நானும் விவசாயி தான் என்று சீன் காட்டினால் சரியாகிடுமா? தமிழ் நாட்டில் விவசாயம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்துத்துக் கொண்டுள்ளது! தமிழக விவசாயத்தின் யதார்த்ததை அணுவளவும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி! ”விவசாய உற்பத்தி பொருள்களை வெளி நாட்டுக்கு அனுப்பி விவசாயிகள் லாபம் பார்க்க ஏற்பாடு பண்ணுவோம்’’ என்று பேசியுள்ளார்! கடந்த 13 ஆண்டுகளாக அரிசி விளைச்சல் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது! அண்டை மாநிலங்களுக்கெல்லாம் அன்ன தாதாவாக அரிசியை அனுப்பிக் கொண்டிருந்த தமிழகம் தற்போது தன் தேவைக்கே அண்டை மாநிலங்களை நம்பி ...

ஒரு பக்கம் பசித்த வயிறுகள்! மற்றொரு பக்கம் பாழாகும் நெல்மூட்டைகள்….! இது தான் தமிழக விவசாயிகள் வருடாவருடம் சந்திக்கும் அவலங்களாகும்! கொரோனா காலக் கொடுமையில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன! வியாபார நிறுவனங்கள் விரக்தியில் உழல்கின்றன! ஆயினும், இந்த நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் செய்தியாக விவசாய விளைச்சல் மட்டும் வீழ்ந்திடாமல் தாக்குபிடித்துவிட்டது. இயற்கையின் துணையை நம்பி விவசாயிகள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை! ஆனால், தயாரான நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததாலும், தகுந்த முறையில் பாதுகாக்காததாலும், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், பல நூறு ...

உலகிலேயே ஒரு விஷயத்திற்கு நாம் உண்மையிலேயே அத்தாரிட்டி என்று சொல்லமுடியும் என்றால் அது நம் உணவுப் பண்பாட்டிற்குத் தான்! ஏனெனில், உணவு என்பது படிப்பறிவு சம்பந்தப்பட்டதல்ல,அது,பட்டறிவு மற்றும் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அது நுண்ணுணர்வு எனும் மெய்ஞானம் சம்பந்தப்பட்டது! உணவே மருந்தாக அனுசரிக்கக் கூடிய அளவுக்கு பல ஆயிரம் வகை அரிசி ரகங்கள்,சிறுதானியங்கள்,பயிறு வகைகள்,காய்கறிகள்,பழங்கள்,மூலிகைச் செடிகள்…ஆகியவற்றில் என்னென்ன பலன்கள், நோய் தீர்க்கும் அமசங்கள் உள்ளன என்பதை எந்தவித சோதனைக் கருவிகளும் இல்லாமல் அவர்கள் அறிந்து’அனுபவத்திலும் கைகொண்டிருந்தனர்! இன்று ஒரே ஒரு உணவுப் ...

ஓரே ஓரு காரியத்தால் இந்திய மக்களின் 90 % மான நோய்களுக்கு முற்றுபுள்ளி வைத்து மக்களின் ஓட்டுமொத்தஆரோக்கியத்தையும்மீட்டெடுத்துவிடமுடியும்! அது நம் பாரம்பரிய எண்ணெய் பண்பாட்டை மீட்டெடுப்பது தான்! நான் கேட்டரிங் தொழிலை தேர்ந்தெடுத்ததன் நோக்கமே நம் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மீட்டெடுப்பது தான்! ’’சாவித்திரி கண்ணா, இந்த செக்கு எண்ணெய்,தூய பசு நெய்,இயற்கை வேளாண்மையில் விளைந்த அரிசி,சிறுதானியங்கள் இதை கொண்டு மட்டும் தான் சமையல்தொழில்செய்வேன்என்றால்கட்டுபடியாகாது. ரீபைண்ட் ஆயில்,டால்டாவைக் காட்டிலும் இவை மூன்று மடங்கு விலை அதிகம்! சமாளிக்க முடியாது’’என்று எல்லோரும் அறிவுரை செய்தனர். ஆனால், ...