எது நம் தேசத் தலைவர்கள் காண விரும்பிய இந்தியா ? அந்த மகா கனவு என்னவென்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இன்று நாம் கண்டுள்ள வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியா..?  எத்தனை பெரும் வீழ்ச்சியில் நம் சமூகம்..!  அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவே..? என் நண்பர் ஒருவர் இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் மாநாட்டில் 1929ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புலனத்தில் அனுப்பி வைத்து, ”இதை ஆழ்ந்து படியுங்கள்” என்று வேண்டினார். அது மிகப் பெரிய விரிவான தீர்மானம். ‘இந்தியா ஏன் பூரண ...

திராவிட இயக்க சித்தாந்தத்தை கரைத்து குடித்தவர், சமூக நீதி குறித்த உரைவீச்சை மெய் சிலிர்க்க பேசுபவர்! மெத்த படித்தவர், ஒரு ஆசிரியரின் மகனாக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்! ஆனால், ஆட்சி அதிகாரம் அவரை நிறைவடையவே இயலாத செல்வத் தேடலில் பொருளாதார குற்றவாளியாக்கியது; செஞ்சி ராமச்சந்திரன் இவரை பட்டைதீட்டி இளம் தலைவராக கட்சித் தலைமைக்கு அடையாளம் காட்டினார்! ஆனால், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு புதிய இளம் தலைமுறையில் யாரும் மேலேழுந்து வர முடியாமல் ...

இயற்கை தருகிறது பாடம்! அதை கற்க மறந்ததால் தேடுகிறோம் ஓடம்! வரமான மழையை ஏன் சாபமாக்கி கொள்ள வேண்டும். நாம் கற்க தவறியமை என்ன? கற்க வேண்டியவை என்ன? பெற்ற வலிகள் என்னென்ன..? வரப் போகும் காலங்களை எதிர்கொள்ள என்ன திட்டம்..? ஒரு அலசல்; பருவமழை மீண்டும் அதன் கோர உருவப் படத்தை தமிழ் நாட்டில் வரைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில், தீவிர மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால், வட தமிழ்நாட்டின் ...

‘பாராளுமன்றம் என்பது மக்களுக்கானதானதல்ல’ என்பது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருகிறது. சர்வாதிகார ஆட்சியை சாத்தியப்படுத்த நகர்ந்து கொண்டிருக்கிறது பாஜக அரசு! இந்தச் சூழலில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்தோ, தெரியாமலோ பாஜக அரசின் சதிச் செயல்களுக்கு ஒத்திசைவாய் உள்ளன; மஞ்சள் புகை வீச்சைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக ஆக்ரோஷமாக  கேள்விகள் எழுப்பினர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பான விளக்கம் தந்திருக்கலாம். அது நடக்காததால் எதிர்கட்சி எம்.பிக்கள் நான்கைந்து நாட்களாக சபையை முடக்கும் வண்ணம் போராடினார்கள்! இதைத் தொடர்ந்து  நாடாளுமன்ற வரலாற்றிலேயே ...

போபால் விஷவாயு கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் சுமார் 4,000 பேரை பலி வாங்கி, சுமார் ஆறு லட்சம் மக்களை பாதித்தது. மக்கள் பட்ட அவஸ்த்தைகள், அந்த ஆலையின் அலட்சியம், இரயில்வே ஊழியர் குலாம் தஸ்தகீர் போன்றோர் உயிரைப் பணயம் வைத்து  மக்களைக் காப்பாற்றியது..  உண்மைக்கு நெருக்கமான புனைவு; இதுபோன்ற கதைகளை எடுக்கும்போது உண்மைக்கு மாறாமல் எடுக்க வேண்டும். அதே சமயம் தெரிந்த முடிவு தான் என்பதால் சுவாரசியம் குன்றாமலும் எடுக்க வேண்டும். இதில் பிழை ஏற்பட்டால், நோக்கம் நல்லதாக இருந்தாலும் படம் தோல்வி ...

பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லையாம்! ஆனால், பேசப்படவேவில்லை கைதான இளைஞர்களின் குரல்கள்! வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சிறுகுறுந்தொழில்கள் நசிவு, அரசின் சர்வாதிகார போக்கு, ஊழல்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடிய இந்த இளைஞர்கள் யார்? பின்னணி என்ன? இதோ முழு விபரங்கள்: இந்த இளைஞர்கள் கவனப்படுத்தியுள்ள முக்கிய பிரச்சினை அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது! அப்படியே கிடைத்தாலும் அதில் முறைகேடுகள்! லஞ்சம் கொடுத்து வேலை பெறும் கொடுமை! அரசின் தொழில் கொள்கையால் சிறுகுறுந்தொழில்கள் நசிவு! கார்ப்பரேட்களுக்கு சலுகை! விவசாயத்தை அழிக்கும் அரசின் சட்ட திட்டங்கள், தனியார் ...

ஒரு அரண்மனை கோட்டையின் முகப்பு போல கம்பீரத்துடன் திகழும் சேலம் மாடர்ன்  ஸ்டுடியோவை வசப்படுத்த ஆளும் தலைமைக்கு ஏற்பட்ட ஆசை, தற்போது அவலத்தில் நிற்கிறது! ‘வாழ வைத்த நிறுவனத்தையே வளைத்துப் போடத் துடிக்கும் இந்த அணுகுமுறை’ தமிழக மக்களிடையே திமுகவின் இமேஜை கடுமையாக பாதித்துள்ளது. சேலம்-ஏற்காடு சாலையில் 1935-ல்டி.ஆர்.சுந்தரத்தால் தொடங்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ்  ஸ்டுடியோவின் முகப்பு இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் இதைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி, இறங்கி அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்வது ...

மிக்ஜம் புயலில் வட சென்னையின் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் (CPCL) ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் கசிவு குடியிருப்புகளில் புகுந்து சகலவற்றையும் சர்வநாசம் செய்துள்ளது! இந்த பேரவலம் இன்னும் தொடர்கிறது. எண்ணெய் பரவலால் 25 கீ,மீ வரை கடலில்  மீன்கள் செத்து மிதக்கின்றன! மீளாத் துயரில் மீனவர்கள்!  சென்னை மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தில் இருந்து கசிந்த பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவால் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம் வட சென்னை மக்களின் ...

‘இந்திய நாட்டில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கானதல்ல’ என்பதை இந்த பிரச்சினையை இவர்கள் அணுகிய விதம் வெளிப்படுத்திவிட்டது! மக்களின் விரக்தி  மற்றும் ஏமாற்றங்களை பார்லிமெண்டில் எதிரொளிக்க இந்த இளைஞர்கள் செய்த அதிரடி வழிமுறை எல்லா வகையிலும் பயனற்றுவிட்டது; மக்களைவையில் மக்களின் அதிருப்திக் குரலை, விரக்தியை  நடக்கின்ற ஆட்சியின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தும் ஒரு அதிரடிச் செயலை செய்துள்ள இந்த இளைஞர்களின் செயல் நமக்கு ஏற்புடையதாக இல்லை எனினும், தங்கள் உயிரையும், எதிர்காலத்தையும் பணயம் வைத்து மக்கள் குரலை ஒலித்துள்ளனர் என்பதே நிதர்சனம்! ஆனால், ...

காஷ்மீர் மாநிலத்தின் 370 எனும் தனித் தகுதியை நீக்கியதை எதிர்த்த வழக்கில் தற்போதைய தீர்ப்பானது இந்திய வரலாற்றில் ‘கரும்புள்ளி’யாகும். மத்திய அரசின் ஏஜெண்டுகளான ஆளுனரோ, ஜனாதிபதியோ ஒரு மாநிலத்தை பிளக்கலாம், யூனியன் பிரதேசமாக்கலாம் என்பதை நியாயப்படுத்தவா.. உச்ச நீதிமன்றம்..?  இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் (Union of States)  என்ற அரசியல் சாசன விதியை மறந்த சக்திகள், மாநிலங்களை தங்கள் இஷ்டம் போல் துண்டாடி, ஒற்றை ஆட்சி முறைக்கு (Unitary State) இட்டுச் செல்ல இத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளதோ..என அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ...