தமிழ் மொழிக்கான ஆராய்ச்சி நிறுவனமாக பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – பல தமிழ் அறிஞர்கள் பொறுப்பு வகித்த நிறுவனம் – கடந்தகால ஆட்சியில் அதிமுகவின் என்ற கட்சியின் கிளை நிறுவனமாக அதன் இயக்குனர் பொறுப்பு வகித்த கோ.விஜயராகவனால் மாற்றப்பட்டு, வசூல் வேட்டைக் களமானது! இந்த ஆட்சியில் அது மீண்டும் கல்வி மற்றும் ஆராய்ச்சி பின்புலத்தில் இயக்கப்படுமா..? எங்கோ இருந்து வந்த பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் மொழிக்கென்று ஒரு ஆழமான அடித்தளத்தை தமிழகத்தில் நிறுவிச் சென்றனர். பிரெஞ்சு மொழிக்கென்று உயர் ஆராய்ச்சி ...
கடும் உழைப்பால் ஆயிரக்கணக்கில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் இந்த எளிய மனிதர்கள் அரபு நாடுகளில் படும் அல்லல்கள் அசாதாரணமானது! வயிற்றுப்பாட்டுக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பலதப்பட்ட சுவாரஷ்யமான அனுபவங்கள், அரபு நாட்டவர்களின் விசித்திரமான குணாம்சங்கள், பல நாடுகளில் இருந்து சென்று சம்பாதிப்பவர்கள் சந்திக்க நேரும் சவால்கள்..எனப் பல விஷயங்கள் இந்த நாவலில் மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘கொட்டிக்கிடக்குது சௌதியிலே’ என்ற ஆடியோ கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. துபாய், சௌதி போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையை அதில் படம் போல காட்டியிருப்பார்கள். ...
”ஒருவரின் தனிப்பட்ட பலவீனத்தை முன்வைத்து அவரது இலக்கிய, கலை ஆளுமை திறமைக்கான விருதினை தரக்கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.. ”என்கிற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது!. பாடகி சின்மயி உட்பட பதினேழு பேர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் செய்துள்ளனர். இது தெரிந்தும் அவருக்கு எப்படி விருது வழங்கலாம் என்ற பெண்களின் வலியை இப்படித் தான் மடார் என ஒரே போடில் தவிடு பொடியாக்கிவிடுகின்றனர்,சிலர்! மேம்போக்காக பார்க்கையில் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால் வைரமுத்துவுக்கு தரப்பட்ட விருது கார் ...
ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான எழுத்துக்களால் நம் உள்ளங்களை வென்றெடுத்தவர்! யாரும் பேசத் தயங்கும் விஷயங்களையும், எழுதத் துணியாத வாழ்க்கையையும் அவர் எழுத்தில் வடித்தார்! கரிசல் மண்ணின் மனிதர்களையும். அவர்களின் மரபுகளையும் அவர்களின் பேச்சு மொழியிலேயே பதிவு செய்தது மட்டுமா..? அவரின் சாதனைகள், வெற்றிகளின் ரகசியம் என்ன..? ஒரு சின்னஞ் சிறு குக்கிராமம், படிப்பறிவில்லா மக்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழல், ஏழாம் வகுப்பு மட்டுமே கல்வி..! இந்தப் பின்புலம் கொண்ட இலக்கிய உலகில் கி.ரா என்று அறியப்பட்ட கி.ராஜநாராயணன், மகத்தான எழுத்தாளராக மாறியது என்பதின் ரகசியம் ...
அன்றைய தமிழகத்தில் தமிழ் தேசிய இயக்கங்களுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் டாக்டர்.மு.வவின் நூல்கள் ஒளிவிளக்காக திகழ்ந்தன. பெருந்திரளான இளைஞர்கள் மு.வவை தங்கள் கதாநாயகனாக, வழிகாட்டியாக கொண்டிருந்தனர். திருமணங்கள், பிறந்த நாட்கள் ஆகியவற்றுக்கு மு.வரதராஜனார் நூலை பரிசளிப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர்..! தமிழன்னையின் தவப்புதல்வர்களில், மு.வ.என்று தமிழ் கூறும் நல்லுலகில் அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனிச்சிறப்பு உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை உள்வாங்கி செயல்படும் இளைஞர்கள் தங்கள் தனித்திறமையை உணர்ந்து விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் மூச்சுக் காற்றாகக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவார்கள். இது உறுதி. ...
