காவ்ரே பாய்ரே ஆஜ் – காதலின் ஊடாக சமகால அரசியலைப் பேசுகிறது! (Ghavre Baire aaj -வீடும் உலகமும் இன்று). இது ஒரு முக்கோணக் காதல் கதை. மனித நேய விழுமியங்களுடன் பெண்ணிய உணர்வுகளை சொல்லும்  அபர்ணா சென்னின் இந்த அற்புத படைப்பானது கண்ணியமான காதல் எது? கபட வேஷம் தரித்த காதல் எது என்ற புரிதலை நுட்பமாக காட்சிப்படுத்துகிறது! இந்தியாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் வலதுசாரி இந்துத்துவ அரசியலை, அதன் அணுகுமுறைகளை நேர் கொண்ட பார்வையுடன் எதிர்கொள்ளும் அந்த பத்திரிகையாளன் கதாபாத்திரம் பிரமிப்பூட்டுகிறது. ...

த்ரிஷ்யம் 2013 ல் ஜீத்து ஜோஸபின் எழுத்து – இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் கேரளாவை ஓர் உலுக்கு உலுக்கியது. சிறந்த திரைப்படத்துக்கெனவும் , கான்ஸ்டபிள் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக  கலாபவன் ஷாஜோனுக்கும் கேரள அரசின்  விருதுகளைப் பெற்றுத் தந்தது த்ரிஷ்யம்.    சிறந்த நடிகை (ஆஷா ஷரத்) மற்றும்  சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது. தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் , சிறந்த நடிகர் (கலாபவன் ஷாஜோன் ) என மூன்று விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் முதல் வரிசையில்போய் அமர்ந்தது த்ரிஷ்யம். அது குறித்து மேலும் சில சுவைக்கும் தகவல்கள்…. ஏறத்தாழ 15 கோடி ரூபாய்க்கு இதன் ரீமேக் உரிமை விற்கப்பட்டதாகச் சொல்லுகிறார்கள்…! 2014 இல் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் கன்னடத்தில் மறு ...

கோவிட் தடுப்பூசியை வலியுறுத்தி அரசு எடுக்கும் முயற்சிகளை அரசு மருத்துவர்களே எதிர்த்து முறியடிக்கும் ஒரு வித்தியாசமான சூழல் சுகாதாரத்துறையில் நிலவுகிறது! இது வரை அரசு மருத்துவர்களில் அதிகபட்சம் 25 சதவிகிதமானவர்களே கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்! சுமார் 75 சதவிகிதமானோர் கோவிட் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை! ஆனால், சுகாதாரத்துறையின் உயர் நிர்வாகப் பணியில் இருக்கும் CMO, DDHS ,JDHSHOD, Dean, HS ஆகியோர் அரசு நிணயித்த டார்கெட்டை அடைய அரசு மருத்துவர்களே தடையாக இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்! அதே சமயம் ...

தமிழ்நாட்டில் இருக்கிற சினிமா நடிகர். நடிகைகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர்களை வலைவீசி பிடித்து பாஜகவில் இணைப்பதே ஒரு பெரிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளார்கள் என தெரிய வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் பாஜகவில் இணைந்த நடிகர்,நடிகைகள் பட்டாளத்தை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது! ஏன் சினிமாகாரர்களுக்கு மட்டும் பாஜக மீது ஒரு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது! இவர்கள் யாருமே பணம் தராமல் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள்! சினிமாவில் சம்பாதிப்பதை அரசியலில் பிரச்சாரம் செய்தோ அல்லது ஏதாவது பதவி, செல்வாக்கு பெற்றோ அடையலாம் என்று தான் வருகிறார்கள்! ...

கட்சி ஆரம்பித்து முதல் பொதுக் குழுவாம்…! அதுக்கே இந்த ஆர்ப்பாட்டம் ஆடம்பரம், ஆர்ப்பரிப்பு…படாடோபம்! மெத்த படித்தவர்,மேட்டுக்குடி மனிதர் உலக ஞானம் கொண்டவர் என்ற போதிலும் இன்று கமல்ஹாசனும் மற்ற கழிசடைக் கட்சிகளின் தலைவர்களைப் போலவே பந்தா காட்டி பொதுக் குழுவை நடத்தியுள்ளார்! சசிகலா ஜெயிலில் இருந்து வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை நினைவுபடுத்துவது போல வழி நெடுக பேனர்கள், கட் அவுட்கள்..செண்டை மேளம்,பறை இசை,ஆட்டம்பாட்டம், வாழ்க கோஷம், பூங்கொத்துகள்.. மலர் தூவல்கள்…என எதற்கு இத்தனை ஆர்ப்பரிப்பு! தன் கட்சியின் பொதுக்குழுவிற்கு அதன் தலைவர் வருவதே ...

