சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்! ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் ...

வெறும் சம்பிரதாயத்திற்காக, ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல, நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்! இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது. முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ...

கங்கனாவை ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவியாக்கியே தீருவதென்று சிவசேனா தீர்மானித்துவிட்டது என்பதாகத் தான் சம்பவங்கள் போய்க் கொண்டுள்ளன! கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனாவிற்குமான மோதலில் சிவசேனை தன்னுடைய பக்குவமற்ற அணுகுமுறையின் மூலமாகப் படுமோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது! இந்தியாவிலேயே மிக மோசமான ஒரு பாசிஸ்ட் அரசியல் இயக்கம் என்றால்,யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவசேனா தான்! அந்த அளவுக்கு டெரரான ஒரு அரசியல் கட்சியான சிவசேனை சமீப காலமாகச் சரிவைக் கண்டு வருகிறது! இந்து மதத்தையும்,மகாராஷ்டிர பாரம்பரியப் பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவசேனைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு காலத்திலிருந்தது என்பதை மறுக்கமுடியாது.ஆனால்,அந்த தகுதியை தன் நடவடிக்கைகளின் மூலம் காலப்போக்கில் அது ...

இந்தியாவில் நிறைய புள்ளி விவரங்கள் எடுக்கப்படுகிறது. அதில் அதிகம் மக்கள் கவனத்திற்கு வருவது இரண்டு மட்டுமே. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆகும். மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது. 2006ஆம் வருடத்திலிருந்து புலிகள் கணக்கெடுப்பு  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்றது.  இந்த முறை புலிகள்  சரணாலயங்கள் இருக்கும் 18 மாநிலங்களுடன், புதிதாகக்  குஜராத், நாகாலாந்து, மணிப்பூர்  மூன்று மாநிலங்களைச் சேர்த்து புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது மற்றும் ...