உள்ளாட்சிகளில் ஜனநாயகம் எப்படி ஊனப்பட்டுக் கிடக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாகும். ஒரு பள்ளிக் கட்டிடம் கேட்கிறது கிராம சபை. ‘கட்சிக்காரர்கள் வழியாக கேட்டால் மட்டுமே கிடைக்கும்’ என்கிறது வட்டார வளர்ச்சி அலுவலகம். நிதி ஒதுக்கீடு நடந்தும் கட்சிக்காரர்கள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் பரிதவிக்கும் மக்கள்; திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சுமார் 101 ஆண்டுகால பழமை வாய்ந்தது. சிதிலமடைந்து கிடக்கும் இந்தப் பள்ளியின் கட்டிடத்தில் தான் ஒரு ஆரம்பபள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்படுகின்றன. ...

அரசுப் பணியை லஞ்சம் இல்லாமல் பெறுவது  பெரும் சவாலாகும். அமைச்சர்களும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஈவு இரக்கமில்லாமல் பணம் புடுங்கின்றனர். பேராசிரியர் பணிக்கு பல லட்சங்களா? லஞ்சப் பேர்வழிகளுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் நியமனங்களில்; முழு விவரம்; தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நிர்வாகத்தில் மொத்தம்  333 கலை,அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அரசு தான் ...

தமிழக அரசை குறை கூறவும்,  சமூக நீதிக்கு எதிரான சனாதனக் கருத்தை திணிக்கவும் ஆளுநர் நடத்திய மாநாட்டில் 52 துணை வேந்தர்களில் 34 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் உறுதியான நிலைபாடு எடுக்க முடியாத தமிழக அரசால் உயர் கல்வித் துறையும், துணைவேந்தர்களும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது; ஆளுநர் தரப்பினரோ,  நாங்க திட்டமிட்டபடி நடத்தினோமா? இல்லையா? எங்களை உங்களால் தடுக்க முடியலையே..என்ன மாநில அரசு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் வரவில்லையே தவிர, தனியார் மற்றும் மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என 34 ...

அரசு கல்லூரி முதல்வர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். ஆனாலும் அதில் திருப்தி அடையாமல் ஏழை, எளிய மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பேனரில் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி வருகின்றனர். இது கல்லூரி கல்வி இயக்குநரகத்திற்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா…? கல்லூரி கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் இயங்குகின்ற அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம், ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனம், நீதி ஆகியவற்றினை வழங்கி அதனை கண்காணித்தும் வருகின்றது. மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை கல்லூரி கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு ...

துணைவேந்தர் மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் கல்வி புலத்தில் கனஜோராக போய்க் கொண்டுள்ளது. முதல்வர் இதில் வாய் திறக்காமல் உள்ளார். என்ன செய்ய வேண்டும் ஸ்டாலின்…? தெலுங்கானாவில் தமிழிசையின் கொட்டத்தை  அடக்க சந்திரசேகர ராவ்  செய்தது என்ன..? நினைவுபடுத்துகிறேன்; நான் சொல்வதெல்லாம் முதல்வர் முடிவெடுத்தாலே போதும், அது நடக்காது! இதில் முதல்வர் இரண்டுங்கெட்டானாக இருந்தால், ஆளுநர் அடித்து சாதித்து விடுவார்…! அப்படி நடந்து விடக் கூடாது என்றே இதை எழுதுகிறேன். ஏனென்றால், ஆளுநருக்கு எப்போதும், எந்த தயக்கமும், குழப்பமும் இருந்ததில்லை –மனிதர்களை பிரித்தாளும் ...

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக அமல்படுத்தப்படும் ஒற்றைச் சாளர முறையை ஏன் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடைமுறைப்படுத்த முடியவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணங்களைக் கட்டிலும் பல மடங்கு கட்டணங்களை வசூலிக்கும் கலை அறிவியல் கல்லூரிகள் கண்டு கொள்ளப்படாதது ஏன்..? தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மொத்தமுள்ள  333 கல்லூரிகளில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இளங்கலை பட்டப் ...

தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முயற்சித்து வரும் தமிழக கல்வியாளர்களுக்காக இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றோம். கடந்த ஐந்து வருடங்களாக தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றோம். தேசிய கல்விக் கொள்கை அதன் செயல்பாடுகளும் திட்டங்களும் தெளிவாக அரசின் அறிவிப்புகளாக வெளிவந்துவிட்டன. ஆகையால் ஒவ்வொரு கல்வியாளரும் அதனைப் புரிந்து அதனை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? அதனால் ஏற்படும் பாதகங்கள் என்ன என்பது பற்றித் புரிந்துள்ளோம் . கடந்த சில வருடங்களாக அரசின் தவறான கொள்கை முடிவினால் பல்கலைக்கழகங்கள் சீரழிந்து வருகின்றது. ...

அறம் ஊடக ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள். தங்கள் இணைய ஊடகத்தில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் தாளாளரான என்னைப் பற்றிய நீண்ட  அவதூறு கட்டுரையை நண்பர்கள் என் பார்வைக்கு அனுப்பியுள்ளார்கள். ‘இறைநேசன்’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள குற்றசாட்டுகளை முற்றிலும் மறுப்பதுடன் உண்மையான விவரங்களை சுருக்கமாக அளிக்க விரும்புகிறேன். 1975-ஆம் ஆண்டு அரசாணை எண்.18 மற்றும் அரசாணை எண்.479 நன்மங்கலம் வனபகுதியில் 40 ஏக்கர் வழங்க தமிழக அரசால் ஆணையிடபட்டு, 6 ஜனவரி 1976 – ஆம் ஆண்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் அறக்கட்டளை பொதுச்செயலர் ...

ஸ்ரீ வைகுண்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவனை  சகித்துக் கொள்ள முடியாமல் அரிவாளால் வெட்டி சிதைத்துள்ளனர், சாதி ஆதிக்க சக்திகள்!  நாங்குநேரி சம்பவத்திற்கு பிறகு நடக்கும் கணக்கற்ற சாதிவெறி சம்பவங்களில் இதுவும் ஒன்று..! கவனம் பெற முடியாத பல நூறு சாதி அநீதிகளுக்கு என்ன தான் தீர்வு..? தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம்  அருகிலுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ்-1 மாணவன் பள்ளிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் பைக்கில் பின் தொடர்ந்து வந்து பேருந்தை  வழி மறித்து நிறுத்தி, அதிரடியாக பேருந்தில் ...