22 வது சர்வதேச குறும்பட  மற்றும் ஆவணப்பட விழா  ( 22nd Madurai International Documentary and Short film Festival 2020 )  நாளை முதல் (6 டிச  முதல்  10 டிசம்பர் வரை )  நடைபெற உள்ளது . இந்த விழாவில் பல படங்கள்  திரையிடப்படுகின்றன. இதற்கு ஆர்.பி.அமுதன் இயக்குநராக இருந்து செயல்பட்டுவருகிறார். இது ஒரு முன்னோடி திரைப்பட விழா . 1998 ஆம் ஆண்டு முதல் மதுரையில்   இந்த விழா நடந்து வருகிறது. கொரோனாவை முன்னிட்டு முதல் முறையாக இணையதளத்தில் ...

சமீபத்தில் மறைந்த (25 .11. 2020 )மரடோனா  என்ற அந்த மாபெரும் விளையாட்டு வீரனுக்காக அர்ஜென்டினா  மட்டுமல்ல, உலகமே  கண்ணீர் சிந்தியது .கடந்த புதனன்று மறைந்த அவனுடைய உடல் லட்சக்கணக்கான பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. வெறும் 5 அடி  4 அங்குலம் மட்டுமே உயரம் .அந்த உயரத்துக்கு இருக்க வேண்டியதை தாண்டி கூடுதல் எடை. பருத்த உடல் .தடித்த கால்கள். இப்படி ஒரு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட திறன்மிக்க வீரர்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வெளுத்து ...

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள் அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள் ஊழலை ஒழித்து நல்லாட்சி தருவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிற பிரபல நடிகர்களான கமல்,ரஜினி,விஜய்யின் அப்பா உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் வரலாறு காணாத அளவில் பணம் கரை புரண்டோடிய தேர்தலாக உள்ளது! இத்தனைக்கும் வெறும் 1,303 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள ஒரு சங்கம் தான் இது! இதில் தலைவருக்கு போட்டியிட்ட இரு அணிகள் அள்ளிவிட்ட பணம் அசாதரணமானது. முரளி ராமநாதன் அணி ஒரு பிரிவாகவும் டி.ராஜேந்தர் அணி ஒரு பிரிவாகவும் இதில் ...

பாசாங்குத் தனமற்ற பேச்சு, ஒளிவுமறைவற்ற உள்ளம், சக கவிஞர்களை நேசிக்கும் குணம், மனதில் பட்டதை பட்டென்று மறைக்காமல் சொல்லும் எதற்கு அஞ்சாத பேச்சாற்றல் …இது தான் உவமைக் கவிஞர் சுரதாவின் அடையாளம்! அவரது நூற்றாண்டை தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அய்யாவின் பலநூறு நேரடி மாணவர்களும், அவரை குருவாக ஏற்றுக் கொண்ட லட்ச மாணவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்…! நவம்பர் 23, 1921-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம், சிக்கல் என்ற ...

இனிய நண்பர்களே, கடந்த மூன்று மாதமாக அறம் இணைய இதழ் கம்பீரமாக வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள்! ‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி,, இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்!’ என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே அறம் இயங்கிக் கொண்டுள்ளது! என் எழுத்தாற்றலை தனிப்பட்ட செல்வாக்கான நபர்களை புகழ்வதற்கோ, பணபலமுள்ள அரசியல் இயக்கங்களை சார்ந்தோ எழுதுவதற்கு பயன்படுத்த முனைந்தால், வாசகர்களிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நேர்மையான, சமரசமற்ற இதழியல் என்பது வாசகர் பங்களிப்பில்லாமல் தொடர்ந்து சாத்தியம் இல்லை என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் ...

