நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.காற்றை எப்படி நம் உடலுக்கு கையாள வேண்டும் என்பதை மட்டும் ஒருவர் உணர்ந்து கொண்டால், அவரால் உலகில் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளமுடியும் என்பது சித்தர்கள் வாக்கு! உங்கள் கண்களை மூடி நீங்கள் மூச்சை எவ்வாறு உள்ளுக்கிழுத்து வெளிவிடுகிறிர்கள் என்பதை ஆழ்ந்து பாருங்கள்! ஒவ்வொரு சுவாசத்தையும் அனுபவித்து உணர முடிந்தவர்களின் சித்தம் வெகு தெளிவாக இருக்கும்! மூச்சை சிறப்பாக ...

சித்தர்களின் வழியே பெற்ற ஆழமான அறிவு! எதிலும் தெளிவான உறுதியான பார்வை, நடைமுறை சார்ந்த தீர்வு…ஆகிய சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்றவர் மருத்துவர் வேலாயுதம். கொரோனா  வைரஸை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 400 பேரை கொரோனவிலிருந்து குணப்படுத்தியுள்ளார். நோயாளிகளைக் காக்கும் களப்பணியில் தன் பங்கையும் தான் சார்ந்துள்ள சித்தமருத்துவத்தின் பங்களிப்பையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் . “அறம்” இணையதள இதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து… கொரோனா வைரஸ் நோய்க்கும் உரிய மருந்து எது என  சித்தர்களின் பாடல்களை ...

சுவாசம் என்பது சுகமாக நடந்தால் அது சொர்க்கமான வாழ்க்கையாகும்!.அந்தசுவாசமே சுமையாகிப் போனால் அது நரகமான வாழ்வாகும்! அதைத்தான் ஆஸ்துமா என்றழைக்கிறார்கள்!  ஆஸ்துமா வந்தவர்கள் அடையும் அவஸ்த்தை அதைப் பார்ப்பவர்களையும் பதைபதைக்க வைக்கும்!ஆஸ்த்துமா வந்தவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்! ஆக,ஆஸ்துமா வந்தவர்கள் கொரோனா வராமல் தவிர்த்துக் கொள்ள கீழ்கண்ட இயற்கை வாழ்வியலை பழகி வெற்றி கொள்ளுங்கள்! இப்படியாகஆஸ்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்! காரணம், ஆஸ்துமா வருவதற்கான சுற்றுச்சூழல்கேடு இந்தியாவில் இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருப்பதால் வியாதிஸ்தர்களும் விருத்தியாகிக் கொண்டே உள்ளனர். குப்பைக் கூளங்கள், சாக்கடை நாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப் ...