உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் நாம் வாழும் நெறியை வகுத்து தந்துள்ளார். அதில் அடக்கமுடைமை அதிகாரத்தில் தன்னைத் தானே அடக்க வல்ல – தவ வலிமை கொண்ட –  சான்றோரின் சிறப்பை எடுத்து இயம்பும் அழகே தனித்துவமானது! திருவள்ளுவர் தினத்தின் சிறப்பு கட்டுரை! நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது “நிலையில் திரியாது’ என்றால், ‘ஊசலாட்டமற்ற மனம்’  என்று பொருள்; ‘தவநிலை’ என்று பொருள். தவநிலை என்பது மூன்று படிகள் கொண்டது. தவத்திற்காக அமர்ந்த கோலம்! 2) அப்படி அமர்ந்த பின்னர் ...

பரிசல் சிவ. செந்தில்நாதன்  இலக்கிய ஆர்வலர்களுக்கு  மிக பரிச்சியமான பெயர்!  ‘நல்ல புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என்ற இலக்கோடு முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். பதிப்புலகம் சந்தித்து வரும் சவால்கள், நூலக இயக்கம் , வாசிப்புப் பழக்கம் போன்றவை குறித்து பேசுகிறார். நல்ல புத்தகங்களை கொண்டு வர நினைக்கும் உங்களைப் போன்ற சிறு பதிப்பகத்தார் சந்திக்கும் சவால்கள் என்ன? இங்கு மொழி பெயர்ப்பாளர்கள் குறைவு. மொழிபெயர்த்ததை  சரிபார்க்க, எடிட்டர்கள் இல்லை. ஒரு பதிப்பகம் என்றால் அதற்கு ஒரு கணினி, தட்டச்சு செய்பவர், ...

வீட்டுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணிடம் பழகி நம்பிக்கை தந்து, அனுபவித்துவிட்டு, பிறகு அந்தப் பெண்ணை தனக்கு தெரியவே தெரியாது எனச் சொல்லும் மைனர்கள் பலரை பார்க்கிறோம். சங்க காலத்தில் இப்படி பெண்ணை ஏமாற்றும் ஆணுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பதை சங்க இலக்கியமான அக நானூறு சொல்கிறது! அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றில் நிகழ்வுகளை மாற்றிப் பேசி, கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்தததாகவும், நிகழ்காலம் தான் மிகவும் மோசமாகிவிட்டது என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் உண்டு! இப்பேர்பட்ட புனைவுகளுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கும் விசயங்கள்  மதம், இனம், ...

20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்களில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெயகாந்தன்! அவரது சிறுகதைகளும், நாவல்களும் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை! அவரது படைப்புகள் பலரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியவை! ஜெயகாந்தன் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன! ஆங்கில மொழியிலும், ருஷ்ய மொழியிலும் கூட மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன! இந்திய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற்றவர் ஜெயகாந்தன். சாகித்திய அகாதமி விருதும் பெற்றவர்.ரஷ்ய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதும் ...

ஜெயகாந்தனை நேசிக்கும் தீவிர வாசகப் பரப்புக்காக இரு நூல்கள் வெளி வந்துள்ளன. ஜெயகாந்தனை குறித்து எவ்வளவு வாசித்தாலும், பேசினாலும் திகட்டுவதே இல்லை! இரண்டு நூல்களையும் படைத்தவர், ஜெயகாந்தனைக் குறித்து உள்ளும், புறமும் நன்கறிந்த எழில்முத்து. அறியப்படாத கூடுதல் தகவல்கள்! நூலாசிரியர் எழில்முத்து மறைந்த புலவர் கோவேந்தனின் மகன்! கோவேந்தன் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த நல்ல கவிஞர், கட்டுரையாளர், மொழிப் பெயர்ப்பாளரும் கூட. அது மட்டுமல்ல, நூலாசிரியரின் மாமனார் எழுத்தாளர் தேவபாரதியும் ஜெயகாந்தனின் நெருங்கிய மிக நெருங்கிய ஆரம்ப கால சகா தான்! நூலாசிரியர் ...

