விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள ...

ரயில்வே துறையில் தனியார் டூரிஸ்ட் நிறுவனங்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறப்பதன் விளைவே மதுரையில் நடந்த ரயில் தீ விபத்தாகும். தனியார் டூரிஸ்ட் நிறுவனங்கள் ஒரு ‘பேரலல் ரயில்வே நிர்வாகத்தை’ நடத்துமளவுக்கு அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை இந்த விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது..! மதுரையில் நடந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் பொய்யான தகவல்களை சொல்கின்றனர். மதுரை ரயிலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அந்த கம்பார்ட்மென்ட்டின் ஒரு கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்களை வைத்திருந்தனர். பெரிய பெரிய டபராக்கள், கரண்டிகள், தட்டுகள், பெரிய ...

350 ஆண்டுக்கால இந்திய வரலாற்றின் முக்கிய ஆவணங்கள் தேவாலயங்களுக்குள்ளும், ஆவணக் காப்பகங்களுக்குள்ளும் மறைந்துள்ளன. அந்த வகையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருக்கும்  புனித மேரி ஆலயத்தின் வரலாற்றோடு நமது சமூக வரலாற்றையும் இணைத்து இந்த ஆவணப் படம் பேசுகிறது…! சென்னை தினத்தை முன்னிட்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் Westminster Abbey of the East என்ற ஆவணப்படத்தை புதனன்று திரையிட்டது. Westminster  என்பது இலண்டனில் உள்ள இடத்தைக் குறிக்கும். Abbey என்றால் கோவிலைக் குறிக்கும். இந்த ஆவணப்படத்தின் மூலம் 350 ஆண்டுகால  ...

கள்ளக் குறிச்சி மகாபாரதி பொறியியல் கல்லூரியில் தலித் மாணவன் மர்ம மரணம் அடைந்து ஒரு வாரமாகிறது! செய்தி வராமல் தடுக்க பெரும் பணபலமும், அதிகார பலமும் பிரயோகிக்கப் படுகிறது! ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சந்தேகப்பட்ட கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும் அவனை கடுமையாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது…! சின்னசேலம் அருகே உள்ள அ.வாசுதேவனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்., மாணவன் அபித்குமார்.  இவர் ஆகஸ்ட் 18- அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மாணவனின் தந்தை ...

பல்லாயிரம் இளைஞர்களை அரசு பணிக்கு எடுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சீர்குலைந்து செயலிழந்து போய்க் கொண்டுள்ளது. தலைவர் இல்லை. 13ல் 11 உறுப்பினர்கள் இல்லை. இந்தச் சூழலில், கடந்த இரண்டாண்டுகளாக காவல்துறையில் ஆர்.எஸ்.எஸுன் ஆணைகளை செயல்படுத்திய சைலேந்திரபாபுவை தேர்ந்தெடுத்த பின்னணி என்ன? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission– TNPSC) என்பது தமிழ் நாட்டரசின் உயர்மட்டம் தொடங்கி அடித்தளம் வரையிலான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். ஏறத்தாழ 34 துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு நடத்தி அரசுக்கு தரும் அமைப்பாகும். அந்த வகையில் ...

தமிழ்நாடு நன்கு மழை பொழியும் இடமாகும்! இது செளதி இல்லை.ஆனால், பெய்யும் மழை நீரை எல்லாம் கடலுக்கு அனுப்பி மீண்டும், மீண்டும் கடல் நீரைக் குடிநீராக்க பல ஆயிரம் கோடிகளை விரயமக்குகிறார்கள்! கடல் நீரைக் குடிப்பது உடலுக்கு கேடு! சூழலுக்கும் கேடு.ஒரு விரிவான அலசல்; ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமாக நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 2026 ல்  இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் ...

சென்னை, தி. நகர் காந்தி கல்வி நிலையத்தின் நூல் அறிமுக தொடர் நிகழ்வின் தற்போதைய பொறுப்பாளர் சு.சரவணனின் நேர்காணல். தீண்டாமை, கிராமத் தன்னிறைவு, இயற்கை பாதுகாப்பு,  நூல் வாசிப்பு, பெண்களின் சமூகப் பங்களிப்பு ..போன்ற காந்தியின் பன்முகப் பரிமாணம் குறித்த உரையாடல்; காந்தி நடத்திய போராட்டங்களில் அதிக அளவில் பெண்கள் திரண்டதற்கு என்ன காரணம் ? வன்முறையற்ற அஹிம்சையின் வழி ஒரு சமூகம் அமைய வேண்டும் எனில், அது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது என்று சொன்னவர் காந்தியடிகள். அவருடைய போராட்டங்களிலும், நிர்மாணத் திட்டங்களிலும் ...

காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டது எப்படி? அந்த ஒப்பந்த ஷரத்துக்கள் கூறுவது என்ன? காஷ்மீர் மக்களின் விருப்பம் அறியப்பட்டதா? குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல காஷ்மீரை கண்டதுண்டமாக்கும் பாஜகவின் நோக்கங்கள் என்ன? உச்ச நீதி மன்றம் இதில் என்ன தீர்ப்பு தரும்..? இன்றைய உலகில் மூன்று தேசிய இனங்கள் மட்டும் அரை நூற்றாண்டுகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு,தங்களுக்கென தனி இடமோ, சுதந்திரமான பகுதியோ இன்றி  அடக்குமுறைகளையும், துப்பாக்கி குண்டுகளையும், அன்றாடம் எதிர்நோக்கி தங்களது நிச்சயமற்ற வாழ்வை வாழவேண்டிய நிலையில் உள்ளனர் . அந்த மூன்று தேசிய இனங்கள்; ...

உலக நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் இந்திய எழுத்தாளர் அருந்ததிராய். இவர் புனைவு இலக்கியம் எழுதி பொழுதை கழிப்பவரல்ல, ஒரு சமூக செயற்பாட்டாளர்! மனதில் பட்டதை அச்சமின்றி பட்டவர்த்தனமாக பேசக் கூடிய அருந்ததி ராய், மணிப்பூர், ஹரியானா நிகழ்வுகள் மற்றும் பிரதமர் மோடி குறித்து பேசி இருப்பதாவது; மணிப்பூரில் நடப்பது ஓர் இன அழிப்பே. நடக்கும் கேடுகளுக்கு மைய அரசு உடந்தையாக இருக்கிறது. மாநில அரசு, கலவரத்தில் ஈடுபடும் ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் சாதியத்தால் பிளவுண்டு கிடக்கிறார்கள். மணிப்பூரில் தொடங்கிய ...

தமிழகத்தில் இது வரை நீட் தேர்வினால் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை எல்லா மாணவர்களுமே நன்றாக படிக்கும் ஏழை குடும்பத்து பிள்ளைகள்! இன்று பணம் உள்ளவர்கே மருத்துவ சீட்! ஆனால், காமராஜர் காலத்தில் எப்படி மருத்துவ கல்லூரி அட்மிஷன் நடந்தது என்பதை அறிந்தால் அசந்து போவீர்கள்! சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரன் அவர் மறைவால் துயரம் தாங்காமல் தன்னை மாய்த்துக் கொண்ட அவரது தந்தை செல்வ சேகர்..என இருவர் மரணமும் ஏற்படுத்திய மனவேதனை, கடந்த ...