வாசிப்பால் வளர்கிறோம் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்! ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். நாளும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எதிர்காலம் என்னவென்றே அறியாத தற்குறியாக இருந்த என்னை வாசிப்பு தான் வளர்த்தது. தன்நம்பிக்கை தந்தது! பல பெரிய ஆளுமைகளின் நட்பை பெற்றுத் தந்தது! அனைவரும் அறிந்திருக்கக் கூடிய பத்திரிகையாளனாக மாற்றி இருக்கிறது. அன்னைக்கு அடுத்தபடியாக என்னை வளர்த்தவை புத்தகங்களே…! எட்டு வயதில் எனக்கு வாசிப்பு பழக்கம் தோன்றியது. என் வகுப்பு தமிழ் பாட நூல்களை நான் உண்மையிலேயே விரும்பி படித்தேன். ...
இரா.முருகவேள் எழுதியுள்ள வரலாற்று நாவல் ‘புனைபாவை’. கொங்கு மண்டலத்தின் 13 ம் நூற்றாண்டு காலக் கதையை; கடைசி தமிழ் மன்னன், தமிழ்நாட்டை ஆண்ட போது வாழ்ந்த மக்களின் வாழ்வியலை ரத்தமும்,சதையுமாக உயிர்ப்போடு பேசுகிறது. புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்ற நாவல் இது. விடுதலைக்குப் பிறகான, கொங்கு மண்டலத்தின் அறுபது ஆண்டு கால வாழ்வியலை ‘முகிலினி’ நாவலில் வெற்றிகரமாக கொண்டுவந்தவர் இரா.முருகவேள். அவர் அதே கொங்கு மண்டலத்தின் மூலம், தமிழக வரலாற்றை புனைவதில் வியப்பில்லை. இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், கொங்கு மண்டலத்தில் ...
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 1956 முதல் 1990 வரை இருந்த பி.எஸ்.கிருஷ்ணன், மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் அமலாக்க காரணமானவர்.மேலும் இவர், புத்த, சீக்கிய மதத்தின் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு, வன்கொடுமை சட்டத்தின் வடிவாக்கம், மனிதக் கழிவை மனிதன் அகற்ற தடை சட்டங்கள் , இசுலாமியருக்கு இட ஒதுக்கீடு என பல முன்னெடுப்புகளுக்கு காரணமானவர். ஆதிக்க சாதிகள் கோலோச்சிய அதிகாரவர்க்கத்தினூடே எளிய மனிதர்களுக்காக களமாடிய இவரது வரலாறு சாகஸமானது..! ” The Crusade of Social Justice “ என்று ஆங்கிலத்தில் வெளியான பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை ...
‘புத்தர் ஒரு மதத் தலைவர் அல்ல; ஒரு அரசியல் சிந்தனையாளர்’ உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடி!. ஜனநாயகத்தின் வழிகாட்டி! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக பேசியது மட்டுமின்றி, பிராமணீயத்திற்கு எதிராக களமாடினார்! அதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டார்! பெண்கள் பற்றிய அவரது பார்வை நுட்பமானது….! புத்தரது கருத்துகளை அக்கால சமூக, பொருளாதார பின்னணியோடு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது காஞ்ச அய்லய்யாவின் இந்த நூல். காஞ்ச அய்லய்யா ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் பேராசிரியராக இருந்தவர்; செயற்பாட்டாளர். அம்பேத்கரை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவருடைய ‘God ...
இந்திய- பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் அரசியல் நகர்வுகள், சுதந்திரம் கிடைத்த சூழல், அகதி முகாம், அதிகார மாற்றம், மௌண்ட் பேட்டன், காந்தி மரணம், இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு குறித்து மட்டுமின்றி மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும், நேருக்குமான – வெளியில் சொல்லப்படாத – அந்தரங்க உறவுகள் எப்படி ஆச்சரியம் தரத்தக்க வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்…! ‘The last Vicereine’ என்ற நூல், இந்தியா – பாகிஸ்தானின் எழுபதாவது சுதந்திர ஆண்டு விழாவின்போது வெளிவந்த ஆங்கில நூல். “கடைசி வைஸ்ராயின் மனைவி” என்ற ...