அன்பு நண்பர்களே ஊடக உலகில் முற்றிலும் வேறுபட்ட தன்மையுடன் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக அறம் இணைய இதழ் பயணித்துக் கொண்டுள்ளது. கட்சி சார்ப்போ, சாதி, மத சார்போ அல்லது ஏதேனும் ஒரு இயக்கம் சார்ந்தோ அல்லாமல் உண்மை சார்ந்து பட்டவர்த்தனமாக சமூக பொதுநலன் ஒன்றே குறிக்கோளாக செயலபடும் ஒரே இதழாக அனேகமாக நம்மைத் தவிர வேறெவரும் இங்கு களத்தில் இல்லை. இப்படியான ஒரு சமரசமற்ற இதழுக்கு வாசகர்கள் மட்டுமே பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 99 சதவிகிதமான வாசகர்கள் வெறும் பார்வையாளர்களாக ...

போலிகளே நிஜங்களைப் போலும், பொய்மைகளே சத்தியத்தைப் போலும்  வேஷம் கட்டி விளையாடும் சமூகச் சூழல்களுக்கு இடையே சமரசமின்றி, சத்தியத்தின் பார்வையில் அறம் பயணித்துக் கொண்டுள்ளதை வாசகர்கள் அறிவீர்! அறம் வாசகர் பங்களிப்பில் மட்டுமே இது வரை வந்து கொண்டுள்ளது. இனியும் அவ்வாறே வெளிவரும்! ஆனால், வாசகர்கள் பங்களிப்பு என்பது வெகு சொற்பமான அளவில் தான் உள்ளது என்பதை சொல்லத் தான் வேண்டியுள்ளது. திரளான வாசகர் பரப்பை சென்று சேர்ந்தாலுமே கூட, மாதாமாதம் தாங்களாவே சந்தா அனுப்பும் வாசக நண்பர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே தொடர்கின்றனர். ...

உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் நாம் வாழும் நெறியை வகுத்து தந்துள்ளார். அதில் அடக்கமுடைமை அதிகாரத்தில் தன்னைத் தானே அடக்க வல்ல – தவ வலிமை கொண்ட –  சான்றோரின் சிறப்பை எடுத்து இயம்பும் அழகே தனித்துவமானது! திருவள்ளுவர் தினத்தின் சிறப்பு கட்டுரை! நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது “நிலையில் திரியாது’ என்றால், ‘ஊசலாட்டமற்ற மனம்’  என்று பொருள்; ‘தவநிலை’ என்று பொருள். தவநிலை என்பது மூன்று படிகள் கொண்டது. தவத்திற்காக அமர்ந்த கோலம்! 2) அப்படி அமர்ந்த பின்னர் ...

ஒவ்வொரு மாதமும் அறத்திற்கான சந்தா கேட்பதை சமீப காலமாக தவிர்த்து வருகிறேன்! பொது நலன் சார்ந்த பார்வையுடன், சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து வாசகர்கள் தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்திருந்தேன்! ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்! ‘இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்! கமிட்மெண்டான வாசகர்கள் மிகச் சிலர் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமே இன்றி சந்தா அனுப்புகின்றனர்! நினைவுபடுத்தித் தான் சந்தா ...

சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் காந்தியடிகள்! அவர் வாழ்க்கையே நமக்கான செய்தி தான்! அந்த வகையில் பல்வேறு சம்பவங்களில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார், பகைவர்களை வென்றெடுத்தார் என்பது இன்றைக்கும் நமது சமூக, அரசியல் வாழ்வுக்கான பாடமாகும்! மனிதர்கள் சமய நம்பிக்கை, பேசும் மொழி, சார்ந்திருக்கும் இனம், ஏற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், சமூக பழக்கவழக்கங்கள், தேசம்  கலாச்சாரம், போன்றவற்றின் அடிப்படையில் தனித்தும் குழுக்களாகவும், பிரிந்து கிடக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் தன்னுடையது சிறந்தது என்று எண்ணும் வரை கூட பிரச்சினை இல்லை, ...

