கட்டுக்கட்டாக கரன்சிகளையும்,கண்ணைப் பறிக்கும் தங்க கட்டிகளையும் வீடெங்கும் நிறைத்து வைத்திருந்த சேகர்ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார்  குற்றமற்றவராக! ”குற்றமற்றவரை குற்றவாளியாக்கிவிட்டோமே” என தன் தவறுகளுக்காக பாஜக நாணிச் சிவந்து, இல்லையில்லை, கூனிக்குறுகி வெட்கப்படுகிற அழகைப் பாருங்களேன்…! சி.பி.ஐ சிறுமைப்பட்டு நிற்கிறது. ரிசர்வ் வங்கி அசமந்தமாய் முழிக்கிறது.காவல்துறை கைகட்டிப் பார்க்கிறது! ஆகா…,என்ன நடந்தது? இந்தக் கதையை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா? 2016 ல் ஜெயலலிதா மறைவையடுத்து டிசம்பர் 8 ஆம் தேதியே சேகர் ரெட்டி வீட்டிலும்,அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு,கண்டெடுத்தவையாக அறிவிக்கப்பட்டவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! தங்கம் ...

மனிதன் பிறப்பு தொடங்கி உடல் அடக்கம் வரை முக்கியத்துவப்படுவதால்,  பால் புனிதமாகக்  கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, உயிர் காக்கும் அத்தியாவசிய உணவான பால் உற்பத்தி இன்றைய தமிழகத்தில் சுமார் பத்து லட்சம் எளிய விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாகத் தமிழக அரசின்  கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் நிர்வாகத்தை நம்பி சுமார் 4,60,000 ஆயிரம் எளிய பால் விவசாயிகள் வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல,சுமார் 1,50,000 பால் முகவர்களும் உள்ளனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவினில் தற்போது ஊழல்களும், முறைகேடுகளும், மோசடிகளும் காட்டாற்று வெள்ளமாக ஓடுகிறது! ஒரு லிட்டர் ...

இன்றைக்கு அதிமுக தலைமையகத்தில் நடந்த செயற்குழு தொடர்பான காட்சிகளை,காரசார விவாதங்களை,அதன் போக்குகளைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால்… இரண்டே வரிகளில் சொல்வேன்; எடப்பாடி பழனிச்சாமி ஏற்றம் கண்டு வருகிறார் பன்னீர்செல்வம் படியிறங்கி வருகிறார் இந்த முடிவுக்கு நாம் வருவதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும். ஆனால்,இன்று கட்சி அலுவலகத்தை வெளியிலிருந்து யாரும் வேடிக்கை பார்த்திருந்தால், அவர்கள் ஓ.பிஎஸ் செல்வாக்கு தான் கட்சியில்  ஓங்கி இருக்கிறதோ.. என்று கூட எண்ணியிருப்பார்கள்! அந்த அளவுக்கு ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மிகப் பெருந்திரளாக வந்திருந்தனர்.அதாவது வந்த தொண்டர்களில் சுமார் 75%கத்தினர் ஒபிஎஸ் ஆதரவாளர்களாக ...

மாபெரும் இசைக் கலைஞனான எஸ்.பி.பியின் மரணத்திற்குத் தவறான முறையில் தரப்பட்ட அலோபதி மருத்துவச் சிகிச்சையே   காரணம் என்றும், அவர் மருத்துவமனை செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் பரவலான மக்கள் கருத்து உள்ளது! ஆனால்,  அலோபதி என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை அது பற்றித் தெரியாமல் பேசுவது முற்றிலும் தவறு, அறியாமை ….என்றெல்லாம்  பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன! ஒரு கலைஞனின் மரணம், ஊடகங்களிலும் மக்களின் பார்வையிலும் இன்றைய விவசாய மசோதா முதற்கொண்டு பல முக்கிய சமூக பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.  மக்கள் மனம் கவர்ந்த கலைஞன் அல்லவா? இழப்பின் வருத்தம் ...

