பாஜக அரசு ஒரு கட்சியை அழிக்கவோ, அடிமைப்படுத்தவோ விரும்பினால் அவர்கள் டார்கெட் செய்வது அந்த கட்சியில் உள்ள ஊழல் பெருச்சாளிகளைத் தான். அதை திமுகவும் அறியாத கட்சியல்ல. ரெய்டுகள், விசாரணைகள், கைதுகள்..எல்லாம் செய்யப்பட்ட குற்றத்துக்காகவா? செய்ய வேண்டிய குற்றத்திற்காகவா..? செந்தில் பாலாஜியை சிறைக்கனுப்பிய கையோடு பொன்முடியை அடுத்த டார்கெட் செய்துள்ளது அமலாக்கத் துறை! பாஜக அரசு எந்த மாதிரி செயல்படுகிறது என்பதற்கு இந்த இரண்டு அமைச்சர்கள் விவகாரத்தில் அமலாக்கத்துறை அணுகுமுறைகளே உதாரணங்களாகும்! அதாவது, இவர்கள் விசாரணைக்கு தூக்கும் அமைச்சர்கள் தற்போது உச்ச பட்ச ஊழலில் ...

பாஜக அரசின் பாசிசப் போக்குகள் அமெரிக்காவில் நன்கு கவனம் பெற்றுள்ள நிலையில் மோடியை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதாம் அமெரிக்க அரசு! மோடி அமெரிக்கா சென்று போது மோடியின் ஆட்சி பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அலசி எழுதியது பிரபல அமெரிக்க ஊடகம். அதன் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கே; ஜுன் 22, 2023 அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளித்தார். பிரான்ஸ் மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கு அடுத்து, இப்பெருமையைப் பெறும் மூன்றாவது தலைவர் மோடி. ...

சுற்றுச் சூழலும், சமூகச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன! தலை வலி, உடல் வலி, மூட்டு வழி, மூச்சுத் திணறல் போன்ற பல வகை பாதிப்புகளுக்குமான அரியதொரு நிவாரணி தான் மின்சாரத் தைலம்! இதை பெரிய செலவில்லாமல் நாமே மிக சுலபமாக தயாரித்துக் கொள்ளலாம். சித்த மருத்துவத்தில்  உடல் வலியை நீக்கக்கூடிய, மேலே தடவ கூடிய  வெளி பூச்சு மருந்துகள்  நிறைய உள்ளன. அதில் முக்கியமான தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ,ஜலதோஷம் , ஆஸ்துமா, மூச்சுத் திணறல், ...

தமிழ் மக்களின் நெடுநாளைய விருப்பம், பல்லாண்டு கோரிக்கை, சித்த மருத்துவ பல்கலைக் கழகம்! ஆளுநர் மட்டுமா, இதற்கு முட்டுக்கட்டை? எத்தனை எதிர்ப்புகள்..! ஆயுர்வேத கல்விக்கு பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு, சித்த மருத்துவத்திற்கு ஏன் தடைகளுக்கு மேல் தடை போடுகிறது..? சமீபத்தில் சென்னையில் (ஜுலை 12) தமிழகத்தின் புகழ்பெற்ற சித்த மருத்துவர்கள் ‘சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகைக் குழு’ என்ற பேனரில் ஒன்று கூடி, சித்த மருத்துவ பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதில் உள்ள தாமதத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ...

ஒரு விசாரணை  அனுமதிக்கே அமலாக்கத் துறைக்கு ஒருமாத நீதிமன்றப் போராட்டம் நிர்பந்திக்கப்பட்டது ஏன்? இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட பேரங்கள் என்ன..? பழைய வழக்கிற்காக மட்டும் விசாரணையா? டாஸ்மாக் கொள்ளை விவகாரமும் உள்ளதா..? செந்தில் பாலாஜி தம்பியை விட்டுப் பிடிப்பது ஏன்? இன்றைக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழங்கி இருக்கும் தீர்ப்பு யாரும் எதிர்பாராததல்ல. இந்த நியாயத்தை சொல்ல பெரிய திறமையோ, சட்ட அறிவோ அவசியமில்லை. கடத்தப்பட்டு, கண் காணாத இடத்தில் வைத்திருக்கப்படும் நபரை கண்டுபிடித்துக் கொடுக்க போடப்படுவது தான் ஆட்கொணர்வு மனு. அனைவரும் அறிய ...

தமிழ்நாட்டின் முன்னணி கல்வியாளர்கள் ஒன்று கூடி, ‘மக்கள் கல்வி கூட்டியக்கம்’ ஆரம்பித்துள்ளனர். வணிக நோக்கத்திலான தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ் நாட்டிற்கான தனித்துவமான கல்வி கொள்கை உருவாக்கத்தின் முயற்சியில் கிளைத்துள்ள இந்த இயக்கம் சொல்லும் செய்தி என்ன..? முன்னோட்டம் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றைப்  பின்னோக்கிப் பார்த்தால் , மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து எதிர்ப்பு தெரிவித்த‌ குரல்களும், அமைப்புகளும் ஏராளம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு தான் கூடுதல் ஒலியுடனும், வலிமையுடனும் எதிர்த்து ...

ஓராண்டு கடந்தும் ஓயாத பெரு நெருப்பாய் மக்கள் நெஞ்சங்களில் கழன்று கொண்டிருக்கிறது  மாணவி ஸ்ரீமதியின் கொலை. அதிகார அழுத்தங்கள், நெருக்கடிகள், தடைகள் அனைத்தையும் மீறி, ஸ்ரீமதியின் முதலாமாண்டு நினைவஞ்சலி நடந்துள்ளது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் திமுக அரசுக்கு ஏற்பட்ட தைரியம்  இதில் தொடருமா..? காலம் கடந்த போதிலும், ஆலம் விழுதைப் போல ஆழமாக வேறூன்றி நிற்கும் ஆகிருதியாய் ஸ்ரீமதி திகழ்கிறாள் என்பதற்கு சாட்சியாய் நேற்றைய தினம் அவளது முதலாமாண்டு நினைவு தினம் ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலியோடு நிகழ்ந்துள்ளது. ஒரு தனிப்பட்ட மாணவியின் மரணம் தமிழக ...

சாதிப் பகைமைகளை கூர்மைபடுத்தி படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், இரு முரண்பட்ட சாதிகளுக்கு இடையே, சாதியைக் கடந்த நட்பும், நேசமும் சாத்தியமானதே என காட்டுகிறது இப்படம். நட்பு, காதல், அரசியல், சாதி ஆணவம், துரோகம்.. என ஒரு கிரைம் திரில்லரான இந்தப் படம் சொல்ல வரும் செய்தி என்ன? சாதிப் பிரச்சினைகளில் உழலும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஒன்றான தெக்குப்பட்டியில் வசிக்கும் மூர்க்கசாமியும் (அருள்நிதி), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) ஆத்ம நண்பர்கள். ஒடுக்கப்பட்ட  தனது மக்களை தன்மானத்துடன் வாழப் பாடுகிறார் பூமிநாதன். இதற்கு ஆதிக்கச் சாதியைச் ...

இந்திய சிறைகளில் 4,27,000 பேர் ஆண்டுக்கணக்கில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். ஆனால், ‘ஒருவருக்கு அதிகாரமும், பணபலமும் இருந்தால், இந்த நாட்டில் எப்பேர்ப்பட்ட குற்றமும் செய்துவிட்டு காவல்துறை, விசாரணை அமைப்புகள், நீதிமன்றம்..  அனைத்திற்கும் போக்கு காட்டலாம்..’என்பது நிருபணமாகி வருகிறது..! இன்றைக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் கபில்சிபில் தன் வாதங்களை வைத்தார். நாளை அமலாக்கத் துறை சார்பில் துஷார்மேத்தா வாதம் வைக்க உள்ளார். இதற்கிடையே அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தரப்பட்டுள்ளது. ஆக, கடந்த ஒரு மாதமாக உயர் நீதிமன்றம், ...

மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது. இதில் சாதியக் கட்சிகளின் ஆதாய அரசியல் முடிவுக்கு வருமா? சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த சுதந்திரம் சென்று சேரவில்லை என்பதை தான் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்படும் விவகாரங்கள் உணர்த்துகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் அருகே மேல்பாதி  கிராமத்தின் ...