அறம் மூன்றாம் ஆண்டு தொடக்கமும், நூல் வெளியீடும் இனிதே நிறைவேறியது! சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காந்தியவாதிகள் வாசகர்கள் என அன்பர்கள் கலந்து கொண்டனர். அதில் அறத்தின் சமூக தேவை குறித்த பேச்சுக்கள் முக்கியத்துவம் பெற்றன!  2020 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அறம் இணைய இதழ் தொடங்கப்பட்டது. சமகால மக்கள் பிரச்சனைகளை அலசி, பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசி அந்த பிரச்சனையை எப்படி அணுக வேண்டும், அதன் உண்மைத் தன்மை என்ன என்று ஒவ்வொரு கட்டுரையும் பேசும். தினமும் அறத்தில் கட்டுரை இப்படித்தான் ...

வணக்கம் நண்பர்களே, அறம் சிறு தீப்பொறி தான்! படிப்போர் சிந்தையிலும் அந்த தீப்பொறி பற்றிக் கொள்வதால் அதன் அளவுக்கு அநீதிகளை சுட்டெரிக்கவே செய்கிறது. அதனால், கடந்த இரண்டாண்டுகளில் அரசியல் அரங்கில் அதிர்வுகளையும், சமூக தளத்தில் சலசலப்புகளையும் தன் போக்கில் ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நமது அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் அடிமைத் தனமும், பாசாங்குத் தனமும் மேலோங்கி இருக்கிறது! இந்த சமூகம் தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டது. அதுவே, அரசியலிலும் பிரதிபலிக்கிறது. அதைத் தான் அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும் ...

ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு ஊடகங்கள், அவர்களின் சமூக வலைத்தளங்கள்..ஆகியவற்றில் மகாத்மா காந்தியின் தியாக போராட்ட மரபு ஊனமாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி மீது பொய், அவதூறு, விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். காந்தி கோழையாம்! கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதே சேவையாம்! காலனி ஆட்சி காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக அகிம்சை போராட்ட முறைகளில் இந்திய மக்களை வழி நடத்தியதன் மூலம் மக்களை கோழையாக்கி விட்டார் என்று கூசாமல் சொல்கிறார்கள், இந்துத்துவவாதிகள்! தனி மனிதனது உயர்வுக்கு சொன்னதே மகாத்மா காந்தி அகிம்சை. அது அவரது அரசியல் போராட்ட வழிகள் அல்ல. ...

அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி அடுத்த மாதத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் நிகழ்பனவற்றை உள்ளதை உள்ளபடி உண்மைத் தேடலுடன் பகிர்ந்து வருகிறோம்! உண்மை தான் முக்கியம் , அதில் சமரசமோ, சார்புத் தன்மையோ தலையிட அனுமதிப்பதில்லை. இன்றைய பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் அதிகார மையங்களை சார்ந்து இயங்குவதால் தொடர்ந்து பற்பல மாயைகளை கட்டமைத்து உண்மைகளை உணரவிடாமல் மக்களை குழப்பி ...

வாசகர் ஆதரவால் மட்டுமே செயல்படக் கூடிய ஒரு இணைய இதழாக அறம் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது! உண்மைக்கான தேடல் கொண்ட வாசகர் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில் நமது சமரசமற்ற விமர்சனங்களால் தவிர்க்கவியலாமல் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டுவிடுகிறது, நாம் விரும்பாமலே! எனினும் அச்சம் காரணமாகவோ, தயவு காரணமாகவோ சமூக தளத்தில் உண்மை ஊமையாகிவிடும் நேரத்தில் யதார்தங்களை பேசாமல் நம்மால் அமைதி காக்க முடியவில்லை. அறம் தன் சமரசமற்ற விமர்சனங்களால் அரசியல், சமூக தளங்களில் தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கி வருகிறது என்றாலும், பொருளாதார ...