வெறும் சம்பிரதாயத்திற்காக, ஒரு சடங்கை நிறைவேற்றுவது போல, நாங்களும் சட்டமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக எதிர்கட்சியோடு விவாதித்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தான் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது சட்டமன்றம்! இதில் முதல் நாள் இறந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைவர்களுக்கான இரங்கல் நிகழ்வில் போய்விடும்! அடுத்த இரண்டு நாட்களில் ஏராளமான சட்ட மசோதாக்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டு விவாதமின்றி நிறைவேறவுள்ளது. முக்கியமாக எட்டுமாதத்திற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விடுபட்டுள்ளது,எவற்றை கூடுதல் கவனப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ...

கங்கனாவை ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவியாக்கியே தீருவதென்று சிவசேனா தீர்மானித்துவிட்டது என்பதாகத் தான் சம்பவங்கள் போய்க் கொண்டுள்ளன! கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனாவிற்குமான மோதலில் சிவசேனை தன்னுடைய பக்குவமற்ற அணுகுமுறையின் மூலமாகப் படுமோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது! இந்தியாவிலேயே மிக மோசமான ஒரு பாசிஸ்ட் அரசியல் இயக்கம் என்றால்,யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவசேனா தான்! அந்த அளவுக்கு டெரரான ஒரு அரசியல் கட்சியான சிவசேனை சமீப காலமாகச் சரிவைக் கண்டு வருகிறது! இந்து மதத்தையும்,மகாராஷ்டிர பாரம்பரியப் பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவசேனைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு காலத்திலிருந்தது என்பதை மறுக்கமுடியாது.ஆனால்,அந்த தகுதியை தன் நடவடிக்கைகளின் மூலம் காலப்போக்கில் அது ...

தமிழகமும்,இந்தியாவும் இதற்கு முன்பில்லாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுக என்ற எதிர்கட்சி ஆக்கபூர்வமாக செயல்பட்டு களம் காண வேண்டும் என்று தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால்,அந்த கட்சி இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை! இன்றைக்கு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக 82 வயது துரைமுருகனும்,பொருளாராக 80 வயதை தொடவுள்ள டி.ஆர் பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்தக் கட்சி முதியோர்களின் கூடாரமாகவே தொடர வேண்டுமா? என்பது தான் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் கட்சி அபிமானிகள் ...

ஒரு கட்சிக்குள் இரு தலைவர்கள்! இருவருமே ஒருவரை ஒருவர் காலி பண்ணத் துடிக்கிறார்கள்! இருவருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை! இருவருமே பாஜகவின் பதந்தாங்கிகள்! இருவருமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவர்கள் இருவருக்குமே சுய அடையாளம் கிடையாது! இருவருமே பொதுச் சொத்தை சூறையாடுவதில் மன்னர்கள்! இருவருமே சுயநலத்தின் உச்சம்! இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவர்கள்! ஆட்சி அதிகாரம் மட்டுமே இருவரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு ...

இப்படிப்பட்ட கோணத்தில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு உள்ளபடியே எனக்கு விருப்பம் இல்லை! ஆனால்,இப்படியான விமர்சனங்கள் பரவலாக எழுந்து வந்த பிறகு அமைதியாக இருப்பது சரியாகாது தெளிவுபடுத்த வேண்டும் என்றே எழுதுகிறேன். ஒரு பொதுத்தளத்தில் சமூகநீதி, சமத்துவத்திற்கான கட்சி என்று அடையாளப்பட்டிருக்கும் ஒரு கட்சியின் பதவி,பொறுப்புகளில் உள்ளவர்களை சாதியக் கண்ணோட்டத்தில் அணுகுவதும்,மதிப்பிடுவதும் கேடான விளைவுகளைத் தரும் என்று நான் அஞ்சுகிறேன். சமீபத்திய திமுக உள்கட்சி தலைமை பதவிகளான பொதுச் செயலாளார்,பொருளாளர் பதவிகளில் ஒன்றை அக்கட்சியின் ஆகச் சிறந்த ஆளுமையாக கருத்தப்படும் ஆ.ராசாவிற்கு வழங்கப்படாதற்கு அவர் தலித் ...

அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்! என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே ! 1988 என்று நினைக்கிறேன்.அப்போது நான் விசிட்டர் பத்திரிகையில்,’ஒரு புகைப்படக் காரரின் பார்வையில்’ என்றொரு தொடர் எழுதி வந்தேன். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று முழுக்க அவரோடு கழிந்தது. சிவாஜி, தன் வீட்டின் அந்த மிகப்பெரிய ஹாலில் அழகான இரண்டு ...