மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...

ரத்தம் உறைதல் பிரச்சினை இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கிறது. கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மிகப் பலருக்கு இந்த ரத்தம் உறைதல் பிரச்சினை வருகிறது! இதை தவிர்க்கவும், இதில் இருந்து மீளவும் என்ன செய்ய வேண்டும்! இது காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு ரத்தம் உறைதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இளம்வயதினருக்கும்கூட ரத்தம் உறைந்து அவர்கள் மரணமடைவது நம்மில் பலர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தக்கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். ரத்தம் உறைதல் ஏன் நடைபெறுகிறது? அதிலும் சமீபகாலமாக ...

ஆண்மைக் குறை பிரச்சினையால நிறையபேர் அவதிப்படுறாங்க. பொதுவா பெண்மை, தாய்மை பற்றி பேசுற நாம ஆண்மை பற்றி பெருசா பேசுறதில்லை. ஆண்மைனா என்ன?  ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? இதற்காக மருந்து, மாத்திரை, லேகியம், சூரணம் என்று அலைபாய்வது தேவையற்றது. ஆண்மை இல்லாத ஒரு மனுசனை இந்தச் சமூகம் எப்படி பார்க்குது? ஒரு ஆண்மகனால குழந்தை பெத்துத்தர முடியலன்னா அவனை எப்படி பார்ப்பாங்க? பெண்கள்கிட்ட தாய்மையை எதிர்பார்க்கிற மாதிரி ஆணிடம் ஆண்மை இருக்கான்னு எதிர்பார்க்கிறதுல என்ன தவறு? ஆண்மைல ஏற்படக்கூடிய குறைபாட்டுக்கு என்ன காரணம்னு நிறையவே ...

சிறுநீரகம், உடலுக்குள் உள்ள கழிவுகள், நச்சுகளை வெளியேற்றி மனிதன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், மருந்துகள், ஹோட்டல் உணவுகள், கேன்வாட்டர் போன்ற பல காரணிகள் நமது கிட்னிக்கு எமனாக உள்ளன! கிட்னியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? நீர் இறைக்கும் இயந்திரத்தைப் போன்று சிறுநீரகம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடிகிறது. யார் ஒருவருக்கும் சிறுநீரக செயலிழப்பு ஒரே நாளில் அதிரடியாக பாதிப்பு ஏற்பட்டுவிடாது. படிப்படியாகவே ஏர்பட முடியும்! சம்பந்தப்பட்ட நோயாளியிடம் முழு ...

கத்தியின்றி, ரத்தமின்றி, வலியின்றி, தையலின்றி மிக எளிதான சிகிச்சையில் மூலத்தில் இருந்து விடுபட  சாத்தியமுள்ளது! சரியான உணவுகளையும், மூலிகைகளையும் பயன்படுத்துபவர்கள் ஆபரேஷனுக்கு ஆட்பட வேண்டியதில்லை! முழுமையான குணம் பெறலாம். கொஞ்சம் சிரத்தை எடுத்தால் போதுமானது! ஆனால், ”மூலத்தை முழுமையாக குணப்படுத்துகிறோம்” என ஏகத்துக்கும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி ஏமாற்றுபவர்கள் நிறைய உள்ளனர். இது போன்ற விளம்பரங்களைச் செய்யும் சில மருத்துவ முறைகளைச் சேர்ந்தவர்கள் மக்களை தன் வசப்படுத்தவே இப்படி செய்கிறார்கள். அவர்களால் முடியாததை மூலிகை மருத்துவத்தால்,  இயற்கை மருத்துவத்தால்… நமது பாரம்பரிய மருத்துவத்தால் நிகழ்த்திக் காட்ட ...

தவறான உணவுகளால் வரக் கூடிய இந்த மூட்டு வலியை, வந்த சுவடு தெரியாமலும், செலவில்லாமலும் விரட்டி அடிக்கலாம்! மறந்து போன மரபு வழியிலான உணவுகளை மீளவும் உண்ணத் தொடங்குவதும், சிலவற்றை தவிர்ப்பதும் மூட்டுகளை பலப்படுத்தும்! மனிதனை எந்த நோயும் தாக்குவதற்கு முன்பாக முன்னறிவிப்பு செய்கிறது. ஆளைப் பொறுத்து பல்வேறு விதமான வலிகள் இருந்தாலும், மூட்டு வலி மிகுந்த அவதியைத் தரும். இன்றைக்கு வயது வித்தியாசமில்லாமல் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும் பாடாய்படுத்தி வருவது மூட்டுவலி. மாறி வரும் உணவு முறை, உடல் உழைப்பின்மை, உடல் ...

பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது குறைந்து கொண்டே வருகிறது. எட்டு வயது, பத்து வயதுகளில் பூப்பெய்துவது பெண் குழந்தைகளின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெருமளவில் பாதிக்கும். உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள சில தவறுகளைக் களைந்தாலே இதை தவிர்க்க முடியும்! சமீபத்தில் திருப்பூரில் என் உறவினர் குடும்பத்தில் ஒரு சின்னப் பொணணுக்கு சீர் செய்றோம் என்று அழைப்பிதழை வாட்ஸ்ஆப்ல அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா அந்தப் பொண்ணு 4ஆம் வகுப்புலதான் படிக்கிறாள். ரொம்பச் சின்னப் பொண்ணு பத்து வயசு கூட ...

முந்திரி பருப்புக்கு நல்ல மவுசு இருக்குது. ஆனால்,சத்துமிக்க முந்திரி பழம் பல்லாயிரம் டன்கள் அப்படியே வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து பழச்சாறு மற்றும் ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! அதில் நமக்கு ஆர்வம் இல்லாததால் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன! தீர்வு என்ன? இன்றைய சட்டமன்ற நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க முன் வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இந்த ...

தற்போதெல்லாம் மருத்துவர்கள் பெரு நிறுவனங்களின் குரலாக ஒலிக்கிறார்கள்! எதை சாப்பிடக் கூடாதோ அதை சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்! எதை சாப்பிட வேண்டுமோ, அவற்றை தவிர்க்கச் சொல்கிறார்கள்! இதன் மூலம் நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடவும், மருத்துவத் துறை வளம் பெறவும் துணை போகிறார்கள்! ஒரு பாரம்பரியமான நிறுவனத்தில் இருந்து வெளிவருகிற பிரபல வார இதழில் “ஆரோக்கியம் ஒரு பிளேட்” என்ற கட்டுரை வெளியாகி இருந்தது. இணையதளத்தில் அந்தக் கட்டுரையைப் படித்து, அறிந்து அதிர்ந்தேன். இது குறித்த யதார்த்தங்களை சொல்ல வேண்டும் என்ற உந்துதலில் சில ...

கோடைக் காலத்தை  எப்படி சமாளிக்க போகிறோம். தகிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள சுகிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்! கோடைக்காலங்களில் சற்றே பாரம்பரிய உணவுகளின் பக்கம் கவனத்தை செலுத்துவது நம்மை காப்பாற்ற உதவும்! இது கோடையின் தொடக்க காலம். இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. எப்போதுமே போலவே உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம். விளைவு, சில உடல் பாதிப்புகள், நலக் குறைவுகள் எட்டிப் பார்க்கின்றன. சிலருக்கு சிலநேரங்களில் கொஞ்சம் மோசமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ...