கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து, மக்களை குணப்படுத்தியதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும்! தமிழகத்தில் இது வரை 7,22,000 க்கு மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டு,அதில் 6,88,000 பேர் குணமடைந்துள்ளனர் என்றால்,அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் தான் குணமடைந்துள்ளனர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்! வெறும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் கடும் உழைப்பை ஈந்ததில் தான் இது சாத்தியப்பட்டது. இதில் அரசு மருத்துவர்களோடு பட்ட மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து பாடுபட்டனர். நோயாளிகளை குணப்படுத்தும் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களும் கொரனாவால் தாக்கப்பட்டனர். ...

மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத செயல்கள் நிச்சயம் ஒடுக்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், பாஜக அரசு கொண்டு வந்துள்ள  உபா சட்டத்திருத்தமும்,அதைத் தொடர்ந்த கைதுகளும்,சிறை வைப்புகளும் இந்த சட்டத்தின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் பற்றி உரையாற்றுகையில், ’’ தீவிரவாதங்கள் துப்பாக்கியால் உருவாவதில்லை.  அவற்றைத்  தூண்டக்கூடிய செய்திகள்,எழுத்துகள், இலக்கியங்கள்… ஆகியவற்றால் உருவாகிறது.          ஆகவே, அத்தகைய தூண்டல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவே உபாவில் சட்டத்  திருத்தம் கொண்டு  வந்துள்ளோம் என்றார். அமித்ஷா ...

’’அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அளவாவது ஒரு வாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைத்ததே’’ என ஆறுதல் பெற முடியாத அளவுக்கு இதில் பல சந்தேகங்கள்,குழப்பங்கள்… நிறைந்துள்ளன! மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு மிகவும் அபாரமானது! இதில் வெற்றி பெற்றது சமூக நீதியா? சாதுரியமான பாஜகவின் அணுகுமுறையா? யாருமே எதிர்பார்த்திராத வகையில் தமிழக அரசு நேற்று ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல்  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவிகிதத்தை அவசரச் சட்டம் கொண்டு வந்து அறிவித்தது! ’’இதன் பின்னணியில் என்ன நடந்தது?’’ என்ற நமது விசாரணையில் தெரிய வந்ததாவது; # 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ...

இந்த ஆங்கிலப் படம் நமக்கு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.  இப்போது நெட்பிளிக்சில் நிறைய ஆப்பிரிக்க படங்கள் காணக் கிடைக்கின்றன. அதனை Nollywood  Movies என்று  சொல்லுகிறார்கள். இது, 112 நிமிட ஆங்கிலப்படம். திரைக் கதை, நடிப்பு, காட்சியமைப்பு, இயக்கம், யதார்த்த வாதம் என அனைத்தும் அருமை. ஒரு பெண்ணின் தனிமை என்ற வெறுமைக்குள் நுழைந்த ஒரு ஆண் அவளை அரவணைத்து பாதுகாப்பான உறவு என்ற நம்பிக்கையை விதைத்து, அவளை தன் விருப்படியெல்லாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முனையும் போது, அதை அந்தப் பெண் எப்படி ...

உலகில் முப்பது ஆண்டுகளாக முடியாத ஒன்றை, முடித்துக் காட்டிவிடுவதாக நம்ப வைத்து மக்களை முட்டாளாக வைத்திருந்த ஒரு நபரும்,அப்படி ஏமாந்த ஒரு தேசமும் தமிழகமாகத் தான் இருக்க முடியும்! இந்த விவகாரத்தில் மக்களை மட்டுமல்ல தன்னைத் தானே ரஜினி ஏமாற்றிக் கொண்டார் என்றும் நான் சொல்வேன்! தான் ஓடமுடியாத மண்குதிரை என்று அவருக்கே நன்றாக தெரியும்! ஆனால்,என் முதுகில் தமிழகத்தையே சுமந்து கரைசேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையை  மறை முகமாகத் திரைப்படங்களிலும், நேரடியாக ஊடகங்களிலும் அவர் தொடர்ச்சியாக கட்டமைத்து அதைக் கலைந்து விடாமல் காப்பாற்றியும் வந்தார். ஒரு வகையில் ...

