முதலில் அந்த மண்ணில் அவர்களின் கீதம் தான் முதலில் போட வேண்டும். அதன் பிறகு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது’ என்றார். பிறகு, ”பாடல், மெட்டு சரியில்லை, நான் தான் நிறுத்த சொன்னேன். பாடல் சரியில்லாததால் மீண்டும் ஒலிபரப்பவில்லை” என்றார்! தமிழ் அமைப்புகளின் அந்தக் கூட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன? கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வாழும் ஷிவமொக்கா நகரில் தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்த – பெருந்திரளாக தமிழர்கள் மட்டுமே ...

அன்பு மனைவியின் மரணத்திற்கு பிறகு தற்கொலைக்கு விரும்புகிற ஓட்டோ என்ற இந்த சிடுசிடு முதியவர், இனிய சுபாவமுள்ள இளம் தாயான எதிர்வீட்டுப் பெண்னோடு பழக நேர்கிறது! எதிலும் கறாரான ஓட்டோ, வாழ்வில் புதிய பரிமாணங்களை உணர்கிறார். அவர் இறந்தாரா? இல்லை, மீண்டும் வாழ்வை நேசிக்கிறாரா? என்பதே கதை! தனது மரணத்தை அறிந்த ஒருவன், இறுதிக்காலத்தை எதிர்கொள்ளும் கதை என்று சொல்லலாம்.  டாம் ஹாங்ஸ் ஓட்டோ என்கிற பாத்திரத்தில்  நடித்துள்ள படம் A Man Called OTTO. ஆகச் சிறந்த நடிப்பை வழங்கி ஒட்டு மொத்த ...

ஏதோ ஒரு சில ஊழல் கறைபடியாத நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற ஆறுதலை நமக்கு தந்து கொண்டிருந்தவர்களில் பிடிஆர் தியாகராஜனும் ஒருவர். பணம், காசை அள்ளி இறைக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றவர்! இன்று சுயமரியாதயைத் தொலைத்துக் கொண்டவர்! என்ன செய்திருக்க வேண்டும் பிடிஆர்? பிடிஆர் பணம் செலவு செய்யாமல் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தொகுதி மக்களிடையே நம்பிக்கையை பெற்றவர் என்பதை அலட்சியப்படுத்த முடியாது! அப்படிப்பட்டவரின் இமேஜ் இன்று தரைமட்டமாக நொறுங்கிவிட்டது! ஐயோ பரிதாபம்! லஞ்சம், ஊழல் செய்து சம்பாதிக்க நினைக்காத அவருக்குக்கா இந்த நிலைமை ...

மனிதாபிமானம் இல்லாமல் தொழிலாளர்களின் வேலை நேரத்தை இஷ்டப்படி முதலாளிகள் அதிகப்படுத்திக் கொள்ள பாஜக அரசு படிப்படியாக சட்டங்களை திருத்தி, காய் நகர்த்தி வந்தது. அதைத் தான் தமிழக அரசுக்கு நிர்பந்தித்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு சட்டம் தந்த பாதுகாப்புகள் என்னென்ன? அதை தகர்க்க நடக்கும் பின்னணி என்ன? உலகில் மேற்கத்திய நாடுகள் தொழிலாளர்களின் உழைப்பு நேரத்தை குறைத்து வருகிறார்கள்! அளவாக வேலை வாங்கப்படும் தொழிலாளர்கள் உடல், மன ஆரோக்கியத்துடன் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்! ஆனால், இங்கோ எவரும் எதிர்பார்த்திராத வகையில் 12 ஏப்ரல் 2023 அன்று தமிழ்நாடு சட்டசபையில் ...

கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களா ஆளுநர்கள்? பாஜக அரசு அல்லாத மாநிலங்களிடம் பாரபட்சம் காட்டுவதா? எத்தனை நாட்கள் வரை மசோதாவை வைக்க முடியும்? இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு சொல்வதென்ன..?தெலுங்கானா அரசு தொடுத்த திருப்புமுனை வழக்கின் விபரங்கள்! தெலுங்கானா அரசு, கவர்னர் தமிழிசைக்கு எதிராக தொடுத்த வழக்கில் 24-ஆம் நாள் ஏப்ரல் 2023 அன்று உச்ச நீதிமன்றம் கவர்னர்களின் தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது. தெலுங்கானா அரசு போட்ட வழக்கில் தமிழிசைக்காக வாதாடிய ஒன்றிய அரசின் வழக்குரைஞர் துஷார் மேத்தா, ...

