டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் அனைத்து தரப்பு விவசாயிகளிடமும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.ஆகவே, தாங்களும் தாங்கள் வாழும் இடத்திலேயே டெல்லிவிவசாயிகளுக்கு ஆதரவாக எழுச்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.தற்போது தமிழகத்தில் அங்குமிங்குமாக சில விவசாய அமைப்புகள் போராடிவருகின்றன. எனினும் அதை வலுவாக பெரிய அளவில் ஒருங்கிணைத்து செய்ய தமிழக விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் கட்சி எல்லைகளைக் கடந்து நடந்தாலும், அந்தந்த கட்சியில் உள்ள விவசாயிகள் இதில் பெருந்திரளாக பங்கெடுத்து வருகின்றனர். பாஜகவைத் தவிர்த்த ...

சமீபத்தில் தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கொண்டு கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை பெரும் விளம்பரத்துடன் திறந்து வைத்தது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் திட்டத்தில் ஏறக்குறைய ரூ. 500 கோடி அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் சென்னை மாநகரின் அய்ந்தாவது கூடுதல் நீர்த்தேக்கமல்ல – கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லும் வழியில் இடைப்பட்ட நீர்த்தேக்கமாக திருப்பி விடும் வேலையை மட்டுமே செய்கிறது. இதில் தமிழ்நாடு அரசு பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. தெளிவான பொறியியல் நோக்கமின்றி ...

இந்திய அளவில் 12 கோடியாகவும்,தமிழகத்தில் சுமார் 16 லட்சமாகவும் உள்ள மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள்,சவால்கள் ஆகியவற்றை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை, பொருட்படுத்துவதில்லை. நம் ஒவ்வொருக்கும் அவர்களை அரவணைக்க வேண்டிய கடமை உள்ளது. சமூகத்திற்கும்,அரசுக்கும் மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளை, மனக்குமுறல்களை நினைவூட்டுகிறது இந்தக் கட்டுரை. ” அனகாபுத்தூரில் இருந்து பாரிமுனைக்கு மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களோடு செல்லும்வகையில்  இரண்டு சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயங்கிவந்தது. இப்போது அதனை நிறுத்தி விட்டது. ஒரு அரசு நிறுவனமே இப்படி இருந்தால் தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் ...

தடுப்பூசி தொடர்பான ஆர்வங்கள், விவாதங்கள் வேகம் பெற்றுள்ளன! ”தடுப்பூசி வந்தால் நிம்மதிப்பா..அதப் போட்டுகிட்டு எங்க வேணா பழையபடி போகலாம்…எவ்வளவு நாள் பயந்து,பயந்து வெளியில போறது’’ என பலர் நினைக்கின்றனர். இன்னும் சிலர் வீட்டைவிட்டு வெளியேறப் பயந்து முடங்கியுள்ளனர். வெளியே வருபவர்களும்,பயங்கர முன்னெச்சரிக்கையுடன், பதற்றத்துடன் நடமாடிக் கொண்டுள்ளனர். ஆகவே, தடுப்பூசி வந்தால் நல்லது என நினைப்பது ஆச்சரியமில்லை! அப்படிப்பட்டவர்கள்  இந்த கட்டுரையை மூன்று நிமிஷம் படியுங்கள். எல்லா கொடிய நோய்களும் நாம் சூழலியலுக்கு செய்யும் தவறுகளாலும், நமது பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து விலகியதாலும் ...

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் அகில இந்திய அளவில் மட்டுமல்ல,அகில உலக அளவிலும் இது வரை காணாத போராட்டமாக உருவெடுத்துள்ளது! பல்லாயிரக்கணக்கில் டிராக்டர்கள், டிரக்குகள், பேருந்துகள் ,வேன்கள் ஆகிவற்றில் வந்து சேர்ந்துள்ள பல லட்சம் விவசாயிகளின் வீரம் செறிந்த எழுச்சியை வெகுஜன ஊடகங்கள்  உரிய முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பதன் மூலம் மக்களிடம் நன்கு அம்பலப்பட்டுவிட்டனர். நான்காவது நாளாகத் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இன்று இன்னும் விவசாயிகள் வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கடும் பனிப் பொழிவு,போலீசார் தரும் நெருக்கடிகள்,சாலைகளில் பள்ளம் தோண்டியும்,கற்குவியல்களை வைத்தும் ஏற்படுத்தப்படும் ...