தற்போதைய தமிழ் திரை உலகில் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகிப்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தான். நாட்டில் நடக்கும் பொது தேர்தலைப் போல ஏகபரபரப்புகளுடனும், முஸ்தீபுகளுடனும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்! மற்ற தேர்தல்கள்  போல இங்கேயும் வாக்களிக்க பணம், இலவசப் பொருட்கள் கொடுப்பது போன்ற  விரும்பத்தகாத  நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் உள்ளன. கோல்ட் காயின், ரிசார்ட் கிப்ட் வவுச்சர், அரிசி-பருப்பு, 32″ டிவி,  நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டி, குவார்ட்டர் பிரியாணி என்று பல்வேறு அணியினரும் செயலாற்றிக் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் விஷால் வெற்றி பெற்று ...

சூரரை போற்று படத்தின் கதை, அது உயிரோட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் விதம், சூர்யா  ஊர்வசி உள்ளிட்ட அனைவரின் அபார நடிப்புத் திறன், அற்புதமான இயக்கம்,துடிப்பான இசை, காட்சிபடுத்தலில் உள்ள நுட்பங்கள் ஆகியவை அனைத்து ரசிகர்களையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தப் படம் பேசியும்,பேசாமலும் உணர்த்தும் அரசியல் அபாரமானது. இதுவரை தமிழ் சினிமா பேசத் தயங்கியதும் கூட! ஆகவே, இந்தப் படம்  ஒரு தரப்பை ரொம்பவே கலவரப்படுத்தியுள்ளது! ஆனால்,அமேசான் மூலம் பல கோடி பார்வையாளர்களை சென்றடைந்துவிட்டது! இது வரை எந்த தமிழ்படத்திற்கும் அமேசானில் கிடைக்காத பார்வையாளர்கள் இந்தப் படத்திற்கு ...

எந்த ஒரு படைப்பின் நம்பகத் தன்மையும் சொல்ல வந்த கருத்தில் அதற்கிருக்கும் தெளிவும்,உறுதிப்பாடும் சம்பந்தபட்டதாகும்! மூக்குத்தி அம்மன் ஒரு பக்தி படமுமல்ல,விழிப்புணர்வு படமுமல்ல! இது பச்சையான பாஜக ஆதரவுப் படம்! பக்தியின் உன்னதம் குறித்த புரிதலும் இல்லை! மறைபொருளாகத் திகழும் கடவுள் குறித்த புரிதலும் இல்லை! நாத்திகம் என்ற உயரிய கொள்கை குறித்த அடிப்படை அறிவும் இல்லை! முற்றிலும் அரைவேக்காட்டுத் தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது,மூக்குத்தி அம்மன்! இவை பற்றியெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்களை மேலும் குழப்பி, ஏதோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல ஆங்காங்கே வசனங்கள் வருகின்றன! ...

விக்ரம் சேத்  எழுதிய ‘A Suitable Boy’ என்ற ஆங்கில நாவல் 1993 ஆம் ஆண்டில் வெளியானது! இதன் அடிப்படையில் பிபிசிக்காக  இந்தத் தொடர்  எடுக்கப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடைபெறும் கதை.  நெட்பிளிக்சில்  இந்த ஆறு மணிநேர தொடரைக் காணலாம். கடந்த மாதம் வெளிவந்துள்ளது. ‘சலாம் பாம்பே’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கிய மீரா நாயர் ‘ A Suitable Boy’ என்ற பெயரிலேயே இந்தத் தொடரை பிபிசி 1 க்காக இயக்கியுள்ளார். ஆண்ட்ரூ டேவிஸ் கதையை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தூள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் The trail of Chicago 7 (சிகாகோ விசாரணை) என்ற ஆங்கிலப் படம் வெளிவந்ததானது, ஒரு வகையில் வெள்ளை நிறவெறி ஆதரவாளர்களின் முகத்திரையை கிழிக்க உதவியதன் மூலம் ஜோபிடன் வெற்றிக்கு ஒரளவு உதவியது என்றும் சொல்லாம்! 1968 ஆம் ஆண்டு  சிகாகோ நகரில் நடத்த கலவரத்தைத் தொடர்ந்து  நடந்த நீதிமன்ற விசாரணைதான், இந்தப் படம். ஆரோன் சொர்கின்(Aron Sorkin) என்பவர் திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார். இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளது.நெட் பிளிக்சில் ...