கேரள அரசியலில் முன் எப்போதுமில்லாத மாற்றங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன. இந்த தேர்தலில் கடவுள், சாதி, மத ரீதியிலான வாக்குகளை குறிவைத்தே எல்லா கட்சிகளின் பிரச்சாரங்களும் அமைந்தன…!இது வரை காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் என்ற இருதுருவ அரசியலில் உழன்ற கேரளா.., தற்போது மூன்று துருவ முக்கோண அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது…! மேற்குவங்கத்தில் எப்படி ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளும்,காங்கிரசாரும் கிட்டதட்ட சம பலத்தில் இருந்தனரோ…, அதே போலத் தான் கேரளாவிலும் இதுவரையிலும் இருந்தனர். ஆனால், கேரளாவில் இந்த தேர்தல் முடிவுகள் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை ...
நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்யப் போவதாக அச்சுறுத்துவதின் வாயிலாக என்ன சொல்ல வருகிறீர்கள்! சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது! விலங்கு தான் பூட்டுவோம் என்கிறீர்களா…? அவர் பேசியது விவேக் சாவிற்கு முன்பு! கோடானு கோடி மக்கள் மனதில் இருந்த ஒரு சிறிய சந்தேகப் பொறியைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளமெங்கும் இதை நீங்கள் காணலாம்! தேனீர் கடை தொடங்கி தெருவீதி சந்திப்புகள் வரை மக்கள் இந்த சந்தேகத்தை தான் விவாதித்து தீர்க்கிறார்கள்! நடிகர் விவேக்கை பொறுத்த வரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை ...
டெல்லியில் 143 வது நாளாகப் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று மத்திய அரசு பலவித கெடுபிடிகளை செய்கிறது! இது வரை போராட்டத்தில், 375க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள போதிலும், மனம் தளராமல் தொடர்கின்றனர். கொரோனாவை விட விவசாய சட்டங்கள் ஆபத்தானவை என்பது விவசாயிகளின் நிலைபாடு! போராடும் விவசாயிகளை கொரானாவை விட ஆபத்தாக பார்க்கிறது பாஜக அரசு! நடக்கப் போவது என்ன..? விவசாயிகள் போராடி வரும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மக்களில் சிலரை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிட்டது அரசாங்கம். ஆனால் ...
இரா.முருகவேள் எழுதியுள்ள வரலாற்று நாவல் ‘புனைபாவை’. கொங்கு மண்டலத்தின் 13 ம் நூற்றாண்டு காலக் கதையை; கடைசி தமிழ் மன்னன், தமிழ்நாட்டை ஆண்ட போது வாழ்ந்த மக்களின் வாழ்வியலை ரத்தமும்,சதையுமாக உயிர்ப்போடு பேசுகிறது. புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்ற நாவல் இது. விடுதலைக்குப் பிறகான, கொங்கு மண்டலத்தின் அறுபது ஆண்டு கால வாழ்வியலை ‘முகிலினி’ நாவலில் வெற்றிகரமாக கொண்டுவந்தவர் இரா.முருகவேள். அவர் அதே கொங்கு மண்டலத்தின் மூலம், தமிழக வரலாற்றை புனைவதில் வியப்பில்லை. இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், கொங்கு மண்டலத்தில் ...
இறந்தவர் பிரபல நடிகர் என்பதை தாண்டி தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்திற்கான தூதுவர் என்பது மிக முக்கியம். விவேக் 15.04.2021 அன்று பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவர்களின் முன்னிலையில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் , பொது சுகாதாரத் துறையின் மேன்மை ,கொரோனாவிழிப்புணர்வு ஆகியவை குறித்துபேச வைக்கப்படுகிறார். ஆனால்,16.04.2021 காலை 11 மணிக்கு மயக்கமான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். 17.04.2021 அன்று காலை 04.35 மணி அளவில் ரத்தக் ...
