சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் ஐஸ்குச்சிக் கலைஞர் சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர்  ஐஸ்குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களைச் செய்து தன் வீட்டில் காட்சிப்படுத்தி வைத்துள்ளார். விமானம், ஊஞ்சல் ஆடும் மீன்கள், மோட்டார் சைக்கிள், படுக்கை அறை விளக்கு அலங்காரம் போன்றவற்றை தனக்கே உரித்தான பாணியில் தத்துரூபமாக அழகுற வடிவமைத்து உள்ளார். தான் நினைப்பதை அப்படியே ஐஸ் குச்சிகளால் காட்சிப் படுத்தும் ஆற்றல் கொண்டவர் இவர். போலியோ நோயால் இரு கால்களை இழந்து சக்கர நாற்காலியில் வலம் வந்த போதிலும் மனம் ...

அச்சத்தில் தமிழக அரசு!  ஆத்திரத்தில் கிராம மக்கள்..! காந்தி ஜெயந்தியன்று கிராமசபையைக் கூட்டி விவாதிப்பதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்பாடாகி வந்த நிலையில்,அதிரடியாக தீடிரென்று கிராம சபைக் கூடக்  கூடாதென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெற முடியாவிட்டாலும் ஆண்டுக்கு நான்கு முறையேனும் நடத்த வேண்டும் என்ற வழமை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்தது! அதன்படி குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே1,சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடந்து வந்தது. ...

உத்திரப் பிரதேச சம்பவங்கள் மனதை உலுக்கி எடுக்கின்றன! இந்த சம்பவங்களை நாம் வரிசைப்படி வைத்துப் பார்த்தால், நாம் நாகரீகமான சமுதாயத்தில் தான் வாழ்கிறோமா…என வெட்கமாக உள்ளது. உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்திய நாத் முதல்வரானது முதல் வன்முறைகள்,அராஜகங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்கள் பெரும்பாலானவற்றை அரசே பொதுவெளியில் கசியாதவாறு பார்த்துக் கொள்கிறது.அதற்கு பெரும்பாலான ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன! ஆனால்,அதையும் மீறி வரக் கூடிய ஒரு சில செய்திகளே பேரதிர்வைத் தருகின்றன.அதற்கு எதிர்வினையாற்றும் போது ராகுல் காந்தியே தாக்கப்படுகிறார் என்றால்…,இந்த நாட்டில் தவறுகளை  துணிந்து  தட்டிக் ...

பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் 18 ம் நூற்றாண்டில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இவர் பாண்டிச்சேரி கவர்னர்களிடம்  பணியாற்றிய நேரத்தில் நாள்தோறும் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் காணப்படும் சுராஷ்யமான,அபூர்வ செய்திகள்,பல நாவல்கள்,திரைப்படங்களுக்கு மூலக்கருவாகக் கூடிய அளவுக்கு ஆர்வத்தை துண்டுகின்றன! மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் குறிப்புகளை வைத்து  ‘வானம் வசப்படும்’ ‘ மானுடம் வெல்லும்’ என்ற இரண்டு  வரலாற்று  நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 -1761) எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில்  உள்ளன. ஆங்கிலேய அரசும் இதனை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. ...

இந்த அவசர சட்டங்களும் அதிரடிச் சட்டங்களும் எதற்காக? மத்திய அரசு  வேளாண்மை தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை  பெரும் அமளிக்கிடையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மட்டுமல்ல இதற்கு முன் வந்த  சில சட்டங்களும் வேளாண்மையை மேம்படுத்த , விவசாய வருவாயை இரட்டிப்பாக்க என்ற விளம்பர வார்த்தைகளோடு கொண்டு வரப்பட்டன. கால்நடை இனப்பெருக்க சட்டம், மின்சார திருத்தச் சட்டம் – கூட்டுறவு சங்கங்களை மேலாண்மை செய்வதற்கான மாற்றங்கள் போன்றவைகளும் இப்படியான அறிவிப்புகளுடன் தான் வந்தன – சில வெகு முன்பாகவே. பெருவாரியான மக்களின் பார்வையை ஈர்க்காமலேயே. ...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,அந்த நிகழ்வு “தன்னிச்சையான செயல்“ என்று சொல்லியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தீர்ப்பில் ஒரு இடத்தில் 1949ல் ராமர் சிலையை மசூதிக்குள் தடையை மீறி வைத்ததை “தெய்வீகத் தலையீடு’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி அணுகியுள்ளது என்பதற்கு இந்த ஒரு வார்த்தையே போதுமானதாகும். ஆனால்,28 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியைத் தகர்த்தபோது இப்படியொரு தீர்ப்பை நீதிமன்றத்திடம் நாம் பெறமுடியும் என அந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கனவில் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை! “முட்டாள்தனம். ...

