தென்றலின் சுகத்தோடு மனதை மயக்கும் குளிர்ந்த குரலுக்குரியவர் ஜமுனா ராணி. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலோருக்கு இவரை தெரியாது. ஆனால், நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டியவரே ஜமுனா ராணி. ஜமுனா ராணியின் திறமையை அங்கீகரித்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார் கவிஞர் கண்ணதாசன்; பழம் பெரும் பின்னணி பாடகி ஜமூனாராணி இன்று மறைந்தார். பி.சுசீலா, எஸ். ஜானகி காலகட்டத்தவர் என்றாலும், அவர்களுக்கும் முன்பே ஏழு வயதில் (1946) தியாகய்யா ( தெலுங்கு)படத்தில் பாடியது தொடங்கி இசை வாழ்வைத் தவிர வேறெதுவும் அறியாதவர், ஜமுனா! சிவாஜி ...