நிருபிக்க முடியாத குற்றச்சாட்டில்  பி.எம்.எல்.ஏ சட்டத்தின் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, தேர்தல் நேரத்தில் சிறையில் 50 நாட்களை கடந்த நிலையில்,  உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அரசியல் எதிரிகளை அழிப்பதற்கு பி.எம்.எல்.ஏ சட்டம் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை பார்ப்போம்; மார்ச் 21, 2024 ல் அமலாக்கத்துறையினரால் அரவிந்த கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவர முடியாத பண மோசடி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். 2022-ல் சி.பி.ஐயால் பதிவு செய்யப்பட்ட புது தில்லி மதுபானக்கொள்கை வழக்கை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் இந்த வழக்கை கையிலெடுத்தது. ஆரம்பத்தில் யாருடைய ...

உள்ளே போவதற்கு முன்பிருந்த கெஜ்ரிவாலை விட, வெளியே வந்துள்ள கெஜ்ரிவாலின் விஸ்வரூபம் பாஜகவை பயமுறுத்துகிறது! வட இந்தியா முழுமையும் பாஜக அதிருப்தி அலை வீசுகிறது. ‘நிச்சயமாக மோடி அடுத்த பிரதமரல்ல’ என்பதையும், அடுத்த பிரதமர் ரேசில் முந்தத் துடிக்கும் மூவர் குறித்தும் இங்கே பார்ப்போம்; எவ்வளவு முயற்சித்தும், எத்தனை இன்னல்கள் தந்தும், டெல்லியை ஆம் ஆத்மியிடம் இருந்து அபகரிக்க முடியாமல் தோற்றுப் போன பாஜக அரசு, அழித்தொழிப்பு ஒன்றே ஆகச் சிறந்த வழியென்று, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் மிக முக்கிய முன்னணி ...

பத்தாண்டு ஆட்சி பலத்த சலிப்பை தந்துள்ளது. இது வரை பாதுகாப்பான தொகுதிகள் என பாஜக நினைத்த தொகுதிகள் இன்று பலத்த போட்டியை காண்கின்றன! மதவெறுப்பு பரப்புரையை புறந்தள்ளி,  தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேசுவோர் பக்கம் மக்கள் கவனம் திரும்பி இருப்பது பாஜகவை அதிர வைத்துள்ளது! பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் (284) தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக 84 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்கள் வரும் மே 20 ல் நடக்க விருக்கிறது. இத்துடன் ஆந்திர பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே ...

கை உடைப்பு, ஒன்றடுத்து ஒன்றென பல வழக்குகள், நிரந்தரமாக சிறையில் வைக்கும் முயற்சியா..? குண்டர் சட்டம் பாய்வதற்கான நகர்வுகள்! சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி சிகிச்சை பெறும் நிலை! துடைப்பத்தோடு பெண்கள் அழைத்து வரப்பட்டது.. ஆக, சவுக்கு சங்கரை என்ன தான் செய்ய நினைக்கிறார்கள்? கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நேற்று (மே-8,2024) சிறப்பு நீதிமன்றத்தில். மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்! அப்போது அரசியல் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வருவது போல, சவுக்கு சங்கர் மீது ...

கோவிஷீட்டு உற்பத்தியை நிறுத்தி விடுவதாக ‘ஆஸ்டராஜென்கா’ நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.கொரோனாவிற்கு பிறகு இளவயது மரணங்கள் உலகெங்கும் அதிகரித்து, இங்கிலாந்து, இந்திய நீதிமன்றங்களில் தடுப்பூசியின் பாதிப்பு வழக்குகள் குவிந்ததன் பின்னணியில் இந்த விவகாரத்தை அலச வேண்டும்; சமீப காலமாக – கொரோனா தடுப்பூசிக்கு பிறகு – இளம் வயது மரணங்களை அதிகம் பார்க்கிறோம். நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கும் இளையோர் மாரடைப்பிலும், சுவாசம் திணறியும் இறக்கும் போது இதயம் ரணமாகிறது. கொரோனா மற்றும் தடுப்பூசியால் உயிரிழந்தோர் குறித்த தரவுகளை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்துவிட்டது அரசாங்கம். ஆகவே, எவ்வளவு ...

‘லாபதா லேடீஸ்’ என்றால் ‘தொலைந்து போன பெண்கள்’ என்பதாகும். யதார்த்தமான  கிராமத்து பெண்கள்,  வெள்ளந்தி குணங்கள்..மனைவியை தொலைத்த கணவர்கள்.. என சிற்பம் போல செதுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் வழியே, நுட்பமான பெண்ணியமும், ஆணாதிக்க அவலமும் எள்ளலோடு பேசப்படும் சுவாரஷ்யமான படம்; அமீர்கான் தயாரிப்பில், அவரது மனைவி கிரண்ராவ் இயக்கத்தில் வந்துள்ள  இந்த இந்திப் படத்தை அனைவரும் கொண்டாடுகின்றனர்! இது பெண்களுக்காக, பெண்களை மையப்படுத்தி, ஒரு பெண்ணால் எடுக்கப்பட்ட படம்! கதை வட இந்தியாவில் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது. ‘கணவன் பெயரைச் சொல்லக் கூடாது, அவனது செருப்பைப் ...

எதிர்பார்த்தபடியே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார். காரில் கஞ்சா இருந்தது, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்து, சிறையில் காவலர்களால் கடுமையாக தாக்கப்படுவது.. போன்ற செய்திகள் உணர்த்துவது என்ன..? ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்! அதிகாரத்தை நோக்கி திணற வைக்கும் கேள்வி கேட்கிறார்! எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரர் போன்ற பிம்பங்கள் சவுக்கு சங்கர் குறித்து இருந்தன… என்ற போதிலும், அவரது கைதுக்கு எதிராக பொதுச் சமூகம் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மக்களிடம் இருந்தோ, சக பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியோரிடமோ ...

அவுரி உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் நாடு இந்தியா! அவுரி பயிர்களுக்கு பின்னணியில் பல அரிய வரலாற்று செய்திகள் உள்ளன! மனித குலத்திற்கு அளப்பரிய பயன்கள் தரும் அற்புத மூலிகை!  இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும். இன்னும் சொல்வதற்கு எத்தனையோ..! ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய  வந்ததற்கான காரணங்களில் முக்கியமானது ‘இங்கிருந்து சில  ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்கை சாயத்தை தரும் அவுரியைத் தேடித் தான்’ என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் . அப்போது அது இண்டிகோ ...