நடிகர் விவேக் தன் இறப்பின் மூலம் அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்! கொரானா தடுப்பூசி போடுவதாலும், மற்றவர்களைப் போட வைப்பதாலும் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதாக எண்ணி, தன் உயிரை பறி கொடுத்ததன் மூலம், உண்மையான விழிப்புணர்வை தந்துள்ளார்! அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலி. கொரானா தடுப்பூசியால் பல மரணங்கள் தொடர்ந்து சம்பவிக்கிறது என்பதை சென்ற அறம் பதிவிலும் எழுதி இருந்தோம். சமீபத்தில் ஆவடியைச் சேர்ந்த டாக்டர் பாஷா, பெரம்பலூரில் அரசு டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கொரானா தடுப்பூசியால் மரணமடைந்தார் என்பதை பல ஊடகங்கள் மறைத்தன! ...
எத்தனையோ முக்கிய பணிகள் காவலர்களுக்கு இருக்கிறது. ஆனால்,தற்போது அவர்களின் ஒரே பணி யார் முகக் கவசம் அணியவில்லை, யார் எச்சில் துப்புகிறார்கள்,..பிடி, விடாதே., போடு அபராதம், எடு பணத்தை என்பதாகிவிட்டது. திருட்டு,கொள்ளை,மோசடி எந்த புகாரும் முக்கியமில்லாமல் போய்விட்டது! மறு பக்கம் வட இந்தியாவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் கும்பமேளா நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் தில்லியில் 140 நாட்களைக் கடந்து தொடர்கிறது…! இது ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது! ஓராண்டு கால கொரானா அனுபவத்தில் நாம் என்ன படிப்பினை பெற்றுள்ளோம்..?தெளிவு பெற்றோம்.தைரியம் பெற்றோம். அதை நடைமுறைபடுத ...
இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரமான மேற்கு வங்கம் தற்போது இந்தியாவின் கலவர பூமியாக உருமாறியுள்ளது. நாளொரு துப்பாக்கி சூடு, பொழுதொரு கலவரம் என்று அல்லோகலப்படுகிறது. தேவையற்ற வகையில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது, மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி விசிட் செய்து அதகளப்படுத்துவது, மம்தாவின் உக்கிரமான எதிர்வினைகள்..என்பதான வங்கத்தில் யாருக்கு வாய்ப்பிருக்கிறது…? கம்யூனிஸ்டுகள் ஏன் காணாமல் போயினர்…? வங்கத்தை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும் என்று ஒட்டு மொத்த மத்திய அரசின் பலத்தை பிரயோகித்து, மம்தாவின் மாநில ஆட்சியை நிலைகுலைய செய்தது பாஜக! 20 க்கும் மேற்பட்ட எம்.பி, ...
எதற்கு ஒரு மாத இடைவெளி..தேர்தல் தீர்ப்பைச் சொல்ல? ஒன்றிரண்டு நாளில் எண்ணிச் சொல்ல வேண்டிய தீர்ப்புகளை ஒரு மாதம் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை என்னென்பது? தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லோர் மனமும் பதைபதைப்போடு தான் உள்ளது. எந்த நேரம் என்ன நடக்குமோ..? தீர்ப்புகள் திருத்தப்படுமா…? வாக்குமெஷின்களில் கோல்மால் செய்துவிடுவார்களோ..? ”சார் வெளியில் இருந்து கொண்டு ரீமோட் மூலம் கூட தேர்தல் தீர்ப்பை மாற்றலாம் தெரியுமா?’’ என்று குண்டை தூக்கிப் போட்டார் ஒரு பத்திரிகையாளர். சுப்பிரமணிய சுவாமியே சொன்னார். ஓட்டுமெஷினில் எவ்வளவு கோல்மால் செய்யமுடியும் என்று! ...
”மோடிக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் அதிக மக்களால் கடுமையாக வெறுக்கப்படுபவராக ஜக்கி வாசுதேவ் தற்போது பார்க்கப்படுகிறார்.’’ என்று ஒரு கருத்தை இன்று இளம் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். எனக்கு திடுக்கென்றது. அவர் கருத்தை மற்ற சிலரும் ஆமோதித்தனர். இந்த சம்பவம் இன்று ஜக்கிக்கு எதிரான தெய்வத் தமிழ் பேரவை நடத்திய பிரஸ் மீட் முடிந்ததும் நிருபர்கள் மத்தியில் விவாதப் பொருளானது. யோகா, பிரணாயாமம் என்று அவர் இயங்கிய காலங்களில் அவர் மீது மக்களுக்கு பெரும் ஈர்ப்பு ஒரு கட்டத்தில் உருவானது. ஆனால், மிக பிரம்மாண்டமாக ...