மத்திய அரசின் ரயில்வே மைதானத்தில் சிறப்பு அனுமதி பெற்று திருச்சியில் மாநாடு கூட்டியுள்ளார் ஒ.பி.எஸ்! மாநிலத்தில் ஆளும் திமுக அரசின் சகல ஒத்துழைப்போடும் சட்டத்திற்கு புறமாக இரட்டை இலைச் சின்னம், அதிமுக கொடியைப் பயன்படுத்தி மாநாடு காண்கிறார். திருச்சி மாநாடு சொல்லும் செய்தி என்ன? இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நடிகர் சிவாஜி என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்! ஆனால், அவர் பாவம் காமிராவின் முன்பு மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். நடைமுறையில் ஒரு சிறிதும் நடிக்கத் தெரியாத அப்பாவி. இதை நான் அவரை பல ...

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகள் அனைத்தையும் தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் திமுக அரசால் சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியுள்ளது. இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்! தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் சுற்றுச் சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற ...

தலித்கள் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினாலும், சாதி தகுதியை இழக்கமாட்டர் என்கிறது தமிழக அரசு. உண்மையில் மதம் மாறியதற்காக ஒருவருக்கு தரப்படும் தண்டனையாக சாதி இழப்பு இது வரை கருதப்பட்டது…! அதே சமயம் கிறிஸ்த்துவ தலித்களை அங்கீகரிப்பது மதமாற்றத்தை ஊக்கப்படுத்துவதாகுமா? தற்போது தமிழ்நாடு சட்டசபை ஒரு வரலாற்று முக்கியத்துவமான தீர்மானத்தை 18 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவர்களை, பட்டியல் இனத்தவர்களாக கருத வேண்டும் என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு ஒன்றிய ...

எண்ணிக்கையில்லா என்கெண்டர்கள்! அச்சத்தின் பிடியில் எளியோரை வைத்திருப்பது, அரசியல் எதிரிகளை அராஜகமாக சுட்டுக் கொல்வது, அடங்க மறுத்தால் பொய் வழக்கு போடுவது, ஆட்சி நிர்வாகத்தை அலங்கோலமாக்குவது…என்று அதகளப்படுத்துகிறார் உ.பியின் காவி முதல்வர் யோகி ஆதித்தியநாத்! உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கு மட்டும் சீரழிந்து விடவில்லை. ஒட்டு மொத்த நிர்வாகமுமே முடமாகி உள்ளது. ஆட்சியாளர்கள் மனமெல்லாம் ஆதிக்கம் செலுத்துவது மத உணர்வோங்கிய மேல் சாதி வெறித்தனங்கள் மட்டுமே! இவற்றில் ஜனநாயக செயல்பாடு, பொதுநலன், சட்டத்தின் ஆட்சி ஆகியவை செத்தொழிந்து விட்டது. முஸ்லீம் ...

பாஜகவின் தேசபக்த நாடகங்கள்! இவர்கள் இஸ்லாமியர்களை அணுகும் விதம், அம்பானி, அதானிகளுக்கு தரகு வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ், மோடியின் போதாமைகள்.. போன்றவை பற்றியெல்லாம் எதிர்கட்சிகள் என்ன வேணா பேசலாம். ஆனா, அந்த கூடாரத்திற்குள்ளேயே இருக்கும் ஒருவர் மனம் திறந்து வெளிப்படுத்துவது தான் அபாரம்! ஜம்மு காஷ்மீர், பீகார், கோவா போன்ற மானிலங்களின் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். ஆரம்பத்தில் சரண்சிங்கின் சீடராக செயல்பட்ட இவர் பிறகு காங்கிரசில் இணைகிறார். போபர்ஸ் ஊழல் வெடித்த நேரம் காங்கிரசில் இருந்து விலகி வி.பி.சிங்குடன் ஜனதாதளத்தில் செயல்பட்டவர்.இதன் பிறகு ...