எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் பிறகு பார்த்துக்கலாம் என்ற தவிப்பு ஒவ்வொரு இலவச அறிவிப்பிலும் பிரதிபலிக்கிறது. தேர்தல் தோல்வி  பயத்தின் உச்சம் அதிமுக தேர்தல் அறிக்கையில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழக அரசின் வருமானத்திற்கும் அதிகமான செலவாகக் கூடிய இலவசங்களை அறிவித்த ஒரே கட்சி என்ற சிறப்பு வரலாற்றில் அதிமுகவிற்கு நிலைக்கும்! உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாக தமிழகத்தை மாற்றி காட்டுகிறோம் என்பதை உங்கள் அறிக்கை சொல்லாமல் சொல்கிறதே..! அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த ஒரு அசத்தலான அலசல்; அப்பப்பா அடுக்க முடியவில்லை! முக்கியமானவற்றை ...

திமுக தேர்தல் அறிக்கை குறித்த நல்லவை, தவிர்த்திருக்க வேண்டியவை, விடுபட்டவை, ஆபத்தானவை ஆகிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து நேற்று அறம் இணைய இதழில் எழுதி  இருந்தோம். அது பெரிய அளவு வைரலானது. பத்திரிகையுலக நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு நல்ல விஷயங்களை கவனப்படுத்தி உள்ளீர்கள். இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நிச்சயம் விடுபட்ட ஒரு சில அம்சங்கள் சேர்க்க வாய்ப்புள்ளது என்றனர். இதையடுத்து வேறு சில திமுக நண்பர்களும் தோழமை உணர்வுடன் பேசினர். நாம் சுட்டிக்காட்டியது போலவே எட்டுவழிச் சாலை போராட்ட ...

சமூகத் தளத்தில் அழுத்தப்படும் பெண்களின் உணர்வுகளை மிகுந்த உயிர்ப்போடு பதிவு செய்வதில் வல்லவர். பாசம், பரிவு, பரிதவிப்பு, காதல், மோதல், பொறாமை, ஆற்றாமை..அனைத்தும் கொண்ட போலித்தனமில்லாத எளிய மனிதர்களை – அவர்களின் ஆன்மாவை – தனது எழுத்தில் வெளிச்சமிட்டு காட்டி 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் இமையம்! வெ.அண்ணாமலை (1964) என்ற இயற்பெயரைக் கொண்ட இமையத்தின்”செல்லாத பணம்”  நாவலை,  2020 ஆண்டுக்கான விருதுக்கு, சாகித்திய அகாதமி தேர்ந்தெடுத்து உள்ளது. இதற்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசும், பட்டயமும் வழங்கப்படும். கொலைச் சேவல், சாவுசோறு, மண்பாரம், ...

கவனப்படுத்த வேண்டிய பல புதிய நல்ல வாக்குறுதிகள் உள்ளன! அத்துடன் இலவச மயக்க , மருந்துகள் அதிகமாகவே உள்ளன! இத்துடன் சொல்ல பயந்த விஷயங்களுமுள்ளன! திசைமாறிப் பயணிக்கும் திமுகவின் மிக ஆபத்தான அறிவிப்புகளும் உள்ளன…ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பாஜக பயம் இப்படி இருக்குமென்றால்.., திமுக தேர்தல் அறிக்கை குறித்த விரிவான அலசல்; முதலில் பாராட்ட வேண்டிய அம்சங்களை பட்டியலிடுவோம்; # புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். # தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைகள் தமிழர்க்கே வழங்க சட்டம், # ...

பிரசாந்த் கிஷோர் திமுக தேர்தல் வெற்றிக்கு பொறுப்பு ஏற்றவுடன் கூறிய முதல் நிபந்தனை ”உங்க கட்சி மேல குடும்ப ஆதிக்க கட்சி என்ற பெயர் பரவலாக உள்ளது. ஆகவே, தேர்தல் வரை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் முக்கியத்துவம் தரும் எந்த நகர்வுகளும் இருக்கக் கூடாது” என்றார். ஆனால், பிரசாந்த் கிஷோர் பொறுப்பெடுக்கும் முன்பே இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டு விட்டது. அவர் பொறுப்பேற்றது முதல் அன்று திமுகவின் ஆலோசகராக இருந்த சுனில் தான் அவரது புரமோசன்களை கவனித்துக் கொண்டார். பிரசாந்த் ...