அதிகாரம்,செல்வம்..ஆகியவற்றை மையபடுத்தி செயல்படும் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதற்கும், வேறுபட்டு பிரிவதற்கும் அதுவே காரணமாகிவிடுகிறது! இ.பி.எஸ்ஸையும்-ஒபிஎஸ்ஸையும் ஒன்றுபடுத்தி இருப்பதற்கும் அதுவே காரணம்! சசிகலாவிடம் இவர்கள் ஒன்றுபடமுடியாமல் போவதற்கும் அதுவே காரணம்! எந்த ஒரு மனிதனுக்கும் எதிரி வெளியில் இல்லை! தனக்குள் பேராசை, சுயநலம் என்ற எதிரிகளை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், வெளியில் இருக்கும் எதிரியை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்! சசிகலாவை இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கமுடியாமல் தடுமாறிய போது தான் தெரிய வந்தது இவர்கள் ஆட்சி என்றால், அதிகாரபூர்வமாக பொதுச் சொத்தை அனுபவிப்பது என்பதற்கு மேலாக ...

சமரசமற்ற ஒளிப்பதிவு மேதை, திரைக்கதையோட்டத்திற்கு அன்னியமாக ஒரு போதும் திசைமாறாத கேமரா அவருடையது! கதைக்கான மைண்ட் செட்டப்போடு, ஆத்மார்த்தமாக ஒளிப்பதிவு செய்பவர் என்ற வகையில் ஒரு இயக்குனரின் எண்ணத்தை காட்சி வடிவில் கொண்டு வந்து நிறுத்துவதில் தன்னிகரற்றவர்! அந்த வகையில் பாரதிராஜாவின் முதல் ஐந்து படங்களின் வெற்றியில் கேமரா நிபுணர் நிவாஸிற்கும் கணிசமான பங்கிருந்தது! என் பள்ளிக்காலம். ஏதோ ஒரு வார இதழில்  கமலஹாசனிடம் இப்படி ஒரு கேள்வி : ‘ பாலுமகேந்திரா, அசோக்குமார், நிவாஸ். மூன்று ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?” பாலுமகேந்திரா, அசோக்குமார் குறித்து தன் கருத்தை  சொன்ன  கமல், நிவாஸ் குறித்து,              ‘’நோ கமெண்ட்ஸ்’’ என்று பதில் சொல்லியிருந்தார். ...

விவசாயிகளுக்கு எதையெல்லாம் நிறைவேற்றித் தருவோம் என பாஜக அரசு கூறியதோ…, அவை நிறைவேற்றாமலே, நிறைவேற்றியதாகப் பொய்களை பேசி வருகிறது. உண்மையில் விவசாயிகளுக்கு  ஒரளவுக்கேனும் இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் புதிய வேளாண் சட்டங்கள் பறித்துக் கொண்டன! முக்கியமான விவசாய விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி விட்டதாகவும், அது தொடரும் என்றும் பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய் என்பதே  போராடும் விவசாயிகளின் கொந்தளிப்புக்கு காரணமாகும். மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ...

தமிழகத்தின் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நேரடியாக நியமிக்காமல் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நியமிக்கிறார்கள். இதன் மூலம் அடித்தட்டில் உள்ள தினக் கூலி தொழிலாளர்களை அத்துக் கூலியாக, அடிமாட்டு சம்பளத்திற்கு பிழிந்து எடுப்பதோடு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஒப்பந்தரார்களும் சேர்ந்து கொண்டு முக்கூட்டு கொள்ளையடிக்கிறார்கள்…! இதை அந்த தொழிலாளர்களின் ஒப்பந்த வாக்குமூலமாகவே அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத   விக்கிரமாதித்தன்   முருங்கை மரத்தின் மீது ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டான். “உள்ளாட்சிகளில் பணிபுரியும் துப்புரவு  தொழிலாளர்களுக்கு ...

அந்தகார இருள் படிந்திருக்கும் சமூகத்தில் அறத்தின் ஒளியை பாய்ச்சியவாறு ஆறாம் மாதத்தில் காலடி எடுத்து வைக்கிறது நம் அறம் இணைய இதழ்! அறிவில் சிறந்த ஆன்றோர்களும், கல்வியில் சிறந்த சான்றோர்களும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து தட்டிக் கேட்டால் தான் ஒரு சமூகத்தில் அறம் தழைக்கும்! அப்படி நடக்காவிட்டால் நாமும் அமைதியாய் இருந்துவிட்டு போவோமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை! பொது நலனுக்கு குரல் கொடுக்க, பணியாற்ற, நேர்மையான யாருக்கும் உரிமையுண்டு! சில நேரங்களில் இதில் சந்திக்க நேரும் அவமானங்களும்,ஆபத்துகளும் அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், அறச் சீற்றங்களை அழுத்தி ...