வரலாற்றைக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதும், துக்கபட்டுக் கொள்வதும் அவரவர் மன நிலை சார்ந்த விஷயம்! அதனால், நடந்த வரலாறு ஒரு போதும் மாற்றமடைய போவதில்லை! எந்த ஒரு நிகழ்வையும் ஆக்கம் சார்ந்து புரிந்து மேலெழவும் வாய்ப்புண்டு! ஆக்ரோஷம் கொண்டு புரிந்து அமிழ்ந்தழிந்து போகவும் வாய்ப்புள்ளது! இதில் இரண்டாவது வாய்ப்பை வலிந்து தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் தான் பாஜகவினர்! அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தும் ஆனந்தம் பெறமுடியாதவர்களாக உள்ளனர். காரணம், அவர்கள் மனதில் எந்த நேரமும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்மம் அவர்களை அமைதி கொள்ளவிடுவதில்லை! இதில் உத்திரபிரதேச பிரதேச முதல்வர் ஆதித்திய நாத் ...

இந்த காலகட்டத்தில் இந்தியா யாரால் ஆட்சி செய்யப்பட்டது என்று வருங்கால சரித்திர பாடபுத்தகத்தில் ஒரு கேள்வி எழுப்பபட்டால்,அதற்கு பதிலாக ’’குற்றவாளிகளால்!’’ என்ற பதிலைத் தான் வருங்கால மாணவன் எழுத முடியும்! அந்த அளவுக்கு இந்தியாவில் தொடர்ந்து குற்றவழக்கு பின்னணி உள்ளவர்களே எம்.பி, எம்.எல்.ஏக்களாக ஜெயித்து ஆட்சிக்கு வரமுடிகிறது? இது எதனால்? ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற்று வரும் எம்.பி,எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது! இந்தியா முழுமையும் முன்னாள், இந்நாள் எம்.பி,மற்றும் எம்.எல்.ஏக்கள் 4,442 பேர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதென்றால் இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பேற்க ...

ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கும் பாஜக திட்டத்தின் ஒரு அம்சமாகத் தான் சசிகலா ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். ஆட்சி காலம் முடியும் தருவாயில் வரவுள்ள தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்கும்,அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் ஒன்றுபடுவதற்குமான சசிகலா தேவை என பாஜக கருதுவதாகத் தெரிவதால்….சட்டம், நீதி என எதையும்…பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் அது எப்படி தொடர்ந்து மீறிவருகிறது என அலசுகிறது இந்தக் கட்டுரை! # ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலா,ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கைதாகவில்லை!கட்சி தலைவியாக முடிசூட்டிக் கொண்டு, ...

இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தில் கொரானா பொருளாதார நெருக்கடியில் நாடும், மக்களும் இருப்பதை உத்தேசித்து தங்கள் ஊதியத்தை 30% குறைத்துக் கொள்ளும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது! இன்றைய சட்டமன்றத்தில் நடந்தது என்ன? பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு..? ஆகியவை குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை! தமிழக சட்டசபைக் கூட்டம் இன்றைய தினம் கலைவாணர் அரங்கத்தில் விஷேச ஏற்பாடுகளுடன் சிறப்பான வகையில் கூடியது! ஆனால், இன்று கூடிய தமிழகச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியக்குறைப்பு தொடர்பான எந்த முன்னெடுப்போ,விவாதமோ கூட எழவில்லை! ...

நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்றால், ’’நிச்சயமாக எதிர்க்கிறேன்’’ என்பது தான் என்னுடைய பதில்! ’’கல்வி என்பது மாநில அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? மத்திய அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?’’ என்றால்,சந்தேகமே இல்லாமல் சொல்வேன்; ’’மாநில அரசின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்! அதே சமயம் ,மத்திய அரசிடம் ஆலோசனை கலந்து செயல்பட வேண்டும்!’’ ஆனால்,தற்போது தமிழகத்தில் நடைபெறும் நீட் தொடர்பான உணர்ச்சிகரமான அரசியல் நாடகங்கள் சகிக்க முடியாதவை! கடந்த மூன்றாண்டுகளில் அனிதா தொடங்கி தற்போது ஜோதி துர்கா,ஆதித்யா,மோதிலால் வரை 16 மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? யார் இதற்குப் பொறுப்பேற்பீர்கள்? ...

இந்தியா முன்னெப்போதும் சந்தித்திராத ஜனநாயக விரோத,மதவாத மத்திய ஆட்சியாளர்களை கண்டு வருகிறது. இந்த அரசியலை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழக மக்கள் மட்டும் தான் முன்னணியில் உள்ளனர். அந்த தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதான எதிர்கட்சியான திமுக பிரதிபலிக்கிறதா? என்ற காத்திரமான கேள்விகளை இக் கட்டுரை முன்வைக்கிறது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக கிட்டத்தட்ட தனது ஓட்டு வங்கியை பறிகொடுத்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக உள்ளே வந்துவிடும் என்கிற நிலைப்பாட்டில் பல கட்சிகளும் திமுக ...

சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்! ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் ...

வெறும் சம்பிரதாயத்திற்காக, ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல, நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்! இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது. முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ...

கங்கனாவை ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவியாக்கியே தீருவதென்று சிவசேனா தீர்மானித்துவிட்டது என்பதாகத் தான் சம்பவங்கள் போய்க் கொண்டுள்ளன! கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனாவிற்குமான மோதலில் சிவசேனை தன்னுடைய பக்குவமற்ற அணுகுமுறையின் மூலமாகப் படுமோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது! இந்தியாவிலேயே மிக மோசமான ஒரு பாசிஸ்ட் அரசியல் இயக்கம் என்றால்,யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவசேனா தான்! அந்த அளவுக்கு டெரரான ஒரு அரசியல் கட்சியான சிவசேனை சமீப காலமாகச் சரிவைக் கண்டு வருகிறது! இந்து மதத்தையும்,மகாராஷ்டிர பாரம்பரியப் பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவசேனைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு காலத்திலிருந்தது என்பதை மறுக்கமுடியாது.ஆனால்,அந்த தகுதியை தன் நடவடிக்கைகளின் மூலம் காலப்போக்கில் அது ...

தமிழகமும்,இந்தியாவும் இதற்கு முன்பில்லாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுக என்ற எதிர்கட்சி ஆக்கபூர்வமாக செயல்பட்டு களம் காண வேண்டும் என்று தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால்,அந்த கட்சி இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை! இன்றைக்கு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக 82 வயது துரைமுருகனும்,பொருளாராக 80 வயதை தொடவுள்ள டி.ஆர் பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்தக் கட்சி முதியோர்களின் கூடாரமாகவே தொடர வேண்டுமா? என்பது தான் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் கட்சி அபிமானிகள் ...