சமீபத்தில் மறைந்த (25 .11. 2020 )மரடோனா  என்ற அந்த மாபெரும் விளையாட்டு வீரனுக்காக அர்ஜென்டினா  மட்டுமல்ல, உலகமே  கண்ணீர் சிந்தியது .கடந்த புதனன்று மறைந்த அவனுடைய உடல் லட்சக்கணக்கான பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. வெறும் 5 அடி  4 அங்குலம் மட்டுமே உயரம் .அந்த உயரத்துக்கு இருக்க வேண்டியதை தாண்டி கூடுதல் எடை. பருத்த உடல் .தடித்த கால்கள். இப்படி ஒரு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட திறன்மிக்க வீரர்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வெளுத்து ...

வேறு எதற்காகவும் ஆட்சி செய்ய வரவில்லை! ” இந்து மதத்தை வளர்க்கவும், மாற்று மதத்தவரை அச்சுறுத்தவுமே என் ஆட்சி’’ என தன் ஒவ்வொரு அசைவிலும் நிருபித்து வருகிறார் யோகி ஆதித்தியநாத்! பெயரில் தான் யோகி, ஆள் படுமுரட்டு சுபாவம்! இந்து மதத்தை அரசாங்கமே வளர்க்கும், போஷிக்கும் என்று களம் கண்டால், அதில், போலி ஆன்மீவாதிகளும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போட்டு ஊரை ஏய்க்கும் சாமியார்களுமே அதிகம் பயனடைவார்கள் என்பதற்கு உத்திரபிரதேசமே நல்ல உதாரணமாகும்! ஏனென்றால், உண்மையான ஆன்மீகவாதிகள் அதிகாரவர்க்கத்தை தேடிச் செல்லமாட்டார்கள்! எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்! ...

வந்தவாசிக்கு சுகநதி தான் முக்கிய குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதராம்! அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணியோடு ஆக்கிரமிக்கப்பட்டதன் விளைவாக, ஏரியில் நீர் நிரம்ப வாய்ப்பளிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றியிருக்கும் காட்சியை தான் இங்கு காண்கிறீர்கள்! வந்தவாசி ஏரியின் கரையையே சமூக விரோதிகள் உடைத்து விட்டனர். சென்ற ஆண்டு இது உடைக்கப்படவில்லை. அதனால் கலுங்குவை உடைத்தனர். கலுங்குக்கு 50மீட்டர் தூரத்தில் வந்தவாசி ஏரிகரையையே உடைத்துவிட்டனர். முழு ஏரி தண்ணீரும் அதன் வழியே ஆற்றோடு கலந்து வெளியேறுகிறது. ஏரி விரைவில் காலியாகும். அதிகார ...

ஒரு வயதான மூதாட்டியை அவருடைய பேரன் கையை பிடித்து நான் இருக்கும் இடதிற்கு அருகே அழைத்து வருவான். ஸ்டேட் வங்கியின் அலுவலர் அவருக்கு ஆயிரம் ரூபாயை தருவார். அநேகமாக அது இரண்டு  ஐநூறு ரூபாய் தாள்களாக இருக்கும். அந்தத் தொகையை வாங்கும் போது அந்த மூதாட்டியின் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சியைக் காண எனக்கு இரண்டு கண்கள் போதாது. இதனை வாங்கியவுடன் அருகிலுள்ள கடைக்கு, தனது பேரனை அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவார். இது மாதந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி. இப்படி முதியோர் ஓய்வூதியம் வாங்கும் ...

தமிழகத்தில் ஒரு காலத்தில் அறிவு கோயிலாகத் திகழ்ந்த நூலகத்துறை தற்போது சீரழிந்து கொண்டிருக்கின்றது. மக்களுக்கும்,மாணவர்களுக்கும் அறிவு ஊற்றுக்கண்ணாக இருந்த நூலகத்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது. மக்களுக்கு வாசிக்கும் பழக்கமும்,அறிவுத் தேடலும் அதிகமாக உள்ள தற்போதைய காலகட்டத்தில் நூலகத்துறையோ முடக்கத்திலும், முறைகேட்டிலும் மூச்சுத் திணறி தவிக்கிறது. தமிழகத்தில் புத்தக பதிப்பகங்கள்,வெளியீட்டு நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நூலகத் துறையின் ஆர்டர்கள் குறைந்தன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நூலகத்துறை கண்டு கொள்ளப்படாமல் போனது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பதிப்பகத்தார். விற்பனையாளர்களிடமிருந்து ...