150ஆவது ஆண்டு விழாவின் போது வாரம்தோறும் தமிழ் இந்து நாளிதழில் தொடர்ந்து காந்தி குறித்த கட்டுரைகளை எழுதியவர்.’என்றும் காந்தி’ ...

தினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியரும்,பல இதழியல் வரலாற்று நூல்களின் ஆசிரியருமான அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி தமிழ் இதழியல்துறைக்கும்,தமிழ் வாசகர்பரப்புக்கும் பேரிழப்பாகும். அ.மா.சாமி அவர்கள் வேறு யாரும் சிந்தித்துப் பார்த்திராத வகையில் இந்திய மற்றும் தமிழ் இதழியல்வரலாற்றை ஆவணங்களுடன் எழுதி பதிவு செய்தவர். தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி திராவிட இயக்க இதழ்கள் நாம் தமிழர் இயக்கம் வரலாறு படைத்த தினத்தந்தி திருக்குறள் செம்பதிப்பு தமிழ் இதழ்கள் வரலாறு இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர் இந்து ...

மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிகள் தருவதன் மூலம் தமிழகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளன. காவல் நிலையங்களிலும், மாவட்ட ஆட்சியரிடமும் பெண்களின் புகார் மனுக்கள் குவிகின்றன…! பல இடங்களில் போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன. கொரோனா கொடுங்காலம் வாழ்வாதாரத்தைப்  பறித்துவிட்டதால்  ஏழை எளிய மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். கடன் என்ற சிலந்திவலை அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கிறது இதனால் கலங்கிப்போன சிலர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கந்து வட்டி போன்ற சட்டத்துக்குப் புறம்பானவற்றில் மாட்டிக் ...

என்ன தகுதியில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் பழனிச்சாமி? அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை சாதாரண அளவில் கூட கவனம் பெற்றவரல்ல! தலைவர் என்பது இருக்கட்டும், சிறந்த தொண்டராகக் கூட ஆரம்ப காலம் தொட்டு அறியப்பட்டவரில்லையே…! முதலமைச்சராகக் கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்யப் பயன்படுத்தவில்லையே! எந்த ஒரு விஷயத்திலுமே இவரது நிர்வாகத் திறமை வெளிப்படவில்லை என்பது மட்டுமல்ல, எதிலும்,குழப்பம்,குளறுபடி என ஆட்சி செய்தவர் தான் பழனிச்சாமி. இவர் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஒவ்வொரு துறையிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. எதிலும் கமிஷன்,எதற்கெடுத்தாலும் கமிஷன் என ’கரப்ஷன்’ ராஜ்யத்தில் கைதேர்ந்தவர் ...