சர்வாதிகார ஆட்சியாளர்களின் கண்களுக்கு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சதிகாரராகத் தான் தெரிந்தார்! அவருக்கு நஞ்சை கொடுத்து கொன்றனர். ஆனால்,சாக்ரடீஸின் தத்துவங்கள் சாகாவரம் பெற்றுவிட்டன! அதே போல இன்று பாஜக அரசின் கண்களுக்கு மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும்,வழக்கறிஞர்களும்  தண்டிக்கப்பட வேண்டிய நக்சலைட்டுகள்! இவர்களை சிறையில் தள்ள இந்த ஒற்றை குற்றச்சாட்டு போதுமானதாகிவிடுகிறது! இந்தியா முழுவதும், காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரை,  பேராசிரியரில் இருந்து  மாணவர் வரை, கவிஞர் முதல் சமயத் துறவி வரை என கடந்த இரண்டு ஆண்டுகளில், பயங்கரவாத தடை ...

உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்குப் பகலில் வேலை, இரவில் உறக்கம் என்பது பொதுவான ஒன்றாகும். இது இயற்கை படைப்பு. ஆனால் இதில் மாற்றத்தைக் கொண்டு வந்தான் மனிதன். அது இரவு வேலை என்பதே ஆகும். பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இரவு தனியாக ஒரு ஷிபிட் அமைத்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினார்கள். இது செயற்கையான ஒன்றாகும். உண்மையில் இரவு கண்விழித்து வேலை செய்யும் சூழல் மனித உடலுக்கு இல்லை. ஆனால் அதை வலுக்கட்டாயமாக  உருவாக்கிக் கொண்டான்.  இங்குதான் மனிதனுக்கும் மற்ற சில உயிரினங்களுக்கும் வேறுபாடு உண்டாகிறது..  மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களில் 95 சதவிகிதம் பகல் செயல்பாடுகள் உடையவை. எலியை கொன்று ...

இன்னும் என்னென்ன மலிவான கேலிக்கூத்துகளை அரங்கேற்றப் போகிறீர்களோ…! கடவுள், பக்தி, ஆன்மீகம்…ஆகியவை குறித்து பாஜகவினருக்கு எந்த அடிப்படை புரிதலுமே இல்லை என்பது அவ்வப்போது தெளிவாக நிரூபணமாகிக் கொண்டுள்ளது!மத நோக்கத்திற்கு அப்பால் மக்கள் நலன் என்பதே பாஜகவினர் சிந்தனையில் வராதா? வெற்றிவேல் யாத்திரையாம்! நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் ஆறு வரை முருகனின் அறுபடைவீடுகளையும் நோக்கிப் போகிறார்களாம்..? எதற்காக? முருகன் மீதான பக்தியா? ’’இல்லை’’ என்பதை அவர்களே, ’’தமிழகத்தில் தாமரை மலர்ந்திட வெற்றிவேல் யாத்திரை என்று சொல்லிவிட்டார்கள்! ஆக, அரசியல் வெற்றிக்கு பக்தியையும்,மதத்தையும் கையில் எடுக்கிறார்கள்! முருக பக்தர்கள் ...

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் பெயராலும், சமூக நீதியின் பெயராலும் நடக்கும் தமிழகத்தில் நடக்கும் படு அயோக்கியத்தனமான ஒன்று தான் 7.5% உள் ஒதுக்கீடாகும்! இதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள யார்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக அரசு பள்ளி ஏழை,எளிய மாணவர்கள் பலன்பெற வேண்டும் என்ற கோணத்தில் ஆதரிக்கின்றார்களேயன்றி, ’’ உண்மையிலேயே பெற வாய்ப்புள்ளதா?’’ என யோசிக்கவேயில்லை! பொதுவாகப் பார்த்தால் கவர்னரின் காலதாமதம் நமக்கு ஒரு பெரும் கோபத்தைத் தான் ஏற்படுத்தும்! ஆனால், நாம் கோபப்பட வேண்டியது கவர்னரின் மீதல்ல! கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கழிசடையாக்கி வைத்துள்ள நம் ஆட்சியாளர்களின் மீது தான்! அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் ...

ஜனநாயகத்தின் பெயரிலான வாக்கு முறை பற்றி கள ஆய்வு செய்து பல அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார் இளந்திருமாறன்! தஞ்சை தரணி தான் சொந்த ஊர்! ஆனால்,அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தமிழகத்தில் ஏதாவது. அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம்,சகாயம் ஐ.ஏ.எஸ்சின் மக்கள் பாதை இயக்கம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியவற்றிலும் தீவிரமாக பணியாற்றியவர்! தற்போதுள்ள  மோசடிகளை தவிர்க்கவும், வாக்களிக்க வரமுடியாதவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கத்தக்க வகையிலும் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார்! ஜனநாயகத்தை விட இன்னொரு ...

