தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை உரிமையற்றவர்களாக்குகிறது. தொழிற்சங்கங்களை முடமாக்குகிறது.தொழிலாளர்களை முற்றிலும் பாதுகப்பற்றவர்களாக ஆக்கியுள்ளது. இது போன்ற மோசமான சட்டங்களை நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசே கூட நினைத்துப் பார்த்திருக்காது! இந்தச் சட்டங்கள்  உணர்ச்சியுள்ள எந்த தொழிலாளியையும் எரிமலையாக்கும் என்பது நிச்சயம்…..! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மூன்று முக்கியமான தொழிலாளர் சட்டங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.. அதுவும் வேளாண் சட்டங்களை அரசு நிறைவேற்றிய முறையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு அவை புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போது சந்தடி சாக்கில் விவாதங்களேயின்றி இந்தச் சட்டங்கள் ...

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் விற்கச் செல்லும்போது அசல் சிட்டா-அடங்கல் ஆவணம் வேண்டுமென   மாவட்ட ஆட்சியர் கெடுபிடி செய்வதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ கண்டன அறிக்கை வெளியிடுள்ளார். டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடந்துவரும் இந்த வேளையில், தஞ்சை உள்ளிட்ட பெரும்பாலான . டெல்டா மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க செல்லும்போது விவசாயிகளிடம் நகல் (Xerox) சிட்டா- அடங்கல் இருந்தால் போதும் என்ற உத்திரவு அங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் திருவாரூர் ...

எந்த ஒரு இயக்கமும் ஜனநாயகத்திலும்,வெளிப்படைத் தன்மையிலும் எவ்வளவு உறுதியோடு இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் அது குறித்த மதிப்பீட்டிற்கு நாம் வரமுடியும்! பாராளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதித்து, விவாதத்தின் பயனா சில திருத்தங்கள்,மாற்றங்களைச் சேர்த்து முழுமைப்படுத்துவது என்பது தான்  இதுவரையிலுமான மரபாகும்! ஆனால், இந்த மரபைத் தூக்கிவீசி எறிந்துவிட்டு, நான் வைத்தது தான் சட்டம். விவாதத்திற்கே இடமில்லை  என்று பாஜக அரசு செயல்படுவதை PRS Legislative Research அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் சட்ட மசோதாக்கள் எவ்வாறு ...

ஊசலாடிய குஷ்பு, உறுதிப்படுத்தினார் காங்கிரஸை! அந்த மட்டுக்கு தற்போதைய சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளியை பலமாக வைத்துவிட்டார். குஷ்பு நல்ல பிரச்சாரகர்,சிறந்த புத்திசாலி,அரசியல் அறிவுமுள்ளவர்! ஆனால், சந்தர்ப்பவாத குணமுள்ளவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததை யடுத்து, அவருக்கு காங்கிரசில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  அதை நேற்றைய வடசென்னை ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகவே செய்துவிட்டார். அதே சமயம் கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த பிரயத்தனங்கள் தெரிய வந்தவர்களுக்கு குஷ்புவின் நேற்றைய பேச்சுகள் குழப்பமாகவோ,அதிர்ச்சியாகவோ கூட இருக்கலாம்!  ஆனால்,அவரது ...

மத்திய பாஜக அரசு இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, புதிய தொழிலார் சட்ட மசோதாவை விவாதமின்றி, அவசர,அவசரமாக கொண்டு வந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் நிறைவேற்றியுள்ளது.இதனால் இது நாள் வரை தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளும்,பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. 1880 களில் அமெரிக்கா தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் நாளொன்றுக்கு 12 மணி நேரம், அல்லது 10 மணி நேரம் பணியாற்ற முடியாது என்று ரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து,போராடிப் பெற்றதே எட்டு மணி நேர வேலை ...

காட்டுயிர் என்பது காடுகளில் மட்டுமே வாழும் உயிரினம் என்று நினைத்து இருப்போம். உண்மை அப்படி இல்லை. மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களாக, மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களாக இல்லாமல் மனிதர்கள் அருகிலேயே இயற்கை சூழலில் இரையைத் தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிராகும் என்று காட்டுயிர் ஆய்வாளர் ஜெகநாதன் குறிப்பிடுகிறார். காடுகள் என்பது உயிரினங்கள் மிகுதியாக இருக்கும் இடம் மட்டுமே. ஏன் நம் வீட்டில் வாழும் எலியும்  ஒரு காட்டுயிராகும். இயற்கையாகவே உலகமே ஒரு காடுதான். பல ஆயிரம் வருடங்களாக மனிதன் காடுகளில் தான் வாழ்ந்தான். ...

