தனிமனித உரிமைகளை பாதுகாத்து, சுதந்திரமாக வாழும் உரிமையை உத்திரவாதப்படுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமையாகும்! ஆனால், பாஜக அரசோ, தனி நபர் சார்ந்த தகவல்கள் மீது அத்துமீறி சட்ட விரோதமாக கைவைக்கும் பாசிசத்தை எப்படி நடைமுறையில் கொண்டுள்ளது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை; இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் தனிமனித உரிமைகளை அவர்களது ரகசியங்களை ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு வரும் நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியக்கூடும்! இப்போது நடைமுறையில் ஒருவரை பொருளாதார ரீதியாக முடக்கிவிட அந்த நபரின் ...
அதிசயக் கலையான அவதானம் தமிழர்களின் தொன்மைக் கலையாகும்! இது மிகக் கடும் பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும்! ஒரே நேரத்தில் எட்டு முதல் 16 வகையான செயல்களை பிசிறின்றி மிகுந்த நினைவாற்றலுடன், மனப் பயிற்சியுடன் செய்து பெருவியப்பை தோற்றுவிக்கும் இந்தக் கலையின் இன்றைய நிலை என்ன? எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை, ஒரு கைகளே உள்ளன! நம்மைப் போலவே உள்ள அவதானிகள் ஒரே நேரத்தில் பத்து தலைகளோ, இருபது கைகளோ இருக்கின்ற அதிசயப் பிறவி போல பல அவதாரங்கள் எடுத்து செயல்படும் கலையே அவதானக் கலையாகும்! ...
உண்ணாவிரதம், தர்ணா, ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் அமைதியான எதிர்ப்பு, கண்டனக் கூட்டம்.. என எல்லாவற்றுக்கும் தடை என்றால்..எப்படி? ஜனநாயகத்தில் போராடுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது உச்சகட்ட கொந்தளிப்பை உருவாக்காதா..? “நீ சொல்வதோடு நான் உடன்படாமல் போகலாம். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்பது பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேரின் புகழ்பெற்ற வசனமாகும். நமது அரசியல் சாசனம், பேச்சுரிமையையும், போராட்ட உரிமையையும் நமக்கு அளித்துள்ளது. அதனை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் ...
எங்கெங்கும் ஜேசிபியின் சீற்றம்! வேறெந்த ஆட்சியிலும் காணாத வகையில் குடியிருப்புகள் அகற்றம் என்பது தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இந்த ஆட்சியில் அரங்கேறி வருகின்றன! அதே சமயம் செல்வாக்கானவர்களின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு தந்தால் கூட, அரசு அசைந்து கொடுப்பதில்லை; விபரமாவது; செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரின் டோபிகானா தெரு , எம்.ஜி.ஆர் நகர், காயிதே மில்லத் தெரு, சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது திமுக ...
ரயில்கள் உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்பை முடக்கி, வெளிநாட்டு நிறுவனத்தை உள்ளே நுழைக்கத் திட்டமிடுகிறது பாஜக அரசு! இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகச் சிறப்பாக இயங்கும் அரசு நிறுவனத்தை அயலார்க்கு தாரை வார்க்க முன்னோட்டமா? பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையின் இரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. நவீன வந்தே பாரத் பெட்டிகளை உருவாகிய இந்த பாரம்பரிய அரசு நிறுவனத்திற்குள் வெளிநாட்டு நிறுவனத்தை நுழைப்பதால் உருவாகும் பொருளாதார இழப்புகளை அலசுகிறது இந்தக் ...
வீரத்தின் விளை நிலமாய் திகழ்ந்த மருது சகோதர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட பிறகு, சின்ன மருதுவின் மனைவி, மருமகள் ஆகியோர் அன்றைய நீதிமன்றங்களில் கோலோச்சிய சனாதன வழிகாட்டுதலில் சந்திக்க நேர்ந்த துயரங்களை விவரிக்கிறது இந்தக் கட்டுரை! அண்மையில் மருது பாண்டியர்களின் நினைவு நாள் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக மக்களால் கொண்டாடப்பட்டது . அவர்களது வீரமும், தியாகமும் , விடுதலை வேட்கையும் என்றும் மறக்க இயலாதவை . அதோடு கூடவே அவர்களின் மறைவுக்குப் பிறகு அதைத் தொடர்ந்து நடந்த சில சோக சம்பவங்கள் பலராலும் அதிகம் அறியப்படாத வரலாறு! அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ...
விஜய்யின் “லியோ” படம் கழுதைப் புலிகளை பற்றி தவறான சித்திரத்தை சமூக தளத்தில் உருவாக்குகிறது! உண்மையில் இவை இயற்கையின் பாதுகாவலன். படு ஆபத்தான விலங்கில்லை! அதே சமயம் மனிதன் நட்பாக்கி கொள்ளும் விலங்குமில்லை. இவற்றின் இயல்புகள், செயல்பாடுகள் சுவாராஷ்யமானவை; ‘ஹைனா’ எனப்படும் கழுதைப் புலிகள் ஓர் தனித்துவமான விலங்கு. தற்போது இவை மிகவும் அரிதாகி வருகிறது. இவைகளைக் குறித்து அறிவியல் பூர்வமாகவும், உயிரின வரலாற்றுடனும் அறிந்து கொள்வது நல்லது! விஜய் நடிப்பில் வெளியான ” லியோ “திரைப்படம் பார்த்த இளம் குழந்தைகள் கொடூரச் சண்டைகளில் ...
தமிழ்நாட்டில் தற்போது காவல்துறையின் மீதான நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது! ‘ரசியல் செல்வாக்கானவர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தமிழக போலீஸில் ஒரு போதும் நியாயம் கிட்டாது’ என்ற நிலை நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டுள்ளது. ஒரு விரிவான பார்வை; பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரும் போது, பாதிப்புக்குள்ளாகியவர் செல்வாக்கானவர் என்றால், காவல்துறை இதில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு கூட தயக்கம் காட்டுவது என்பது காவல் துறை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கான சிறந்த அடையாளமாகும். இப்படி நடந்து கொண்டதால் தான் கள்ளக் ...
‘லியோ வசூலில் சாதனை படைத்தது ‘என்கிறது தயாரிப்பு நிறுவனம்! ‘எங்களுக்கு லாபமில்லை’ என்கிறது தியேட்டர்கள் தரப்பு! உண்மைகளை ஆராய்ந்தால், பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுப்பதன் மூலம் பல அநீதிகளும், மெகா சுரண்டல்களுமே பல தரப்பிலும் அரங்கேறுகிறது..! ‘லியோ படத்தின் ஒரு வார கலெக்ஷன் 461 கோடி ப்ளஸ்’ என தயாரிப்பாளர் சார்பில் ஒரு விளம்பரம் தரப்பட்டது. இதையடுத்து திரைப்பட உரிமையாளர்களிடம் ”நல்ல கலக்சனாமே…” என பத்திரிகையாளர்கள் கேட்கப் போக, அவர்களோ, பொங்கி தீர்த்து விட்டார்கள்! ”கலெக்ஷனுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. நல்ல வசூல் தான்! ...