ஏனிந்த உறவு? எதற்கிந்த பிணைப்பு? ஒத்த கொள்கையா? ஒருமித்த லட்சியமா? மக்கள் நலனா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் என்ன பதில் இருக்கிறது..? அவமானங்கள், இழப்புகள், அலைகழிப்புகளைக் கடந்து ஏன் தொடர்கிறது அதிமுக-பாஜக உறவு..? இந்த அவலங்களின் மூலம் என்ன..? ”ஜெயலலிதா குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்” எனப் பேசி அதிமுகவினரை சீண்டியுள்ளார் அண்ணாமலை! இதற்கு அதிமுக தலைவர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜி., சிவி.சண்முகம் உள்ளிட்டவர்கள் கோபாவேஷமாக அண்ணாமைலையை எதிர்த்து அறிக்கை தந்துள்ளனர்! அதிமுவால் இப்படி அறிக்கை மட்டும் தான் கொடுக்க முடியும்! இதை நன்கு ...

போக்குவரத்துறையில் வேலை தருவதாக பண மோசடி செய்தது, டாஸ்மாக்கை சூறையாடி வருவது.. என ஏகத்துக்கும் ஆட்டம் போட்டவர் செந்தில் பாலாஜி!  இந்த கைது விவகாரத்தில்  யார், யாரை கைவிடுவார்கள்?  பாஜகவின் பேரத்திற்கு அடிபணியப் போவது செந்தில் பாலாஜியா? ஸ்டாலினா? விதிவசத்தால் நமக்கு மிக நெருங்கிய நண்பர்கள் கூட செய்ய முடியாத நன்மையை  நாம் எதிரியாக கருதும் ஒருவர் செய்துவிடுவதுண்டு! டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக போலி மதுவை விற்று, ஆறு உயிர்கள் பலியாக காரணமான ஒரு கிரிமினலின் கைது, கொண்டாட வேண்டியதா? கூப்பாடு போட வேண்டியதா? ...

 தன்பாலினத்தார்கள் உலகம் முழுமையும் கோடிக்கணக்கில் உள்ளனர். இந்தியாவில் 1.35 கோடி பேர் உள்ளனர்!  இன்னும் இவர்களுக்கு சமூக அங்கீகாரமோ, சட்ட அங்கீகாரமோ  நிறைவாக  கிடைக்கவில்லை. பலவித சவால்களை, பிரச்சினைகளை, அவமானங்களை சந்திக்கும் இவர்களை எப்படி புரிந்து கொள்வது..? ஒரு காலத்தில் மூன்றாம் பாலினத்தவரை அலிகள், ஆண்மையற்றவர்கள், ஒன்பது..என்றெல்லாம் வசைபாடி ஒதுக்கி வைத்திருந்தது  நம் சமூகம். பிறகு அவர்கள் ‘திருநங்கைகள்’ என அங்கீகாரம் பெற்றனர். கார்த்திக், கிருஷ்ணா என்ற இரு இளைஞர்கள் கடந்த ஜூலை மாதம் ஊரறிய தாலிக்கட்டி, மெட்டி போட்டு, சேலத்தில் கடந்த வருடம் ...

சனாதன நீதிபதிகள்! சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கைகள்! அரசமைப்பு சட்டமெல்லாம் படிப்புக்கும், பேச்சுக்கும் தானா? நடைமுறை யாவும் பழம் பஞ்சாங்கமும், சாஸ்திரங்களும் தாமா? இந்திய நீதித் துறையில் சில நீதிபதிகள் நமது சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கின்றனர் என்பதற்கு இந்த இரு வழக்குகளின் தீர்ப்புகளே சாட்சி! சமீபத்தில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இருவர் வெவ்வேறு வழக்குகளில்  வழங்கிய உத்தரவுகள் மிகவும் கலக்கத்தை அளிக்கிறது. காரணம், இந்த உத்தரவுகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமையாமல்,சனாதானத்தின் அடிப்படையிலும், மனுஸ்மிருதியின் அடிப்படையிலும்  அமைந்துள்ளது தான். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச ...

ஆவின் தற்போது ஊழல், ஊதாரித்தனம், மோசடி, பித்தலாட்டம்..என சீரழிந்து வருகிறது! தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களே கொடி கட்டி பறக்கின்றன! இந்த நிலையில் பிரபல அமுல் நிறுவனத்தின் வருகையை தமிழக பால் விவசாயிகள் எப்படி பார்க்கிறார்கள்? ஆவின் தன் அழிவுப் பாதையில் இருந்து மீளுமா..? பால் விவசாயிகள் பால் நுகர்வோர்வோர் ஆகிய இரு தரப்பினரும் பயனடையும் விதத்தில் காமராஜரால் 1956ல் தொடங்கப்பட்ட பால் வளத்துறை 1981ல் எம்.ஜி.ஆர் காலத்தில் மூன்றடுக்கு கூட்டுறவு நிர்வாக அமைப்பாக விஸ்வரூபம் எடுத்தது. அமுல் நிறுவனம் தமிழகத்தில் காலடி பதிக்க ...