‘ஏழரைப் பங்காளி வகையறா’  மதுரை இஸ்மாயில்புரத்தை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை நேர்கோட்டில் சொல்லும் யதார்த்தமான நாவல் இது. எஸ். அர்ஷியா எழுதிய இந்த நாவல் எளிய மனிதர்களின் உண்மைக் கதையாகும் .வாழத் தெரியாதவன் குடும்பம் படும் பாட்டை பேசுகிறது! ‘ஒரு சமூகத்தின் வாழ்வியலை, மூன்று தலைமுறை ஊடாக,  பேசுகிறது. இது வளமான இலக்கிய நாவல்’ என்று கூறுகிறார் பேரா.எஸ்.தோதாத்ரி். தன் முன்னோர்களின் வாழ்வியலை இழையாகக் கொண்டு ஏழரைப் பங்காளி என்ற வம்சத்தின் பெயரையே நாவலாக்கி உள்ளார், அர்ஷியா. 15 ஆம் நூற்றாண்டில் இஸ்மாயில் ...

தீஸ்தா! அச்சமில்லாதவர்! மோடியை அஞ்ச வைத்துக் கொண்டிருக்கும் மனித உரிமைப் போராளி! குஜராத் படுகொலையையும், அதில் மோடியின் தொடர்பையும் உலகறியச் செய்தவர். ஜெயமோகனின் அறம் மகத்தான மானுட நேயப் படைப்பு! இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உண்மைக் கதையும் நம் உள்ளத்தை உலுக்குபவை. குஜராத் கலவர்ம் மற்றும் படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு இடையறாத சட்ட போராட்டதை நடத்திய தீஸ்தாவை தற்போது ஒன்றிய அரசு கைது செய்துள்ள நிலையில் இந்த நூல் முக்கியத்துவமாகிறது. பத்திரிகையாளரான தீஸ்தா செதல்வாட் எழுதிய  ‘ தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அரசமைப்புச் ...

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் இன்றும் பரவலாக பலரால் விரும்பி வாசிக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்தினம் இதை பிரம்மாண்ட திரைப்படமாக எடுத்து வருகிறார். ஆனால், இந்த நாவலில் உள்ள இந்துத்துவக் கூறுகளும், பிராமணப் பெருமிதங்களும் ஆபத்தானவை என்கிறார் ஆய்வாளர் பொ.வேல்சாமி. தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால சோழப் பேரரசு பற்றியும், அக்கால வாழ்க்கை முறை,  சமூகம், கலை, கலாச்சாரம், இயற்கை வளம், போர் முறைகள் அனைத்தையும் கற்பனை வளத்துடன் பிரதிபலிக்கும் நாவல் தான் கல்கியின் பொன்னியின் செல்வன்! 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி ...

தமிழ் மொழிக்கான ஆராய்ச்சி நிறுவனமாக பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – பல தமிழ் அறிஞர்கள் பொறுப்பு வகித்த நிறுவனம் – கடந்தகால ஆட்சியில் அதிமுகவின் என்ற கட்சியின் கிளை நிறுவனமாக அதன் இயக்குனர் பொறுப்பு வகித்த கோ.விஜயராகவனால் மாற்றப்பட்டு, வசூல் வேட்டைக் களமானது! இந்த ஆட்சியில் அது மீண்டும் கல்வி மற்றும் ஆராய்ச்சி பின்புலத்தில் இயக்கப்படுமா..? எங்கோ இருந்து வந்த பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் மொழிக்கென்று ஒரு ஆழமான அடித்தளத்தை தமிழகத்தில் நிறுவிச் சென்றனர். பிரெஞ்சு மொழிக்கென்று உயர் ஆராய்ச்சி ...

கடும் உழைப்பால் ஆயிரக்கணக்கில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் இந்த எளிய மனிதர்கள் அரபு நாடுகளில் படும் அல்லல்கள் அசாதாரணமானது! வயிற்றுப்பாட்டுக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பலதப்பட்ட சுவாரஷ்யமான அனுபவங்கள், அரபு நாட்டவர்களின் விசித்திரமான குணாம்சங்கள், பல நாடுகளில் இருந்து சென்று சம்பாதிப்பவர்கள் சந்திக்க நேரும் சவால்கள்..எனப் பல விஷயங்கள் இந்த நாவலில் மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘கொட்டிக்கிடக்குது சௌதியிலே’ என்ற ஆடியோ கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. துபாய், சௌதி போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களின்  வாழ்க்கையை  அதில் படம் போல காட்டியிருப்பார்கள். ...