எத்தனையோ  பரபரப்பு செய்திகளுக்கு இடையே கடந்த 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்று சமூக ஆர்வர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியது.  முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்தியை கட்டம் கட்டி வெளியிட்டன.  தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு இரு முறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் 2013 முதல் தமிழ்நாட்டில் இதுவரை கூட்டப்படவில்லை என்று அரசே பகிரங்கமாக உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது என்பதே அந்த வழக்கில் வெளிப்பட்ட செய்தி. இந்த கூட்டம் நடைபெற ...

இன்றைக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல், குடு குடு கிழவன் வரை, செல்போன் பயன்படுத்தாத நபரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை  இருக்கிறது. இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்தாலும்,செல்போன் கடைகள் வியாபாரமின்றி விரக்தியில் மூடப்பட்டு வருகின்றன என்பதே உண்மை! ’’ ஆன்ராய்டு செல்போனா, அதுல கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் வருதுப்பா. அதையெல்லாம் என் பிள்ளைங்களுக்கு ஒரு நாளும் கொடுக்க மாட்டேன்…’’ என்று சொன்ன பெற்றோர்களெல்லாம், பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ஆன்ராய்டு போனுலயே எதுப்பா நல்ல போனு… ஜூம் மீட்டிங்குல ...

கட்டுக்கட்டாக கரன்சிகளையும்,கண்ணைப் பறிக்கும் தங்க கட்டிகளையும் வீடெங்கும் நிறைத்து வைத்திருந்த சேகர்ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார்  குற்றமற்றவராக! ”குற்றமற்றவரை குற்றவாளியாக்கிவிட்டோமே” என தன் தவறுகளுக்காக பாஜக நாணிச் சிவந்து, இல்லையில்லை, கூனிக்குறுகி வெட்கப்படுகிற அழகைப் பாருங்களேன்…! சி.பி.ஐ சிறுமைப்பட்டு நிற்கிறது. ரிசர்வ் வங்கி அசமந்தமாய் முழிக்கிறது.காவல்துறை கைகட்டிப் பார்க்கிறது! ஆகா…,என்ன நடந்தது? இந்தக் கதையை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா? 2016 ல் ஜெயலலிதா மறைவையடுத்து டிசம்பர் 8 ஆம் தேதியே சேகர் ரெட்டி வீட்டிலும்,அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு,கண்டெடுத்தவையாக அறிவிக்கப்பட்டவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! தங்கம் ...

மனிதன் பிறப்பு தொடங்கி உடல் அடக்கம் வரை முக்கியத்துவப்படுவதால்,  பால் புனிதமாகக்  கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, உயிர் காக்கும் அத்தியாவசிய உணவான பால் உற்பத்தி இன்றைய தமிழகத்தில் சுமார் பத்து லட்சம் எளிய விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாகத் தமிழக அரசின்  கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் நிர்வாகத்தை நம்பி சுமார் 4,60,000 ஆயிரம் எளிய பால் விவசாயிகள் வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல,சுமார் 1,50,000 பால் முகவர்களும் உள்ளனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவினில் தற்போது ஊழல்களும், முறைகேடுகளும், மோசடிகளும் காட்டாற்று வெள்ளமாக ஓடுகிறது! ஒரு லிட்டர் ...