குடும்பத்தை முக்கியமாகக் கருதாமல் நாட்டையும், மக்களையுமே பெரிதெனக் கருதி இயங்கிய ஒரு தலைவனுக்கு முழு ஒத்துழைப்பும் தந்து, ஒன்றாக களத்திலும், சிறையிலும் தொடர்ந்தவர் அன்னை கஸ்தூரிபாய்! காந்திக்கும், கஸ்தூரிபாய்க்குமாக ஆத்மார்த்தமான பிணைப்பை இந்த நேர்காணலில் விளக்குகிறார் முனைவர் ம.பிரேமா! ஒரு மனைவி என்ற முறையில் கஸ்தூரிக்கும், காந்திக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது ? திருமணம் முதல் கஸ்தூரிபாய் இறக்கும் வகையில் அவர்கள் இருவரும் இணக்கமாகவே வாழ்ந்தனர். இருவருக்கும் ஒரே வயது;13 வயதில் திருமணம் நடந்தது. மணவறையில் இருவரும் ஒருவரையொருவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கை ...
50 வருடங்களாக கேட்டு உருகியும், மயங்கியும், நெகிழ்ந்தும், அழுதும், தவித்தும் நம்மை பலவித மனநிலைகளுக்கு கொண்டு சென்ற கான தேவதையின் குரல் தொடர்ந்து அனைவர் மனதிலும் மேலெழுந்து வருகிறது. வாணி ஜெயராமின் நவரசம் சொட்டும் தேனிசை கீதங்களை மீளவும் நினைவு கூர்ந்தால்.. சில ரகசியங்கள் சொல்கிறது! வாணி ஜெயராம் இந்திய இசை உலகில் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், யார் மனதையும் காயப்படுத்தாமல் பேசும் பண்பாளர் எனப் பெயரெடுத்தவர். 50 ஆண்டுகளைக் கடந்த போதிலும் அவரது குரலில் மாற்றமோ, நடுக்கமோ, பிசிரோ சிறிதும் இல்லை! இறை ...
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்டவரும், கிங் மேக்கர் என்றும், இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டவர் சரத்யாதவ்! மண்டல் கமிஷன் அறிக்கை அமலாவதற்கு மட்டுமின்றி, பல முதல்வர்கள் உருவாக்கத்திற்கும் காரணமான சரத்யாதவின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது! 1947ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி மத்தியப் பிரதேசம் பாபாய் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சரத் யாதவ். பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். 1974ல் நெருக்கடி நிலை காலத்தில் மாணவர் அணித் தலைவராக போராட்டத்தை வழிநடத்திய வகையில் மிசாவில் கைது செய்யப்பட்டார். ...
மலையாளத் திரையில் மகத்தான மக்கள் படைப்பாளியாக, கேலிச் சித்திர ஓவியராக , சமூக செயற்பாட்டாளராக சுமார் 40 ஆண்டுகள் இயங்கியவர் கே பி சசி, அண்மையில் மறைந்தார். வணிகமயமான திரையுகில் அவர் வாழ்வியல் அறங்களை துணிந்து பேசியதோடு, சமகால சமூக, அரசியலை நேர்மையாக பதிவு செய்தார்! உண்மையான கலைஞனான அவரது கேலிச் சித்திரங்கள், திரைப்படங்கள் போன்றவை மக்களுக்கான அரசியலையே பேசின! அவரது ‘இலையும்,முள்ளும்’ படம் பெண்களுக்கு இழைக்கப்படும் உளவியல் ரீதியான வன்முறைகளைப் பேசின! ஹிந்து ராஷ்ட்டிரம் என்கிற மதவெறித் தேசியம், இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்தக் ...
‘இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த மண்ணில் வாழ்ந்துள்ளார்களா..?’ என நெகிழ வைக்கும் வரலாறு கொண்டவர் தோழர் முருகையன்! பொது வாழ்க்கைக்கோர் இலக்கணம்! தொண்டுள்ளத்திற்கு ஒரு சான்று! பள்ளி படிப்பையே முடிக்காத இந்த எளிய மனிதர் பார் போற்றும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்! ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் சித்தமல்லி கிராமத்தில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் 1931 ஜூலை 15 -ல் மூத்த மகனாகப் பிறந்தவர் தோழர் எஸ்.ஜி.முருகையன். ஏழு கிலோமீட்டர் உள்ள முத்துப்பேட்டை பள்ளியில் கல்வி கற்றார். பள்ளி மாணவனாக இருக்கும் போதே சுதந்திரப் போராட்டத்திலும், பொது ...
