நாயைக் குளிப்பாட்டி, அலங்கரித்து நடு வீட்டில் வைத்தாலும் அது தன் புத்தியைத் தான் காட்டுமே அல்லாது வேறெதையும் அதனிடம் எதிர்பார்க்க முடியாது. நாமே நம் கொள்கையை மீறியதால் தான் இன்றைக்கு தேவையில்லாத அவமானங்களை சுமக்கிறோம் என ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் அலுத்துக் கொள்கிறார்கள்! ”சமூகத்தில் அனைவருக்கும் மேலானவன் பிராமணன், நாட்டை ஆள்வதற்கும், காப்பதற்கும் தகுதியானவன் ஷத்திரியன், வியாபாரத்தில் யாரையும் விஞ்சியவன் வைசியன், உழைப்பைக் கொண்டு உற்பத்தி பொருட்களை உருவாக்கித் தந்து சமூகத்தை உய்விப்பவன் சூத்திரன். இது ஆயிரம் காலத்து சூத்திரம். அந்தந்த சமூகத்தின் இயல்புபடி தான் ...

காளிகாம்மாள் கோவில் காம அர்ச்சகர் கார்த்திக்கை காப்பாற்ற முயன்றும், முடியாமல் கைது செய்துள்ளனர். தருமபுர ஆதினத்தின் பாலியல் ஜல்சா வீடியோக்களை கைப்பற்றி, காப்பாற்றியதும் ஸ்டாலினே! கோவில்களையும், கல்வி நிறுவனங்களையும் மட்டுமாவது பாலியல் படுபாதகத்தில் இருந்து காப்பாற்றுமா திமுக அரசு? சட்டம், ஒழுங்கு அமல்படுத்தலில் தமிழகம் எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதற்கு சமீபகாலச் சம்பவங்களே உதாரணம். முக்கியமாக எந்தெந்த இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். கவலையில்லை என நம்புகிறோமோ, அங்கெல்லாம் தான் அதிகபட்ச ஆபத்தை நம் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ள சூழலில் இன்று தமிழகம் உள்ளது. ...

கடைசி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளன்று விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிப் படிமம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாவதே ஒரு நுட்பமான தேர்தல் பிரச்சார உத்தி தான். ஆனால், மதவெறி மனிதன், மனித நேயத்தின் உச்சமான ஆன்மீகத் துறவியைத் தன் அரசியல் பகடைக் காயாக்குவதா? தமிழ் நாட்டின் தென்கோடி ஊரான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தற்போது கலவரப்பட்டு கிடக்கிறது. பாதுகாப்புக் கெடுபிடிகளால் பொதுமக்களின் நடமாட்டங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காபந்து சர்க்காரின் பிரதமராக ...

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். பியூட்டி பார்லர் போகாமலே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் இருந்து தாய்ப் பால் சுரப்பு, பித்த வெடிப்பை சரி செய்தல்.. என ஏகப்பட்ட, வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பயன்படுத்துவது எளிது, பலன்களோ பெரிது; வித்தியாசமான இதன் பேரைக் கேட்டதும், ‘இது அரிசி போன்று இருக்குமோ…’ என்று நினைக்க வேண்டாம்.  இது ஒரு மூலிகையே..! இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என்ற பெயரும் உண்டு. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை ...

வாக்கு எண்ணிக்கையை சொல்லுவதில் குளறுபடி! வன்முறையை தூண்டிவிடும் மோடியை கண்டிக்க பயம், எதிர்கட்சிகளை மிரட்டி பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி..என இந்திய வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையம், தேறாத ஆணையமாக காட்சியளிக்கிறது. ‘பத்துமுறை கூட பிரதமராவேன்..’ என கதையளக்கும் மோடி..! முதல் நான்கு கட்ட வாக்கு பதிவுகளில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த தேர்தல்களின் வாக்காளர்கள் எத்தனை பேர்?, எத்தனை பேர் வாக்கு அளித்தார்கள்? என்ற எண்ணிக்கையை வெளியிடாமல் வாக்கு சதவிகிதத்தை கூட்டியும், மாற்றியும் குளறுபடி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய மூடு ...

சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த ...

”அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் 25 புகார்கள் அளித்திருந்தது. இந்த மூன்றாண்டுகளில் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதிமுக ஊழல்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளை பாதுகாக்கும் திமுக, தற்போது தானும் ஊழலில் திளைக்கிறது” -அறப்போர் ஜெயராமன்; ஊழலுக்கு எதிராக போராடி வரும் அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டில், அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அதானி நிறுவனமும் இணைந்து, நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததை அம்பலத்திற்கு கொண்டு வந்தது. 1.2 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை ...

”சந்தேகமில்லாமல் மீண்டும் பாஜக தான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எனப் பேசப்பட்ட நிலைமாறி, ”தற்போது பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை” என்ற பேச்சும், ”தோல்வி பயத்தில் மோடி படு அபத்தமாக பேசுகிறார்” என்பதற்கும் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் – மோடி மோதல் ஒடிக் கொண்டிருக்கிறது; ”மோடி அமித்ஷா கூட்டணிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் மோதல்” என்பது ஒரு வதந்தி அல்லது எதிர்கட்சியில் உள்ளோர் சிலர் பரப்பும் கட்டுக் கதையாக இருக்கலாம். ஏனென்றால், பாஜகவின் தாய் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் தான்! பாஜகவின் அடித்தளமே ஆர்.எஸ்.எஸ் தான். ...