பத்திரிகையாளர் என்பது சமூக தளத்தில் ஒரு மரியாதைகுரியக் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளர் சட்டங்களிலும் அந்த பார்வை இருந்தது. நான்காவது தூண், சுதந்திரத்தின் அளவுகோல் என்றெல்லாம் கூறப்படும் ஊடகத்துறையில், அதன் பணியாளர்களான பத்திரிகையாளர்களை புதிய சட்டங்கள் நடுத்தெருவிற்கு இழுத்து வந்து பணிப் பாதுகாப்பின்றி நிறுத்தியிருக்கிறது. ’கடமையைச் செய்வோம், உரிமைகள் பெறுவோம்’ என தலை நிமிர்ந்து வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர்களை முதலாளிகளின் கருணைக்காக காத்திருக்க வேண்டியவர்களாக்கிவிட்டன, இந்த சட்டங்கள். இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்! உழைக்கும் பத்திரிகையாளர் மற்றும் இதர செய்தித்தாள் ஊழியர்கள் ...

மதம், அரசியல் இரண்டுக்குமே உணர்ச்சிகரமான முட்டாள்தனமான கூட்டம் தேவை! அறிவு, உண்மை இரண்டையும் தொலைத்தவர்கள் தான் இவர்களின் தேவை! அது தான் திருமாவளவன் பாஜக விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளது. இவர் ஏன் 3,500 வருஷத்திற்கு முன்பு சொல்லப்பட்டதை தற்போது பேசுகிறார்? இந்த காலத்தில் யாருக்கு மனுதர்ம நூல் பற்றித் தெரியும்? அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லையே..சமூகம் அதைக் கடந்து எவ்வளவோ தூரம் வந்துவிட்டதே..தற்போது எந்த இந்து மத சாமியாரும் அதையெல்லாம் பேசுவதில்லை! எந்த ஆண்மகனும் மனுவைச் சொல்லி மனைவியை மிரட்டுவதில்லை! எல்லோரும் அதையெல்லாம் மறந்துவிட்டனர். சமூகம் அடுத்த ...

யார் ஒருவரையும் புகழ்ந்து பேசவோ,எழுதுவதிலோ நான் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை! ’பெரியாரை வியத்தலும் வேண்டாம், சிறியாரை இகழ்தலும் வேண்டாம்’ என்பது நம் முன்னோர்கள் உணர்த்தியது.அதுவே என்  நிலைப்பாடுமாகும்! எனினும் ஒருவரிடம் காணப்படும் அரிய பண்புகளை, சிறந்த குணநலன்களை சொல்வதன் மூலம் இந்த சமூகம் அதை முன்மாதிரியாகக் கொண்டு பலன் பெறும் எனில்,அதற்கான முழு தகுதியும் கொண்ட ஒருவரை உரிய முறையில் போற்றி, பாராட்டுவதும் ஒரு சமூக கடமையே! அந்த வகையில் நான் ஒரு பதினைந்து ஆண்டுகளாக சிவகுமார்  அவர்களிடம்  பழகிவருவதைப்  இந்த 79வது பிறந்தநாளன்று பகிர்ந்து கொள்ள ...

கட்டுக் கடங்கா ஊழல்,கொட்டமடிக்கும் அதிகாரிகள், தட்டிக் கொடுக்கும் தமிழக ஆட்சியாளர்கள்…! இது தான் இன்றைய தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தற்போதைய நிலைமை! தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை,  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்ட் மற்றும் கிராமச் சாலைகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டம், திட்டங்கள், பெருநகரம்,  வடிவமைப்பு,  நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், முதன்மை இயக்குநர் அலுவலகம்  என்று பத்து அலகுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறிய சதி திட்டங்கள்! தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ...

இன்றைய அரசியல்வாதிகளிலேயே மரியாதைக்குரிய அரசியல் பாரம்பரியமும், நீண்ட நெடிய நிர்வாகத் திறமையும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பெருமளவு விலகி நிற்பவருமாக ஒருவரை சொல்ல முடியுமென்றால், அவர் நிதீஸ்குமார் தான்! இன்னும் சொல்வதென்றால், மாநில அரசியலைக் கடந்து தேசிய அளவில் பிரதமர் வேட்பாளருக்கான தகுதி கொண்டவராகவும் பார்க்கப்பட்டவர்! குற்றச் செயல்களின் கூடாரமாக பார்க்கப்பட்ட லாலுபிரசாத்தின் 15 வருட ஆட்சிகால பீகாரை, குற்றச் செயல்களை குறைத்து,கல்வியறிவு பெற்ற,தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக வளர்த்தெடுத்ததில் நீதீஸின் பங்கு மகத்தானது! இதனால் தான் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மூன்று முறை ...