ராகுலும்,பிரியங்காவும் தற்போது மாபெரும் மக்கள்  தலைவர்களாக பரிணாமமடைந்து வருகிறார்கள்! அப்படியான சந்தர்ப்பங்களை உ.பி.முதல்வர் யோகி ஆதித்தியநாத் உருவாக்கி வருகிறார்! பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகள் ஒரு மகாத்மா காந்தியை உருவாக்கியது! அமெரிக்காவில் நிலவிய வெள்ளையின ஆதிக்கம் ஒரு மார்டின் லூதர்கிங்கை பிரசவித்தது. தென் ஆப்பிரிக்க அரசின் நிறவெறி போக்குகள் நெல்சன்  மண்டேலா உருவாகக்  காரணமாயிருந்தது. அது  போல உத்திரபிரதேச அரசின் உச்சகட்ட மத,சாதி வெறித்தனங்கள்,குற்றவாளிகளின் பாதுகாவர்களாக அரசும்,அரசு நிறுவனங்களும் இயங்கும் அடாவடித்தனம் ஆகியவை. .ராகுலையும் ,பிரியங்காவையும் வேற ஒரு லெவலுக்கு கொண்டு சென்று கொண்டுள்ளன! கொடூர மனம் படைத்தவர்களிடம் அதிகாரம் சென்றால் என்ன நடக்குமோ…அது தான் ...

இது நாள் வரையில்லாத அளவுக்கு புதுப்புது நெருக்கடிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதன் மூலம் எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களான ஏழை,எளிய மக்களின் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது! கடந்த மார்ச் 24 ந்தேதி  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது முழுமையாக விலக்கிக்  கொள்ளப் படவில்லை. தொழில் ,பணி என்று சகலமும் தொய்வடைந்து மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக ,கீழ்த்தட்டு, நடுத்தர பொருளாதாரப் பிரிவில் வாழும் மக்கள் வயிற்றை  வாயைக்கட்டி வாழ்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் இணுக்கி இணுக்கி செலவழிக்கிறார்கள். வீட்டுக் கடன்,  வாகனக் கடன்,  இ .எம். ஐ. செலுத்த கால நீட்டிப்பு ...

பாஸிசத்திற்கும்,மனித நேயத்திற்கும் இடையே நடக்கும் உளவியல் போராட்டம் அழகான திரைமொழியில் ஹிட்லரின் ஜெர்மானிய காலகட்ட சமூகத்தின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது! இன்றைய சமகால இந்தியாவின் நிகழ்வுபோக்குகளோடு நாம் இதை ஒப்பீடு செய்து தெளிவு கொள்ளத்தக்க வகையில் இருப்பதால்,இதன் காலப் பொருத்தப்பாடு சிலிர்க்கவைக்கிறது! இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஹிட்லர் உலகையே வெற்றி கொள்ளப் போவதாக எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவனது புகழ்பாடுகிறார்கள். ஜெர்மனியில் வசிக்கும் பத்து வயது நாயகனான சிறுவன் ஜோஜோவும் அப்படித் தான் நம்புகிறான். அப்போது நடந்த சம்பவங்களை ஜெர்மானிய சிறுவன் பார்வையில்  இப்படம் சித்தரிக்கிறது. ...

மகாத்மா காந்தியின் கொலைக்கு முன்னும், பின்னும் நடந்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும்,பின்னும் நடந்தவற்றுக்கும் பெரிய வித்தியாசமில்லை! ஒரே வித்தியாசம் காந்தி கொலையின் தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வந்துவிட்டது! அதுவே, பாஜக ஆட்சியில் வெளியாகி இருந்தால்,கோட்ஸே தியாகியாக்கப்பட்டிருப்பார் நீதி அரசர்களால்…! 28 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகான காலதாமதபடுத்தப்பட்ட தீர்ப்பே மிகப் பெரிய அநீதியாகும்! இப்படி காலதாமாக்கப்பட்டதே…இந்த வழக்கில் உரிய நீதி வழங்குவதற்கு எவ்வளவு தடைக்கற்கள் இருந்துள்ளன என்பதற்கான விளக்கமாகிவிடுகிறது! உண்மை என்ற ஒன்று தெட்டெனத் தெரியும் போது அதை உறுதிபடுத்துவதற்கு தாமதம் செய்வானேன்? ஒரு தீமை கருக்கொள்ளும் போதே தடுத்திருக்க ...