விசாரணை குழுவாம்! ஆறுபேர் கமிட்டியாம்! எதற்காக..? பிரச்சினையை ஆறப்போடவா..? அதுவும் இந்த விசாரணை அறிவிப்பே சும்மா வரவில்லை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் கொந்தளிக்க தொடங்கியதும் தான் இந்த அறிவிப்பு! தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை தரும் ஒரு சாதாரண மனிதன் பிடிபட்டால் லாக்கப் டெத், எண்கெளண்டர், கை,காலை உடைத்து கட்டுப்போட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நீதிபதியிடமே பொய் வாக்குமூலம்..என்னென்ன நாடகங்கள் அரங்கேறும்! மக்களும் ஏதோ நீதி நிலை நாட்டபட்டால் சரி தான் என விசில் அடித்து,கைதட்டி ஆரவார வரவேற்பு தருவார்கள்! பலமுறை பாலியல் புகாருக்கு ...

தேர்தல் போட்டி என்பதைக் கடந்து ஒரு யுத்தமாக மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது! எல்லா நியாய அநியாயங்களையும் புறந்தள்ளி அழுத்தொழிப்பு அரசியலாக அது பரிமாணம் பெற்று வருவதை ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்துடன் பார்க்கிறது! தேர்தல் போட்டி என்பது ஜனநாயகத்தில் சகஜமான ஒன்று! ஆனால், அது வங்கத்தை பொறுத்தவரை வக்கிரமான வடிவம் கொண்டு உக்கிரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது! வகுப்புவாத, மதவாத அரசியல் தழைத்தோங்கும் மாநிலமாக தினம், தினம் ரத்தம் சிந்தும் பூமியாக அது நிறம் மாறிவருகிறது! ஒரு மிகப் பெரிய பாரதப் போர் நிகழ்வதற்கான முஸ்தீபுகள் ...

‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்; பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ...

தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பிரச்சினைகள் மீது தனி கவனம் வந்துவிடுகிறது! சாதிசங்கங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கிவிடுகின்றன! சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆகிய இந்த இரண்டு இடங்களும் தினமும் பரபரப்பாக காணப்படும் இடம். காரணம் அரசியல் கட்சிகள் ஆகட்டும் சமூக அமைப்புகள் ஆகட்டும் தங்களுக்குள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்ள ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாநிலை அறப்போராட்டம் என நடத்துவதற்கு போலீசார் இந்த இடத்தில்தான் அனுமதிக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் அதிமுக,திமுக ஆகிய இரண்டு ...

தென் இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளும் ஒரே பிரதேசமாக இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் காங்கிரசிடமிருந்து கபளிகரம் செய்யப்பட்டுவிட்டது! பாஜகவிற்கு ஒரே உறுத்தலாக இருந்த பாண்டிச்சேரி அதன் பகடை விளையாட்டிற்கு பலிகடா ஆகிவிட்டது! ஆள்பிடிப்பு அரசியலை அகில இந்தியாவெங்கும் அரங்கேற்றி வரும் பாஜக, புதுச்சேரியை மட்டும் விட்டுவைக்குமா என்ன? வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திலுமே காங்கிரஸில் இருந்து ஆள்பிடித்து ஆட்சி கவிழ்ப்பை அரங்கேற்றியே ஆட்சியை பிடித்தது பாஜக! பீகாரில் கூட்டணியில் இருந்தாலும் ஐக்கிய ஜனதாதளக் கட்சி எம்.எல்.ஏவை அடுத்த மாநிலத்தில் பேர அரசியலுக்கு விலை பேச ...

கிறிஸ்தவ மதத்தை உலகுக்களித்த இயேசுநாதர் ஒரு விடுதலைப் போராளி. அதனால்தான் ரோமானிய அரசனால் கொலை செய்யப்பட்டார். இயேசுவை பின்பற்றும்  கிறிஸ்தவர்கள் எளிய, வறிய நிலையில் இருப்பவர்கள்  பக்கம், நீதியின் பக்கம் இருக்கின்றார்களா  என்பதுதான் இந்த படம் எழுப்பும் ஆதாரக் கேள்வி! எந்த ஒரு மதமும்,  அல்லது நிறுவனமும் தன்னை கால ஓட்டத்திற்கேற்ப  சரி செய்து கொள்ளவில்லை  என்றால் வழக்கொழிந்துவிடும். இதற்கு கிறிஸ்தவ மதமும் விதிவிலக்கல்ல. கிறிஸ்தவ மதம் தன்னை சரிசெய்து கொள்ளுமா ? அதற்கான  ஆற்றல் அந்த மதத்திற்குள் இருக்கிறதா…? என்பதற்கு இந்த படம் விடை ...

