நடிகர் விஜய் தனது புதிய கட்சியின் கொடியில் வாகை மலரை வைத்துள்ளார். வாகைப் பூ வெறும் மலர் அல்ல; அது தமிழர் பண்பாட்டின் அடையாளம். அது வெற்றியின் சின்னமாக மட்டுமல்லாமல், மருத்துவப் பயன்கள் நிறைந்ததாக, தமிழ்ப்பரப்பின் அடையாளமாக இலக்கியச் சிறப்பு பெற்று திகழ்வதை பார்ப்போம்; இன்றும் தமிழர் வாழ்வில் வாகைப் பூவின் பெருமை நிலைத்து நிற்கிறது. வரலாற்றின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த இம் மரம், நம் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை உணர்த்தும் உயிரோட்டமான அடையாளமாக விளங்குகிறது! வெற்றியின் சின்னமாய் விளங்கும் வாகைப் பூ, தமிழர் வாழ்வில் ...
ஆப்பிளும் ஆரஞ்சும் பெறும் மதிப்பை, அதிக சத்து வாய்ந்த பப்பாளி ஏனோ பெறவில்லை. ஆரோக்கிய வாழ்வுக்கு பப்பாளி தரும் பலன்களுக்கு ஈடு இணையே கிடையாது. பப்பாளி பழத்தின் விலையோ குறைவு. பலன்களோ கணக்கில் அடங்காதது. இதைக் குறித்து சில தவறான கருத்துக்கள் உள்ளன. உண்மை அறிவோம்; நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக் கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு அற்புத மரம் இது. பப்பாளி இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் ...
சீரகம் சமையலுக்கு மட்டுமல்ல, இது மருத்துவ குணாம்சங்கள் கொண்ட உணவும் கூட! இது நமது அகத்தை சீராக்கி பல்வேறு உடல் உபாதைகளையும், வயிறு சம்பந்தப்பட்ட சகல பிரச்சினைகளையும் கச்சிதமாக சரி செய்கிறது. சீரகத்தை எப்படி நம் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது. குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று ...
குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடியது எலுமிச்சை. இது பித்தத்தைப் போக்கும், புத்துணர்ச்சி தரும், தலைவலி தீர்க்கும், வாந்தியை நிறுத்தும், உடல் சூட்டைக் குறைக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்…! இந்தக் கட்டுரையில் எலுமிச்சையின் இன்னும் பல சிறப்புகளை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத் தான் குறிக்கும். சித்த மருத்துவ நிபுணத்துவம் என்பது சித்த வைத்தியத்துடன் நின்று விடுவதில்லை. சித்த மருத்துவத்தின் தத்துவங்களில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், ...
சிசேரியன் அதிகரிக்கிறது. சுகப் பிரசவம் குறைகிறது.. இதற்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம். அப்படி விவாதிக்கும் போது சிலர் குற்றவுணர்வால் குறுகிப் போக வேண்டியிருக்கும். பொதுவாக பெண்கள் சிசேரியனை விரும்புவதில்லை. அது அவள் மீது எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்; “20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால்< கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் பிரசவக் காலங்களின் போது அதிக வேலை செய்வார்கள். குடம் தூக்குவது ...
ஜீரண மண்டலத்தை சீராக்கி, நல்ல பசியை ஏற்படுத்தும் இஞ்சி! ஸ்லிம்மாக இருக்க விரும்புவோருக்கு இது ஒரு வரம்! இது இதயத்தை பாதுகாக்கும் கவசமாகும். நீரிழிவு நோய் தொடங்கி மலச்சிக்கல் வரை தீர்வுக்கு வழி சொல்லும் இஞ்சியை ஆரோக்கிய வாழ்வுக்கு பயன்படுத்துவது எப்படி..? ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். ...
நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம் வலிமை தரும் பழம். நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை; இந்தப் பழம் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி இவைகளில் இன்னும் இடம் பெறுவதை காணலாம். ”சுட்டப் பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?” என அந்தக் குமரன் அவ்வைப் பாட்டியை அலை கழித்த புராண ...
மஞ்சள் என்றால், மங்களம் என்பது தமிழர் மரபு .! மஞ்சளின் மகிமைகள் சொல்லில் அடங்காது! நம் பாரம்பரிய ஆரோக்கிய வாழ்வில் மஞ்சளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உடல் பாதுகாப்பில் மஞ்சளுக்கு ஈடில்லை! ஆயிரக்கணக்கான நவீன விஞ்ஞான ஆய்வுகள் மஞ்சளின் பெருமைகளை பட்டியலிட்டுள்ளன..! மஞ்சள் இல்லாமல் எந்த சுப நிகழ்வும் தமிழர் வாழ்வில் இல்லை. எந்த ஒரு காரியம் துவங்கும் போதும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து தொடங்குவதற்கு பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த ஒரு நுட்பமான அர்த்தம் பொதிந்துள்ளது. ஒரு கோப்பை நீரை கொதிக்க வைத்து, ...
அரச மரம் என்பது நம் மரபில் வழிபாட்டுடன் தொடர்புடையதாக அறியப்பட்டுள்ளது. இதனை வழிபடுவதன் பின்னணியில் ஒரு ஆரோக்கிய அணுகுமுறை உள்ளது. ஆரோக்கியத்தை தருவதில் அரசனாக இருப்பதால் இது அரச மரம் என்றழைக்கப்படுகிறது. ‘அரசமரம் இருக்கும் இடங்களில் ஆரோக்கியம் உத்திரவாதம்’ என ஏன் சொல்லப்படுகிறது..? பொதுவாக மரங்கள் அறிவியல் ரீதியாக பகலில் பிராண வாயுவையும், இரவில் கரிமில வாயுவையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால், அரச மரம் பகலிலும், இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது! அரச மரம் தூய்மையான ஆக்ஸிஜனை வெளி விடுவதால் நம் ...
இதை ஆலமரம் என்பதை விட ALL மரம், எனலாம். அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு ஆல் ரவுண்டரானது ஆலமரம். இது, நம் நாட்டின் தேசிய மரமாக வைக்கப்பட்டதற்கு ஒரு ஆழமான அர்த்தம் இருக்கிறது. உடலுக்கான ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உள்ளத்தின் நலனையும் தரும் ஆலமரத்தின் சிறப்புகள் குறித்து ஒரு அலசல்: இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது . அதுவும் ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையாக நூற்றாண்டுகள் பாரம்பரிய தொடர்ச்சி கொண்டவை. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் ...