ஆபத்தான வகையில் ஆளைக் கொல்லும் கொரோனாவுக்குப் பிறகு தான் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் மற்றும் அரசு மருத்துவர்களின் சேவை ஆகியவை தமிழகத்தில் கவனம் பெற்றன! முதல் மூன்று  மாத காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டிருந்தன. சாதாரண நோய்க்குக் கூட தனியார்கள் அப்போது மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். அதே சமயம் அரசு மருத்துவர்கள் அஞ்சாமல் களம் கண்டனர். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கொரானா தொற்றுக்கு ஆளானார்கள்.. இதில் மதுராந்தகம் டாக்டர் சுகுமாறன், தூத்துக்குடி டாக்டர் கல்யணராமன் ஆகிய இருவர் பலியானார்கள்.ஆனபோதிலும் ...

திருச்சி-கரூர் சாலையில் திருச்சி குடமுருட்டி பாலத்திலிருந்து அந்தநல்லூர் வரை 10.80 கி.மீ நீளம்  உள்ள. சாலையை  அகலப்படுத்த 55.75  கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சாலை விரிவாக்க வேலைகள் நடக்கின்றன. இந்த வேலைகளைப் பார்க்கும் போது தமிழக நெடுஞ்சாலைத்துறை மனசாட்சியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஊழலில் திளைக்கிறது என அனைவருக்கும் தெரிய வரும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  மிகவும் வேண்டிய வரான திருக்குமரன் என்பவருக்கு  இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. படுமோசமாக இந்த  சாலைப்பணி   நடைபெறுவதால்  அடிப்படைத் தகவல்களைக்  கேட்டு அய்யாரப்பன் என்கிற சமூக ஆர்வலர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் திருச்சி நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் ...

உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்! இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள்,விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம். மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால்,அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய,பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்! அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்! சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து ...

இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த புரட்சியாளரான பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் நிலைபாட்டை வரலாற்று ஆவணங்களுடன் சொல்லும் நூலை இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி.என்.தத்தா (V.N.Datta) எழுதியுள்ளார். வி.என்.தத்தா எழுதிய ‘Gandhi and Bhagath Singh’ என்ற இந்த நூலை ‘காந்தியும் பகத்சிங்கும்’ என்ற பெயரில் அக்களூர் ரவி மொழிபெயர்த்துள்ளார். பகத் சிங் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சமயத்தில் காந்தியடிகள்  முயற்சித்திருந்தால் பகத்சிங் மரணதண்டனையை தடுத்து இருக்கலாம் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் குறித்து சென்னை ...

பாஜக ஆட்சியில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு உரியவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர் ஆனால்,உச்சபட்ச கொடுமையாக விவசாயிகளையே முதலாளிகள் விலை பேசிவிட தோதாக மூன்று மசோதாக்களை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. எதிர்கட்சிகளோடு பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, தவறுகளை திருத்திக் கொள்ளவோ மத்திய அரசு முற்றிலும் விரும்பவில்லை! மாநிலங்களவையில் 12 கட்சிகள் பதறின..,கதறின..எதுவும் நடக்கவில்லை! சஸ்பெண்டானவர்கள் வெளியில் அமர்ந்து இரவுபகலாக போராடினர். தற்போது 18 கட்சிகள் ஜனாதிபதிக்கு இந்த மசோதாக்களை ஏற்காமல் பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் நடப்பதற்கு வாய்ப்பு ...

எஸ்பி.பியின் மறைவைச் சுலபத்தில் ஒரு சம்பவமாகக் கடந்து செல்லமுடியவில்லை! நினைவு தெரிந்தது முதல் 50 ஆண்டுகளாக  கேட்டு பழகிய குரல்! அந்தக் குரல் காதுகளில் நுழைந்ததா? இதயத்தில் படர்ந்ததா…,ரகசியங்களைப் பரிமாறியதா…?மனதில் உற்சாகம் கரைபுரள வைத்ததா? கண்களில் கண்ணீர் வழிய வைத்ததா…?பயணங்களில் துணையாக வந்ததைச் சொல்வதா? இரவெல்லாம் தூக்கம் வரும் வரை துணை நின்ற கருணையை சொல்வதா? ’’நமச்சிவாய, நமச்சிவாய ஓம் நமச்சிவாய’’ எனப்பாடிய போது பக்தி மனநிலையில் மனம் கசிந்துருக வைத்ததை சொல்வதா…! அவரது மறைவு கோடிக்கணக்கான இசை ரசிகர்களை அதிர்ச்சியிலும், மீளதுயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. ...