ஒரு பக்கம் அணி,அணியாக நடிகர், நடிகைகள்,திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சேர்கிறார்கள்! மறுபக்கம் பல மோசமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் சமூகவிரோதிகள் சேர்கிறார்கள்…! இந்த ஆள்பிடிக்கும் அரசியல் மூலமாக பாஜக தமிழக மக்களுக்கு தனது கட்சி குறித்த என்ன மாதிரியான தோற்றத்தை தர விரும்புகிறது…? என்ன மாதிரியான பிம்பத்தை கட்டமைக்கத் துடிக்கிறது…? ஒரு கட்சி என்ன மாதிரியான கட்சி என்பதற்கு அந்த கட்சியின் முகங்களாக இருக்கும் பிரபலங்கள் ஒரு அளவுகோலா? ஒரு இயக்கத்தின் கொள்கையில் உள்ளார்ந்த ஈடுபாடு, அதன் தலைவர் மீது மிகப் ...

இந்தியாவில் சுமார் மூன்று கோடி நாய்கள் உள்ளன. இந்தியாவில் நாய்களால் கடிபட்டு ஆண்டு தோறும் இருபதாயிரம் நபர்கள் இறக்கிறார்கள். உலகில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் இறப்பவர்கள் 59,000. எனினும் கொரானா காலத்திலும் கூட தெரு நாய்களை தவறாமல் கவனித்த ஆயிரமாயிரம் எளிய மனிதர்களைக் கண்டு பெருவியப்பே எனக்கு ஏற்பட்டது…! நாய் கடித்தவர்கள் அனைவரும் இறப்பதில்லை. வெறி நாய் கடித்தவர்கள் மட்டுமே இறக்கிறார்கள்!  வெறி நாய்க்கடிக்கு உடனே சிகிச்சை எடுத்தவர்கள் பிழைத்து விடுகிறார்கள். சிகிச்சை எடுக்க தாமதமானால் பிழைப்பது கடினம்! தெரு நாய்கள்  ஆபத்தானவையா? அன்பானவையா? என்பது ...

 (பகுதி-4)  வீரப்பனுக்கே தெரியாத நல்ல விஷயங்கள் வீரப்பன் நடமாட்டத்தால் காட்டில் நடந்தன. காட்டில் நிறையக் கல்குவாரிகள் உண்டு. வெடிவைத்து பாறைகளைப் பிளக்கும்பொழுது ஏற்படும் சத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கேட்கும். பொதுவாக விலங்குகள், பறவைகள், சிறு உயிரிகள் சிறு சத்தத்தைக் கேட்டாலும் ஓடி  ஒளிந்து கொள்ளும். காடு நூலகம் போல் மிக அமைதியான இடம். அங்கு வெடிச் சத்தம் கேட்டால் அங்கு வாழும் காட்டுயிர்களின் நிலைமை என்னாகும் மற்றும் வெடி வெடிக்கும் பாறைகளுக்கு அருகில் இருக்கும் உயிரினங்கள் நிறைய இறந்துவிடும். இது மட்டுமில்லாமல் இயற்கை ...

ஒரு பக்கம் பட்டினி வறுமை குறித்த நெஞ்சை கனக்க வைக்கும் செய்திகள், மறுபக்கம் தஞ்சை தரணியில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நனைந்து வீணான செய்திகள்…என இரு வேறு இந்தியாவை பார்க்கிறோம்! ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாவட்ட திறந்த வெளி குடோனில்9,492 மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் நனைந்து வீணான செய்தி,அதைத் தொடர்ந்து,கடலூர்,திருநெல்வேலி…என ஒவ்வொரு இடத்திலும் பாழாகும் நெல்மணிகள் குறித்த செய்திகள்…என வந்து கொண்டே இருந்தன! இந்த ஆண்டு என்றில்லை, ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சில லட்சம் நெல்மூட்டைகள் ...

புகழ்பெற்ற  இலயோலா கல்லூரியை நடத்தி வருவது இயேசு சபை. இந்த சபையைச் சார்ந்தபாதிரியாரும், புகழ்பெற்ற சமூக சேவகருமான 83 வயதான, ஸ்டான் சாமி என்று அழைக்கப்படுகிற தனிஸ்லாஸ் லூர்துசாமி, தேசிய புலனாய்வு நிறுவனத்தால் அக்டோபர் 8 ஆம் தேதி  கைது செய்யப்பட்டுள்ளார்.ஏன் கைது செய்யப்பட்டார்? கார்ப்பரேட்டுகள் ஏழை,எளிய பழங்குடி மக்கள் வாழும் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்து,தொழிற்சாலைகள் அமைப்பதை தடுத்து விளிம்பு நிலை மக்களின் அரணாக நின்றார் என்பதால் மத்திய அரசின் கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். இவரது கைதுக்கு மேத்தா பட்கர், அருந்ததிராய்,ஸ்பனாம் ஆஸ்மி,ஹர்ஸ்மந்தர், அபூர்வானனந்த்…உள்ளிட்ட ...