நீதிபதிகளை நாம் கடவுளுக்கு இணையாகப் பாவிக்கிறோம்! அரசாங்கமே தவறு செய்தாலும், நீதிமன்றத்தில் நியாயம் பெற்றுவிடலாம் என நம்புகிறோம். ஆனால், நீதிபதிகளோ, அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத கூட்டாளியாக தீர்ப்புகள் தருவதும், அதற்கு பிரதியுபகாரமாக பதவிகள் பெறுவதும் நீதித் துறையின் மீதான நம்பிக்கைகளை சிதைத்துவிடாதா? அரசியல்வாதிகளைக் கூட தண்டிக்க வழியுண்டு மக்கள் மன்றத்தின் வழியே! ஆனால், நீதிபதிகளை தண்டிப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நமது அரசியல் சட்டத்திலேயே ஆகச் சிறந்த பாதுகாப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு வசிக்க பங்களா, கார் உள்ளிட்ட ...

சைபீரியா என்றால் தூங்கும் நிலம் என்று பொருள். உண்மையில் தன்னுள் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்து, இந்நிலம் தூங்கிக் கொண்டுள்ளது. அதை எழுப்பி விடாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது..! அதை ஒரு வேளை எழுப்பிவிட்டால், அவ்வளவு தான்…! மனிதகுலம் பூமியில் வாழ்வதே சவால்! ஏன்? சைபீரிய உறைபனி நிலத்தை உலகின் மிகப்பெரிய ஃபிரீசர் என்றே கூறலாம். ஏனெனில், தன்னுள் புதைந்துள்ள தாவர மற்றும் விலங்கு படிமங்களை பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக, இந்நிலம் மிக அழகாக பதப்படுத்தி வைத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்துவிட்ட பெரு ...

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மூன்றாண்டுகளில் மூன்று லட்சத்து 44 ஆயிரம் பேர்  தற்கொலை செய்துள்ளனர்! இதில் கூலித் தொழிலாளிகள், குடும்பத் தலைவிகள், சிறு தொழில்முனைவோர், மத்திய தரவர்க்கத்தினர், வேலை இல்லாதோர், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் அடக்கம்! பாஜக அரசு கட்டமைக்க விரும்பும் தேசம் இது தானா? அன்றாடங் காய்ச்சிகள் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அமைப்பு சாரா பல கோடி தினக் கூலி தொழிலாளிகளைக் கொண்டது நம் தேசம்! இது தவிர சிறு, குறு தொழில்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களானாலும், மெத்த படித்தவர்களாக ...

நெடுமாறன் ஏன் இப்படிப் பேசுகிறார்? நெடுமாறனை பேச வைத்தது யார்? அவர்களின் நோக்கம் என்ன? யாருடைய தேவைக்கு பிரபாகரன் மீண்டும் உயிர்பிக்கப்படுகிறார்? இலங்கை பிரச்சினையில் பாஜக அரசின் தந்திரோபாயங்கள் என்ன? 2009 ஆம் ஆண்டு நடந்த உக்கிரமான போரின் இறுதியில் சமாதானத்திற்கு அழைக்கப்பட்டு கொடூர முறையில் கொல்லப்பட்டனர் விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர்களும், அவர்களை சார்ந்திருந்த சுமார் 40,000 மக்களும்! இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் அழிவைத் தடுக்க அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்ற தகவல்கள் அன்று ...

விருப்பு, வெறுப்பின்றி கருணாநிதியின் படைப்புகளை மதிப்பீடு செய்யலாம்! இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடம் என்ன? திரைத்துறை சாதனையாளர்கள் வரிசையில் கருணாநிதியின் இடம் என்ன? அவரது படைப்புகளில் காலத்தால் மறையாத இலக்கியம் என்று சொல்லத் தக்கவை என்ன..?  கருணாநிதிக்கு கடலுக்குள் பேனாச் சின்னம் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது! திராவிட இயக்க படைப்பாளிகளில் கருணாநிதியின் இடம் என்ன? பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, சி.பி.சிற்றரசு, எஸ்.எஸ்.தென்னரசு ,ஏ.கே.வில்வம், ராதாமணாளன், டி.கே.சீனிவாசன்.. என்ற வரிசையில் இவர்களை விஞ்சியவராக கருணாநிதியைச் சொல்ல முடியுமா? காலவெள்ளத்தில் ...

அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி வேகம் எடுத்துள்ளது. ‘இந்தியாவில் உள்ள 22 மொழிகளை இல்லாமலாக்கி, இந்தியை மட்டுமே ஒற்றை ஆதிக்க மொழியாக்கும் முயற்சி எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்பதை  விவாதிக்க தாய்மொழிகளை பாதுகாக்கும் மாநாடு நடக்க உள்ளது! இந்தியா மொழிகளின் தேசம். இந்தியா என்ற இப் பிரதேசம் உண்மையில் உலக நாகரீகத்தின் தொட்டில். 65,000 ஆண்டுகளாக இங்கே பல்வேறு வகையிலான மனிதர்களின் இடப் பெயர்ச்சி நடந்து கொண்டே இருந்துள்ளது.  இதன் காரணமாக எத்தனை, எத்தனையோ அறிவுத் துறைகளும், மொழிகளும், சிந்தனைகளும் ...

ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர் ஈரோடு கிழக்கு தொகுதியில்  மிகப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து விட்டார், ஓபிஎஸ் என்கிறார்களே..? அவர் விட்டுக் கொடுக்க முன் வந்தது பாஜகவிற்கு! அவர்கள், அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் எடப்பாடியின் அதிமுகவிற்கு! முட்டி மோதி முயன்றார், அதிமுகவின் சரிவிற்கு! ஐயோ பாவம்! அதில் அவரே சரிந்து போனார் ! விட்டு ஓடுவதை தவிர வேறு வழியில்லை ஓபிஎஸ்க்கு! லஷ்மணன், பெங்களூர் மக்கள் நீதி மையம் திமுகவை ஆதரிக்கிறதே..? ஐயோ பாவம்! நிலைமை இப்படி ஆகிவிட்டது! பாபு, புதுக்கோட்டை ஷாக்கடிக்கும் தகவல் ஏதாவது ...

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளை சற்றுக் கூடுதலாகவும், விவரமாகவும் பேசி கருத்தை கவருபவர் சீமான்! திமுகவும், அதிமுகவும் நீர்த்துப் போய், அம்பலமான நிலையில், மக்கள் புதிய ஒரு அரசியல் கட்சியை எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பிற்கு தக்கவராக சீமான் தோற்றம் காட்டுகிறார்! ஆனால், அவர் நம்பகத்தன்மையானவரா? தன்னை ஒரு சாதியவாதியாகவும், ஆர்.எஸ்.எஸ்காரனாகவும் வெளிப்படுத்திக் கொண்டு, பாஜகவின் வளர்ச்சியே தன் ஊடகச் செயல்பாட்டின் அடித்தளம் என்று எப்போதும் பொய், புரட்டுகள் பேசி பிழைப்பு நடத்தும் ரங்கராஜ் பாண்டே, ”ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுகவை ...

உலக உருண்டையில் நான்கில் மூன்று பங்கு (72 %) நீரால் ஆனது. அதில் பெரும்பகுதி கடலாக உள்ளது. இது இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்று. கடல் பூமியின் பருவ நிலையைச் சீராக வைப்பதோடு மட்டுமல்லாமல் காற்றைச் சுத்தப்படுத்தவும், உணவு வழங்கவும் உதவி செய்து கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுமிடமாகவும் இருக்கிறது. நுண்ணுயிரி முதல் உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் வரை கடலில்தான் வாழ்கின்றன. இந்த பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ சம உரிமை உள்ளபோதும் உயிரினங்களின் இறுதித் தோற்றமாகிய மனிதனின் அளவு மீறிய நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக ...

தில்லி மாநகராட்சியில் அறுதி பெரும்பான்மையாக ஆம் ஆத்மி  தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் மேயரை தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்ய முடியாமல் பல முட்டுக்கட்டைகள்.  மக்கள் பணிகள் ஸ்தம்பித்துள்ளன! ஆள் தூக்கும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், மாநகராட்சியை கலைக்குமா பாஜக? ஊரை கொள்ளையடித்து “உலை” யில் போடும் அதானி பற்றியும் அதற்கு துணை போன மோடிஅரசு பற்றியும் நாடே பரபரப்பாக விவாதிக்கும் வேளையில் நாட்டின் தலைநகரான புது தில்லியில் ஜனநாயகத்தின் குரல்வளை  மோடி கும்பலால் நெறிக்கப்படுவதும் நடைபெற்றுவருகிறது! உத்தமர் மோடியின் கழுகுப் பார்வையில் ...