பல நூறு கோடி செலவில் அள்ளி இரைக்கப்படும் தமிழக அரசின் அளவுக்கு மீறிய சுய விளம்பரங்கள் ஒரு வகையில் அதன் பலவீனத்தையும், பதற்றத்தையும் தான் உணர்த்துகின்றன. நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று கூவிக் கூவி தம்பட்டமடிப்பதன் மூலம் தன் குற்றவுணர்வை மறைக்க துடிக்கிறது எடப்பாடி அரசு. ஒரு நல்ல அரசுக்கு, அரசினால் பலன் பெற்ற மக்களின் உணர்வுகளும், உள்ளார்ந்த பேச்சுக்களும் தான் விளம்பரமாகும்! அதை தன் செயலின் மூலமாக செய்யத் தவறிய அதிமுக அரசு விளம்பரங்களின் மூலமாக அந்த உணர்வை செயற்கையாக ...

பெட்ரோல், டீசல்,கேஸ் விலைகள் சமீப காலமாக தாறுமாறாக உயர்ந்து கொண்டே உள்ளன! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த நிலையில் கூட இந்தியாவில் இவற்றின் விலை அதிகமாகத் தான் இருந்தன! இதற்கு இந்தியாவில் விதிக்கப்படும் கலால் வரி,ஜி.எஸ்.டி.வரி, மாநில அரசுகளின் வரி ஆகியவையே காரணம் என எல்லா ஊடகங்களும் விலாவாரியாக புள்ளிவிபரங்களுடன் எழுதினார்கள். ஆனால், இந்த விலை உயர்விற்கான உண்மையான காரணம் நான் தேடிய வரை எந்த மீடியாவிலும் வெளிவரவில்லை! ஆகவே, உண்மையான காரணம் இது தான் என நான் மட்டும் ...

ஆளும் கட்சியாக இருப்பதால் நம் பண கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம்! நாம் பிரச்சாரம் செய்வதன் மூலம், ஏதோ ஒருவித பங்களிப்பை செலுத்துவதன் மூலம் இங்கே கிடைக்கும் பணத்தைக் கொண்டு நம் கடனை அடைத்துவிடலாம் என் பாஜகவில் அணிஅணியாக சேர்ந்து வருகிறார்கள் சினிமாகாரர்கள்! ஆனால், அப்படி சேர்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதற்கு பிரத்தியட்ச சாட்சியாகிறார் இயக்குனர் கஸ்தூரிராஜா! ராதாரவி இதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்திவிட்டார்..! சமீபத்தில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் அதிக கடன் சுமை தாளாமல் அவர் கொடுத்த ...

பிரிட்டிஷ்காரன் கூட இவ்வளவு பெரிய பேரழிவை தமிழகத்திற்கு 300 ஆண்டுகால ஆட்சியில் ஏற்படுத்தவில்லை! தமிழக வரலாற்றில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட இயற்கையை அழிக்கும் பேரழிவுத் திட்டம் அரங்கேறியது இல்லை! இதை எட்டுவழிச் சாலை திட்டம் என்பதைவிட எட்டு கோடி மக்களின் பேரழிவுத் திட்டம் என்று அழைப்பதே சரியாகும்! முதலமைச்சர் எடப்பாடி சொல்கிறார்; இதில் தமிழக மக்களில் பதினொரு சதவிகிதமானோர் தான் பாதிக்கப்படுகின்றனராம்! ’’அதற்குத் தான் இழப்பீடு தந்துவிடுகிறோமே’’ என்கிறார்! தமிழ் நாட்டை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்! அந்த மனிதனின் ஒரு கால்பகுதியை முழங்கால் ...