டெல்லியை கைப்பற்ற மத்திய ஆட்சியின் மிருகத்தனமான அதிகார பலம், கட்டுக்கடங்க பண விநியோகம், தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு, ஆர்.எஸ்.எஸ்சின் களப்பணிகள்..என சகல ஆயுதங்களையும் கொண்டு , ஆம் ஆத்மியை வீழ்த்தியுள்ள பாஜகவின் சிஸ்ட மேட்டிக்கான சதி திட்டங்களும், சாகஸங்களும் திகைப்பில் ஆழ்த்துகின்றன; ஊழல் குறைந்த நிர்வாகம், சிறந்த கல்வி, தரமான மருத்துவம், சீரான குடிநீர் விநியோகம், நியாயமான மின் கட்டணம் ஆகியவற்றை சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மியை தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற வைத்தனர் டெல்லி மக்கள். அந்த ஆம் ஆத்மியை பாஜக தற்போது ...
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.. கணக்கற்ற சம்பவங்கள் கதிகலங்க வைக்கின்றன! தொடரும் இந்தச் சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆற்றல் வெளியில் இருந்து கிடைக்காது. அது நமக்குள் தான் இருக்கிறது..! # பள்ளிக் கூட நிர்வாகியே பால்மணம் மாறாத எட்டு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் தருவது! # ஒரு பள்ளியில் 13 வயது மாணவியை மூன்று ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது. # 10 வயது சிறுமியை கொடூரமாக சீரழித்த கயவனை காப்பாற்ற ...
இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் போடுகின்ற பட்ஜெட்கள் எல்லாம் கார்ப்பரேட்களை மேன் மேலும் கொழுக்க வைக்கவும், கார்ப்பரேட்களின் கொத்தடிமைகளாக விவசாயிகளை தாரை வார்க்கவுமே என சபதம் போட்டு வேலை செய்கிறது பாஜக அரசு என்பது இதோ பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது; நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முந்தைய பத்து பட்ஜெட்டுகளைக் கருத்தில் கொண்டால், வரவிருக்கும் பதினொன்றாவது பட்ஜெட்டில் இருந்து இந்தியாவின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தின் மீது இன்னும் கடுமையான தாக்குதல்களைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. வெளிப்படையாகச் சொன்னால், மோடி ...
திருப்பரங்குன்றம் மலை தற்போது ‘திகு திகு’ அரசியலாக மாற்றப்பட்டு வருகிறது! அறுபடை கோவில்களில் முதல் படையான இந்த முருகன் கோவிலை வைத்து இந்து மத உணர்வாளர்கள் படை திரட்டி வருகிறார்கள்! ”புனித மலை மீது புலால் உணவா..?” என்றும், ”இது புதில்லையே பல்லாண்டு பழக்கம் தானே” என்றும் வாதங்கள்..! தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலை நகரான மதுரை கலவரச் சூழலில் உள்ளது. இது வரை இல்லாத வகையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு என்றும், நாளையுமாக ( பிப்ரவரி -3,4) ...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்த சூழலில் நாம் தமிழர் கட்சிக்கும், திமுகவிற்குமான நேரடி மோதல் உள்ள நிலையில் களச் சூழல் எப்படி உள்ளது..? திமுகவின் அணுகுமுறை, நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்கள், பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணைய செயல்பாடுகள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஒரு அலசல்; ”பிரதான கட்சிகள் இல்லாத நிலையில், திமுக தொகுதிக்கு வெளியில் இருந்து அதிக ஆட்களை தருவிக்கவில்லை. அமைச்சர்கள் பட்டாளம் களம் காணவில்லை. பரிசு பொருட்கள் விநியோகம் இது வரை நடக்கவில்லை. பட்டியில் அடைப்பதை போல மக்களை அடைக்கவில்லை. ...
கோவில் நுழைவு மறுப்பு, தேனீர் கடைகளில் தனி கிளாஷ், தாழ்த்தப்பட்டவருக்கு தனி மயானம், குலத் தொழில் செய்வதற்கு நிர்பந்தம், பஞ்சாயத்துக்களில் சேர் தரமறுப்பது..என தாழ்த்தப்பட்டவர்களை தாழ்த்தி வைக்கும் தீண்டாமைக்கு எதிராக களம் கண்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாமுவேல்ராஜ் நேர் காணல்; தீண்டாமை ஒழிப்பைப் பிரதான இலக்காக வைத்து செயல்பட்டு வரும் அமைப்புகளில் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” குறிப்பிடத்தக்கதாகும். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு முதல் இதன் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் கே. சாமுவேல்ராஜ். இதன் பொதுச் செயலாளராக ...
பிப்ரவரி 5-ல் நடக்க உள்ள தில்லி சட்டசபை தேர்தலில் நேர்மையான வகையில் வாக்குகள் பெற்று வெல்ல முடியாது என்பதால், பாஜக பலதரப்பட்ட குறுக்கு வழிகளை தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அரங்கேற்றி வருகிறது. வரலாறு காணாத மோசடிகளை மீறி, ஆம் ஆத்மியோ , காங்கிரசோ வெற்றி பெறுமா? அரசியல் கட்சிகளின்பரப்புரைகள் உச்ச கட்டத்தில் உள்ளன.பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி பல சோதனைகளின் ஊடே ஆட்சியை தக்க வைக்க தலைகீழாக நின்று போராடி வருகிறது. தில்லி தேர்தல் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் வெளிப்படை ...
மணல் கடத்தலை தடுத்த சூசைபாண்டியாபுரம் வி.ஏ.ஓ. லுார்து பிரான்சிஸ், கரூர் குப்பம் விவசாயி ஜெகநாதன், சமூக செயற்பாட்டாளர் மணி கொலை செய்யப்பட்டனர். எத்தனையோ பேர் அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளனர். கடைசியாக ஜெகபர் அலி கொல்லப்பட்டார். இத்தகு கொலைகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் என்ன தொடர்பு? மணல் மாபியாக்களுக்கு எதிராகப் போராடி, அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி அவர்கள் ஜனவரி 17, 2025 மண் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொன்றவர்கள் திட்டமிட்டு கெட்ச் போட்டு செய்துள்ளனர். முன்னதாக வீடு சென்று அவரை ...
வேங்கைவயல் தமிழ்நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு அந்நிய நாடாகிவிட்டதா? அந்த ஊர் ஏன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது? எதற்கு இத்தனை காவல்துறையினர் குவிப்பு? அந்த மக்களை சந்திப்பதற்கு ஏன் தடை?.அந்த மக்கள் மற்றவர்களோடு பேச முட்டுக்கட்டை ஏன்..? உண்மையை மறைக்க இன்னும் எத்தனை அதிகார ஆட்டம் ஆடுவீர்கள்..? பாதிக்கப்பட்ட மக்கள் யார் மீது புகார் தந்தார்களோ, அந்த மனிதரை நெருங்கவும் இந்த அரசுக்கு துணிவில்லை. தங்களின் பாதிப்பை வெளி உலகிற்கு எடுத்துச் சொன்ன தங்கள் வீட்டுப் பிள்ளைகளையே குற்றவாளியாக்கி இருக்கும் அரசின் அநீதிக்கு எதிராக அந்த மக்கள் கொந்தளித்துள்ளனர். ...