ஊடகச் சுதந்திரம் மிகுந்த கவலை அளிக்கிறது. சமூக ஊடகங்கள் ஜனநாயக வெளியை உருவாக்கி உள்ளன. ஒரு சில யூ டியூப் சேனல்கள் தவறான செய்திகளை பரப்புகின்றன. ஒரு சிலரை திட்டமிட்டு அவதூறு செய்கின்றன. இன்றைய ஊடகங்களின் உண்மையான நிலை குறித்து பத்திரிகையாளர் விஜயசங்கர் பேச்சு! பத்திரிகையாளரான விஜயசங்கர் ராமச்சந்திரன், ஃப்ரண்ட் லைன் இதழில் பல்லாண்டுகள் பணியாற்றியவர்.  “தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்”  என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச – காப்பீட்டு கிளை)  சென்னை சூளைமேட்டில் நடத்திய கூட்டத்தில் ...

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை திமுக அரசின் மீதான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? திமுக அரசின் மீது, முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் மீது ஆளுநருக்கு ஏன் இவ்வளவு பாசம், அக்கறை என நான் ஆச்சரியப்படுகிறேன். ஆளுநர் தன்னுடைய கர்ண கடூரமான, முட்டாள்தனமான, ஏற்றுக் கொள்ளவே முடியாத அடாவடி பேச்சுக்களின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் தன்பால் திருப்பிக் கொள்கிறார்! எதையாவது அடிக்கடிப் பேசி, நம் அனைவரையும் சரியாக உசுப்பிவிடுகிறார்! அடுத்த பத்து, பதினைந்து நாட்களுக்கு அதுவே நமது ...

இது கொரோனா கால முடக்கத்தில் மக்கள் சந்திக்க நேர்ந்த கொடூரங்களை சொல்கிறது! அன்று அதிகார வர்க்கம் போட்ட ஆட்டங்கள்! மத துவேஷங்களை பரப்பிய நிகழ்வுகள், மோசமான நிர்வாக அணுகுமுறைகள், எளிய மக்கள் அலைகழிக்கப்பட்ட துயரங்கள்.. போன்றவை கலை நேர்த்தியோடு  காட்சிப்படுகிறது! விடுதலைக்குப் பிறகு, இந்தியாவில், கொரோனா காலத்தில்தான், ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவே இடம் பெயர்ந்தனர். அதனை ‘பீட்’ ( BHEED) என்ற திரைப்படமாக எடுத்துள்ளார் அனுபவ் சின்ஹா. பீட் என்ற இந்தி சொல்லுக்கு கூட்டம் அல்லது கும்பல் என்பது பொருளாகும். பெருந்தொற்று கால நினைவுகளை ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போட்டி அரசா ஆளுநர் மாளிகை? அல்லது எதிர்கட்சி அரசியல் தலைவராகும் ஆசையா? அல்லது அவ்வப்போது கவனம் கவரும் அதிரடி அரசியல் ஆசையா? சட்டப் பூர்வமான ஆட்சியை சாய்த்து, சனாதன ஆட்சிக்கான வேட்கையா..? என்ன தான் திட்டம் வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி? 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், எதிர்க்கட்சி மாநில அரசுகளை எல்லாம் ஆளுநர்கள் ஆட்டி வைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு முரணானது. காங்கிரசின் ஆட்சி காலத்தில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் ஆளுநர்கள் இப்போது நடப்பது போல செயல்படவில்லை. ...

மணிப்பூர் கலவரம் எண்ணற்ற பழங்குடி மக்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. தேடித் தேடி அழிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ  தேவாலயங்கள், வெளியேற்றப் பட்டுள்ள கிறிஸ்துவர்கள், தீக்கிரையாக்கப்பட்டுள்ள அவர்களின் சொத்துக்கள் … சொல்ல வரும் செய்தி என்ன? ஏராளமான இளைஞர்களின் எதிர்காலத்தை தொலைத்துள்ளனர். கணக்கற்ற இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கும், தாக்குதலுக்கும் பலியாகி உள்ளனர். குழந்தைகள் நிர்கதியாகியுள்ளனர். இக்கலவரம் கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தவரும் சந்திக்காத கொடுமை என்ற போதும், கலவரம் 2002 குஜராத் கலவரத்தின் சாயலைக் கொண்டுள்ளதாக பத்திரிக்கையாளர்கள் வருணித்துள்ளனர். ஆனால், இக் ...