உலக அரங்கில் சீனாவை பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வலிமைமிக்க வல்லரசாக்கியவர்! சோசலீசத்தை நவீன சூழலுக்கு ஏற்ப கட்டமைத்தவர்! மார்க்சியத்தோடு சீனப் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்தவர்! பல சிக்கல்களைக் கடந்து வெல்லற்கரிய நாடாக சீனாவை செதுக்கியவர் ஜியாங் ஜெமின்! சீனத்தின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் நவம்பர் 30 அன்று தனது 96 வயதில் மரணமடைந்தார். சீனாவின் முதன்மையான தலைவரான மாவோவுக்குப் பிறகு வந்த தலைவர்களில் ஜியாங் ஜெமின் முக்கியமானவர். அவரது வளர்ப்பு தந்தை கம்யூனிஸ்ட் போராளியாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டார் ஜெமின். எலக்ட்டிரிக்கல் ...
ஜான் லுக் கோடார்டு என்பவர் ஒரு கலையுலக புரட்சியாளர்! இலக்கணங்களை மீறிய இலக்கியமாக சினிமாவைக் கையாண்டவர்! வணிகத்தை மையப்படுத்திய சினிமாக்களுக்கு இடையே வாழ்க்கையை மையப்படுத்திய சினிமாவை தந்தவர்! உலக சினிமாவின் உன்னத முன்னோடியாக பார்க்கப்பட்டார்! “ஒரு சினிமாவுக்கு ஒரு தொடக்கம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவுப்பகுதி இருக்க வேண்டும்; ஆனால் அவை அந்த வரிசையில் இருக்க வேண்டியதில்லை” என்கிற புரட்சிகரமான கோட்பாட்டை சினிமா உலகுக்கு அளித்த ஜான் லூக் கோடார்டு என்னும் மகத்தான சினிமா கலைஞன் கடந்த செப்டம்பர் 13ம் நாள் தனது மரணத்தை ...
அயர்லாந்தில், கிறித்துவத்தின் இரு பெரும் பிரிவுகளான கத்தோலிக்கர்கள், பிராட்டஸ்டன்டு களிடையே இருந்த கடும் மோதலை புனித வெள்ளி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது தொடங்கி, வாழ்நாள் முழுமையும் அமைதிகான முன்னெடுப்பை நிகழ்த்திய டேவிட் டிரிம்பிளின் வாழ்க்கை நினைவு கூறத்தக்கது! சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனித வெள்ளி ஒப்பந்தம் உருவாகக் காரணமாய்த் திகழ்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் ஜூலை 25 அன்று, 77ஆவது வயதில், காலமானார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பொது ...
இடதுசாரி சிந்தனையாளர் என்றால், வறட்டுத்தனமானவரல்ல, மக்கள் படைபாளி என்பதற்கு தருண் மஜும்தாரே உதாரணம். அழகியலோடு, எளிய கிராமத்து மக்களின் அச்சு அசலான கள்ளங் கபடமற்ற வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். கமர்சியல் கச்சடாக்கள் இல்லாமலே அவரது படங்கள் வெற்றி பெற்றன! தருண் மஜும்தார், ‘ஆர்ட்-ஹவுஸ்’ சினிமாவின் அழகியலை வெகு லாவகமாக வெகுஜன மக்களுக்கான சினிமாவுடன் கலந்து, கலையை கலைக்காக மட்டுமின்றி வெகுஜன மக்களுக்காகவும், அதே சமயத்தில் கலைப் படங்களை மட்டுமே ரசிக்கும் கடினமான பார்வையாளர்களை கவரக் கூடிய திரைப்படங்களை உருவாக்கியதற்காகவும், இந்திய சினிமாவில், ஒரு தனித்துவமான ...
இப்படியும் ஒரு ஜோதிடர் இருக்க முடியுமா? என்று வியக்கும்படி மனித நேயத்துடன் வாழ்ந்தவர் நெல்லை வசந்தன். தெய்வீகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், ஜோதிட அறிவை பணம் பண்ணும் கருவியாக எண்ணாமல், மற்றவர்கள் பலன் பெற உபயோகித்தவர்! உலக அளவில் ஜோதிடத்தின் அடையாளமாக கருதப்படுபவர் பிரான்ஸ் நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் பிறந்த நாஸ்டர்டாம்ஸ்! அவரின் கணிப்புப்படியே உலகில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன என இன்றும் நினைவு கூறப்படுகிறார். அதே போல, நாம் வாழும் இந்த காலத்தில் அப்படிபட்ட ஒரு மிகப்பெரிய கணியர், நமது தமிழகத்தில் வாழ்ந்துள்ளார் என்றால், அவர் ...