மக்கள் நீதி மய்யத்தில் தர முன் வந்த 18 தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அம்மகவில் ஆறு சீட்டுகளுக்கு ஒத்துக் கொண்டது ஏன்..? என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் கூறியதாவது; அவர்கள் 18 தொகுதிகள் தர முன் வந்தது உண்மை தான்! ஆனால், நாங்கள் தான் தவிர்த்துவிட்டோம்! காரணம், அங்கே நாங்கள் சென்ற போது ஒரு கட்சி அமைப்புக்கான அட்மாஸ்பியரே அங்கு இல்லை! ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தினரின் அணுகுமுறையே அவர்களிடம் பக்காவாக வெளிப்பட்டது. தேர்தல் கூட்டணி பகிர்வு என்பதை கட்சிகளோடு தான் வைத்துக் கொள்ள முடியும்! ஒரு ...

அரசியலில் எந்த ஒரு கட்சியும் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும் நிச்சயமாக ஒரு எதிரி தேவை! எதிரியை அடையாளப்படுத்தாதவர்கள், தங்கள் அடையாளத்தை இழந்து அழிந்துவிடுவார்கள்! இருதுருவ அரசியலின் ஈர்ப்பே உலகை இயக்கிக் கொண்டுள்ளது! அமெரிக்காவில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் அடிப்படைத் தன்மையில் வேறுபட்டவை! ஜனநாயகக் கட்சி பன்மைத்துவ தன்மை கொண்டது. கறுப்பர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களை அரவணைத்து செல்லும் கட்சியாக உள்ளது! குடியரசுக் கட்சி வெள்ளையின மக்களின் உயர்வு, தாழ்வு கொள்கையை உள்வாங்கிய கட்சியாகும்! ஜார்ஜ்புஷ், ரொனால்டு டிரம்ப் ஒரு எக்ஸ்டீரிம் என்றால் ஒபாமாவும், ஜோபைடனும் அதற்கு ...

நம்ப முடியவில்லை! ஆனால்,சொன்னவர்கள் வன்னியர் சங்க முன்னோடி அமைப்பினர்! வன்னியர்கள் செல்வாக்குள்ள 110 தொகுதிகளில் நடத்தப்பட்ட கள ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், ஒரு காலத்தில் பாமகவின் மீது வன்னியர்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்பது தானாம்! வன்னியர் சமூக நற்பணி மன்றம் என்பது வன்னியர் சங்க முன்னோடியான ஏ.கே. நடராஜன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் வன்னியர் சங்கத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் ஆபீசர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள்,டாக்டர்கள் பலரும் உள்ளனர். இந்த அமைப்பின் திண்டிவனம் ...

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆயினும்,  காவிரியிலும், தாமிரபரணியிலும் இரண்டாண்டு அல்லது  நான்காண்டுகளுக்கொருமுறை பெருமழை பெய்து மிகையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இக்கூடுதல் மிகை வெள்ளப் பெருக்கு ஏறக்குறைய 260 டிஎம்சி அளவுக்கு ஏற்பட்டு – பயனின்றி வீணே கடலில் கலக்கின்றது. காவிரியில் மட்டும் இந்த கூடுதல் வெள்ளப் பெருக்கு நான்காண்டுகளுக்கொருமுறை 100 டிஎம்சிக்கு மேலிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்வள வல்லுநர்களும், சமுதாய அக்கறையாளர்களும் தமிழ்நாட்டின் ஆறுகளில் கிடைக்கும் மிகை வெள்ள நீரை வீணே கடலுக்குள் விடாமல் அவற்றை வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு ...

ஊழல், ஊதாரித்தனம், கமிஷன், கையூட்டு ஆகியவற்றின் மூலம் தமிழக மின்வாரியத்தை மீள முடியாத ஒன்றரை லட்சம் கோடி கடனில் தள்ளியுள்ளது அதிமுக அரசு! தற்போது இதை மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையை ஆதாரமாக காட்டி, தமிழக மின் துறை முறைகேடுகளை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது! அறப்போர் இயக்கம் அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கொடுத்துப் பார்த்தது. அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில் “விசாரிக்கிறோம்” “விசாரிக்கிறோம்” அதை தவிர எந்த நடவடிக்கையும் இல்லை. சிபிஐயிடம் சென்று முறையிட்டால் ...