க.செபாஷ்டின், வேலூர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது சாதியரீதியிலானது. கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான பிளவு என பிரபல பத்திரிகையாளர்கள் சிலர் கூறி வருகிறார்களே..? ஒ.பி.எஸ்சுக்கும், இ.பி.எஸ்சுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது. சுய சாதி அபிமானமும் இருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்தப் பிளவுக்கும், சாதிக்கும் சம்பந்தமில்லை. முக்குலத்து சாதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ்… என ஏறத்தாழ அனைவருமே ஒ.பி.எஸ்சுக்கு எதிரான அணியில் தான் உள்ளனர். முக்குலத்து எம்.எல்.ஏவான ராஜன் செல்ப்பாவோ  ஒ.பி.எஸ்சிடம் ”கட்சியில் ...

இருதயராஜ், திருப்போரூர், செங்கல்பட்டு பி.ஜே.பி எப்போது மத துவேஷத்தைக் கைவிடும்? கசாப்புக் கடைக்காரருக்கு எப்போது ஜீவகாருண்யம் தோன்றும் எனக் கேட்பது போல உள்ளது. பிழைப்பும்,தொழிலும் இது தான் என்றான ஒருவரை மாற்றுவது ரொம்ப கஷ்டம். சுரேஷ் குமார், கும்பகோணம் தஞ்சாவூர் தமிழக அரசும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறதே? பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடும் அவசியத்திற்கே இடம் கொடுக்கவில்லை! பத்திரிகை முதலாளிகளே சலுகைகள், விளம்பரப் பணத்திற்கு ஆசைப்பட்டு சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து விடுகின்றனரே! பாலமணி,சென்னை ஆன்மிகம் , அரசியல் மற்றும் ...

எஸ். ராமநாதன், திருச்செந்தூர் எந்த தைரியத்தில் மதுரை ஆதீனம் இந்தப் போடு போடுகிறார்? யேங்கப்பா..! என்னா வாய்க் கொழுப்பு! ‘சாமியாரா? சண்டியரா?’ என சதேகமே வந்துவிட்டது! தமிழக ஆட்சியாளர்களின் பலவீனமும், ஒன்றிய ஆட்சியாளர்களின் உசுப்பலும் தான் இதற்கு காரணம்! ஜெயலலிதா ஆட்சியில் மதுரை ஆதீனக் கோவில்களிலும்,மடத்திலும் முறைகேடுகள் நடப்பதை சுட்டிக் காட்டி ‘ மதுரை ஆதினத்தை கலைத்துவிட்டு கோயில்களை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ளும்’ என ஆணையிட்டார். அவ்வளவு தான் ஆடிப் போனார் அருணகிரி! ”அம்மா தாயே பராசக்தி ..”என சரணடைந்தார்! உண்மையில் ...

எஸ்.ராமநாதன், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்ததே திராவிட மாடல் ஆட்சி என்கிறாரே அமைச்சர் சேகர் பாபு? பாஜகவும், திராவிடர் கழகமும் கலந்ததே திராவிட மாடல் ஆட்சி எனச் சொல்ல வருகிறாரா…? இன்னும் என்னென்ன உளறல்களை எல்லாம் நாம் கேட்க வேண்டுமோ..? எல்லாம் தினமணி வைத்திய நாதனின் சகவாச தோஷம்! சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி எட்டாண்டு பாஜக அரசின் சாதனை என்ன? வேதனை என்ன? கற்பகதருவான பொதுத் துறை நிறுவனங்களை எடுத்து தனியார்களுக்கு தாரை வார்ப்பது! பண மதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை ...

ச.முருகன், தண்டையார்பேட்டை,சென்னை பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொலைகாரனை விடுதலை செய்வதா என ஒரு தரப்பினர் கொந்தளிக்கின்றனரே? 31 வருட நெடிய சிறைவாசம் என்பது தூக்கு தண்ட்னையை விடக் கொடியது! எந்தக் குற்றவாளிக்குமே இது போன்ற மிக நீண்ட சிறைவாசம் என்பது ஏற்புடையதன்று! அது சிறையின் நோக்கத்தையே சிதைத்துவிடும்! ஒருவரை விடுதலை செய்வதால் இந்த சமூகத்திற்கு எந்த பாதிப்புமில்லை என்ற அளவுகோலே போதுமானது! எம்.ராதிகா, தேனீ சில அரசியல் கட்சிகள் மொழி, சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்க்கின்றனர் என்கிறாரே பிரதமர் மோடி? ...

சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் திமுகவின் ஓராண்டு ஆட்சி குறித்த உண்மையான மதிப்பீட்டைத் தருக! பாராட்டத்தக்க அம்சங்கள்; இறையன்பு, உதயச் சந்திரன் போன்ற நல்ல அதிகாரிகளுக்கு உயர்ந்த பொறுப்புகளைத் தந்து ஓரளவுக்கேனும் சுதந்திரமாக இயங்க அனுமதித்து இருப்பது! பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம் போன்ற மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ள ஒரு அமைச்சரவை! ஆட்சியாளர்களின் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஓரளவுக்கேனும் நடவடிக்கைகள் எடுப்பது! நமது அறத்தில் வெளியான சில கட்டுரைகளுக்குமே கூட உடனடி ‘ரெஸ்பான்ஸ்’ கிடைத்து மாற்றங்கள் நடந்தன! அதிமுக ஆட்சியாளர்களைப் ...

வேல்முருகன், சுங்குவார்சத்திரம் , காஞ்சிபுரம் தமிழக கவர்னருக்கே பாதுகாப்பில்லை என பொங்குகிறார்களே, ஒ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும்? ஐயோ பாவம்! சொந்தக் கட்சியையே பாஜகவிடம் இருந்து பாதுகாக்க முடியாதவர்கள் கவர்னரின் பாதுகாப்பு குறித்து கதறுவது வேடிக்கை! பாண்டித்துரை, அரசரடி, மதுரை தனக்கும், ஆளுநருக்கும் பரஸ்பரம் நல்ல மரியாதையும், நட்பும் உண்டு என்கிறாரே ஸ்டாலின்? இருக்கட்டும்! அதனால், தமிழக மக்களுக்கு எந்தப் பயனுமில்லையே! எஸ்.ராஜலட்சுமி, மதுரவாயில் பீஸ்ட் பட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்திற்கு நடிகர் விஜய்யிடம் ஏதாவது பரிகாரம் செய்ய சொல்கிறார்களே விநியோகஸ்தர்கள்? விஜய் என்ற ஸ்டார் ...

தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ? பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. திராவிட இயக்கம் தான் ...

எஸ்.கண்ணப்பன், சேத்தியாதோப்பு, கடலூர். கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதல்வர் முன்னிலையில் உள்ளார் என கூட்டணிக் கட்சிகள் புகழ்ந்து தள்ளுகிறார்களே? கூட்டணிக்கு மட்டும் தான் தர்மம் உள்ளதா? உள்ளாட்சியில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு தங்கள் ஊருக்கான தலைவரை தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை பறிப்பது தர்மமா? மேலிடத்து அதிகாரத்தின் மூலம் உள்ளாட்சிகளில் செல்வாக்கில்லாத இடங்களில் தங்கள் கட்சிக்கான தலைமையை வலிந்து திணிக்கும் கூட்டணித் தலைவர்களுக்கு தர்மத்தின் பொருள் தெரியுமா? எளிய கட்சிக்காரனின் உரிமையை பறிப்பது தர்மமா? அ.அறிவழகன், மயிலாடுதுறை நீட் தேர்வால் தான் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் படிக்க ...

எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளாட்சி தேர்தல்கள் எப்படிப் போய்க் கொண்டுள்ளது? அடேங்கப்பா! பல உள்குத்துக்களோடு போய்க் கொண்டுள்ளது! திமுக கூட்டணி தொடர்கிறது. எனினும்,பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை! அடித்தளத்தில் பலம் பொருந்தி நிற்பவனை கட்சிகளின் தலைமைகள் அச்சுறுத்தலோடு தான் பார்க்கின்றன! அதிமுகவால் கூட்டணி கூட்டணி காண முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், அந்த கட்சித் தலைமைக்கு யாரும் கட்டுப்படமாட்டார்கள் என்ற கள நிலைமை தான்! அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை அள்ளீச் செல்வதற்காகத் தான் பாஜக தனித்து ...