நுழைவு தேர்வுகள் என்பதே ஒரு நுட்பமான தாக்குதல் தான்! அனைத்து கல்வி நிறுவனங்களையும் புறக்கணிக்கும் மனநிலைக்கு பெருந்திரள் இளந்தலைமுறையை நிர்பந்திக்கிறதோ…மத்திய அரசு! கற்றுக் கொடுக்கப்படுவதே ஒரு மனப்பாடக் கல்வி முறை தான்! நடைமுறை வாழ்க்கையை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் கல்வி முறைகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வே அரசுக்கு கிடையாது. இந்த நெருக்கடியிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போதுள்ள இயல்பான கல்விச் சூழலை கடும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்கள்! 2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கையிலேயே பொது நுழைவு தேர்வு குறித்து உள்ளது. ...
ஒருவர் நேர்மையானவர் சமரசமற்றவர் பொது நலனை பாதுகாப்பவர் என்றால்…, அவரை தலையில் வைத்துக் கொண்டாடுவதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை! ’’நேர்மையானவர், கறாரானவர், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் ஆகவே, தான் துணைவேந்தர் சூரப்பாவை அண்ணா பல்கலையில் இருந்து தூக்கியடிக்க துடிக்கிறார்கள்…’’ கமலஹாசன் உள்ளிட்ட மேட்டுக்குடி மேதாவிகள் அனைவரும் இப்படித்தான் சொல்கிறார்கள்! அவர் நேர்மையானவர் என்பது உண்மையா? என்று பார்த்துவிடுவோம்! கொரனா வந்தது! பல்கலைக் கழகம் மூடப்பட்டது.படிப்பு தடைபட்டுள்ளது, என்ஞினியரிங் கல்வியை ஆன்லைன் மூலம் முழுமையாகவோ,முறையாகவோ கற்றுத் தரமுடியாது. ஆனால், ’’நீ வராவிட்டால் என்ன? படிக்காவிட்டால் என்ன? ...
தமிழகத்தில் ஒரு காலத்தில் அறிவு கோயிலாகத் திகழ்ந்த நூலகத்துறை தற்போது சீரழிந்து கொண்டிருக்கின்றது. மக்களுக்கும்,மாணவர்களுக்கும் அறிவு ஊற்றுக்கண்ணாக இருந்த நூலகத்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது. மக்களுக்கு வாசிக்கும் பழக்கமும்,அறிவுத் தேடலும் அதிகமாக உள்ள தற்போதைய காலகட்டத்தில் நூலகத்துறையோ முடக்கத்திலும், முறைகேட்டிலும் மூச்சுத் திணறி தவிக்கிறது. தமிழகத்தில் புத்தக பதிப்பகங்கள்,வெளியீட்டு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நூலகத் துறையின் ஆர்டர்கள் குறைந்தன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்துறை கண்டு கொள்ளப்படாமல் போனது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பதிப்பகத்தார். விற்பனையாளர்களிடமிருந்து ...
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்பு பெற்று வருவது அளப்பறிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி,விவசாய கூலிகள் போன்றோரின் குழந்தைகளுக்கெல்லாம் எம்.பி.பி.எஸ்சீட் கிடைத்தது போன்ற செய்திகளெல்லாம் நம் மனதில் ஏற்படுத்தும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது! ஆயினும், இந்த மகிழ்ச்சிகிடையில் சில யதார்த்தங்களை புறந்தள்ள முடியாது. ஒரு வகையில் இந்த 7.5% ஒதுக்கீடு என்பது நமக்கு பெருமை தரக்கூடியதல்ல,சிறுமையே! இதை தான் இந்த கட்டுரையில் கூறவுள்ளேன். அரசு பள்ளிகளின் அவல நிலைக்கு குறிப்பாக அவசியமான பல சப்ஜெக்ட்களுக்கு கூட ஆசிரியர்கள் ...
’’அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அளவாவது ஒரு வாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைத்ததே’’ என ஆறுதல் பெற முடியாத அளவுக்கு இதில் பல சந்தேகங்கள்,குழப்பங்கள்… நிறைந்துள்ளன! மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு மிகவும் அபாரமானது! இதில் வெற்றி பெற்றது சமூக நீதியா? சாதுரியமான பாஜகவின் அணுகுமுறையா? யாருமே எதிர்பார்த்திராத வகையில் தமிழக அரசு நேற்று ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவிகிதத்தை அவசரச் சட்டம் கொண்டு வந்து அறிவித்தது! ’’இதன் பின்னணியில் என்ன நடந்தது?’’ என்ற நமது விசாரணையில் தெரிய வந்ததாவது; # 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ...
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் பெயராலும், சமூக நீதியின் பெயராலும் நடக்கும் தமிழகத்தில் நடக்கும் படு அயோக்கியத்தனமான ஒன்று தான் 7.5% உள் ஒதுக்கீடாகும்! இதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள யார்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக அரசு பள்ளி ஏழை,எளிய மாணவர்கள் பலன்பெற வேண்டும் என்ற கோணத்தில் ஆதரிக்கின்றார்களேயன்றி, ’’ உண்மையிலேயே பெற வாய்ப்புள்ளதா?’’ என யோசிக்கவேயில்லை! பொதுவாகப் பார்த்தால் கவர்னரின் காலதாமதம் நமக்கு ஒரு பெரும் கோபத்தைத் தான் ஏற்படுத்தும்! ஆனால், நாம் கோபப்பட வேண்டியது கவர்னரின் மீதல்ல! கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கழிசடையாக்கி வைத்துள்ள நம் ஆட்சியாளர்களின் மீது தான்! அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் ...
அரசுப் பள்ளி ஏழை,எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழகத்தின் மொத்த ப்ளஸ் டூ மாணவர்களில் 41% அரசுப்பள்ளி மாணவர்கள்! ஆனால், மருத்துவ படிப்புக்கு இதில் ஒரு சதவிகித மாணவர்களுக்கு கூட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.இதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு தமிழக அரசு கொண்டு வந்தது.ஆனால், இன்று வரை அதற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் தரவில்லை. இதன் பொருள் இதில் ...
அய்யோ…அரசு பள்ளியா…! வேண்டாம் என சென்ற வருடம் வரை அலறியவர்கள் அப்பா,,அரசு பள்ளி இருக்குதே அது போதும்….என்று அடைக்கலம் தேடுகிறார்கள்..! காலச் சுழற்சி கீழிருப்பதை மேலும்,மேலிருப்பதை கீழும் தள்ளும்..! ஆனால்,இந்த செய்தி உண்மையா…? ஆங்காங்கேயுள்ள சில அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்திருப்பது உண்மை தான்! ஆனால்,எல்லா அரசுப் பள்ளிகளிலும் அதிக மாணவர்கள் சேரவில்லை! அப்படிக் கூடுதல் மாணவர்கள் சேர்வதற்கு அரசும் அக்கரை காட்டியதாகத் தெரியவில்லை! ஏனெனில், தனியார் பள்ளிகள் கொரோனாவைப் பொருட்படுத்தாமல் ஜூன்,ஜூலையில் அட்மிஷனை தொடங்கிய போது அரசு பள்ளிகளூக்கே அனுமதியில்லாத போது ...