தமிழக நெல் கொள் முதல் நிலையங்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. எந்த நேரம் மழை வந்தாலும் இவை அதோ கதியாகும் அவல நிலையில் உள்ளன. ஒரு மாதமாக தொடரும் கொந்தளிப்பு சூழலும்,  விவசாயிகள், மற்றும் நெல் கொள்முதல் பணியாளர்களின் கதறல்களும் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்டவில்லையோ..! விவசாயம் என்பது தான் இருப்பதிலேயே சவாலான தொழிலாகும். எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் பெருமழை, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி படை எடுப்புகள் இத்தனையையும் எதிர் கொண்டு தான் விவசாயம் நடக்கின்றது. கடனை வாங்கியோ, அடகு ...

சீரகத்தின் மருத்துவ குணத்துக்கு அளவில்லை! செரிமான கோளாறுகளுக்கு தீர்வு தருவது மட்டுமல்ல, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது..! தோல் அரிப்பு தொடங்கி பல தொற்று நோய்களுக்கும் தீர்வு தரும் அரிய மருத்துவ அம்சங்கள் வரிசை கட்டி நிற்பதால், இது ஆரோக்கிய ரகசியங்கள் புதைந்துள்ள பொக்கிஷமாகும்; ‘பார்ப்பதற்கோ சாது… ஆனால் வெடித்துச் சிதறினால் தீப்பொறி…’ இந்தச் சொற்றொடர் சில வகையான மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நமது சமையலறையில் அமைதியாக மெளனம் காத்துக்கொண்டிருக்கும் சீரகத்துக்கு நன்குப் பொருந்தும். அதாவது சீரகத்தை மட்டும் கடித்துச் சாப்பிடும் போது, ...

உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. இந்த நியமனங்களில் பார்ப்பனர்களே அதிகமாகவும் பிற உயர்சாதியினர் அதற்கடுத்த நிலையில் அதிகமாகவும் இருப்பதன் பின்னணியில் கடைபிடிக்கப்படும் தந்திரம் என்ன? – நீதிபதி ஹரிபரந்தாமன்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தமிழ்நாட்டில், குறிப்பாக வழக்குரைஞர் மத்தியில்  தற்போது முக்கியமான பேசு பொருளாகியுள்ளது.காரணம்,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே,  சுமார் 13 காலி பணியிடங்கள் இருக்கையில், 2025 ஆம் ஆண்டில்  எப்போதும் இல்லாத அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுவதை ஒட்டி மேலும் 12 முதல் ...

நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா?  நம்மை ஆட்சி செய்பவர்கள் நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் தானா…? அல்லது வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷர்களா? கிட்டத்தட்ட 600 நாட்களாக ”நாங்கள் வாழும் நிலத்தை அபகரிக்காதீர்கள்” எனப் போராடும் விவசாயிகள் பல முறை முயற்சித்தும் முதல்வரை பார்க்க முடியவில்லை.. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு பேரணி, ஆதார், வாக்காளர் அடையாள  அட்டைகளை துறக்கும் போராட்டம்.. ஆகிய பலகட்ட போராட்டங்களை நடத்திய மேல்மா விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவி, ஏகப்பட்ட வழக்குகள், குண்டர் சட்டம், ...

அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்குமான உறவை பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சுய மரியாதைக்கும், சுய சார்புக்கும் பாதகமான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொள்கிறார்! இதை  முறையாக எதிர் கொள்ளத் துணிவின்றி இந்தியா பணிந்து போவதான அறிகுறிகள் கவலையளிக்கின்றன; அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட​விரோத​மாக​ குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறது  டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு. இதன் முதல்கட்டமாக  கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி  கை மற்றும் ...

இன்னும் எத்தனை அணு உலைகளையும் இந்தியா தாங்குமாம். ஆகவே, ”அணு உலை ஆரம்பிக்க விரும்புவர்கள் யாராயினும், ‘பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால், இழப்பீடு தர வேண்டும்’ என்ற சட்டங்களை கண்டு அஞ்ச வேண்டாம்! அவற்றை நீர்த்து போகச் செய்யத் தானே நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்…”என்கிறார் நிர்மலா சீதாராமன்! சமீபத்திய பட்ஜெட்டில் பட்ஜெட்டில் நாட்டின் நீண்டகால எரிசக்தி மாற்றத்திற்கான நடவடிக்கையின் ஒரு அம்சமாக அணுசக்தி குறிப்பிட்டு, 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை நிறுவ ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவிற்கான அணுசக்தி இயக்கத்தை ...

பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்பட உண்மை காரணம் என்ன? இதில் நமது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் என்ன தான் பிரச்சினை? மத்திய அரசு எவற்றையெல்லாம் நிர்பந்திக்கிறது? இதில் மாநில அரசின் நிலைபாடு என்ன? நிதி மட்டுமா பிரச்சினை? இந்தி மட்டுமா சிக்கல்? இல்லை. இதில் சொல்லப்படாத விவகாரங்கள் நிறையவே உள்ளன; பள்ளிக் கல்வி துறைக்கு இந்த ஆண்டு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதி ரூ 2,152 கோடியை தரமறுக்கிறது. சென்ற ஆண்டு நிதியிலும் 249 கோடியை தராமல் நிறுத்தி விட்டது. இதைக் ...

நோய்கள் ஏற்படாதிருக்கவும், ஏற்பட்டால் அதை குணப்படுத்தவுமான உணவு முறைகளை நாம் பார்க்கப் போகிறோம். இதனால் லட்சங்களில் தீர்வைத் தேடும் மருத்துவத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு உணவிலும் ஆரோக்கியத்தை பேணும் அம்சங்களோடு நமது சமையலறை செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என நாம் அலசுவோம்; அஞ்சறைப் பெட்டி பொருட்கள் என்று சொன்னாலே ஒரு காலத்தில் மருத்துவப் பார்வையோடு பார்த்த சமூகம் நம்முடையது. அவற்றைப் பயன்படுத்தி நுணுக்கமாகத் தயாரிக்கப்படும் உணவுகள், நோய்கள் ஏற்படாமல் தடுப்பது மட்டுமன்றி, பல்வேறு நோய்களை நீக்கும் ஆயுதங்களாகவும் பயன்பட்டன. அஞ்சறைப்  பெட்டியில் அங்கம் வகிக்கும் ...

வேலியே பயிரை மேய்ந்த கதையாக முதலமைச்சரே மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டு, ஒரு தரப்பை ஆதரித்து, கிறிஸ்த்துவ பழங்குடிகளான குக்கி இன மக்களை கூண்டோடு கருவறுக்க காய் நகர்த்தியது துல்லியமாக அம்பலப்பட்ட  நிலையில், பாஜக தலைமை பிரேன் சிங்கை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா…? அறுநூற்று ஐம்பது நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் சமூகத்தின் இரு பெரும்பிரிவுகளான மெய்தீ மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இன மோதலும் வன்முறையும் வெடித்து உச்சத்தை தொட்ட பொழுது , பதவியிலிருந்து விலகாத முதல்வர் என். பிரேந்திர சிங்  அமீத் ...

இந்திய உயர் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகள் 62 லட்சங்கள்! இதை விரைந்து தீர்க்க தற்போது நிலவும் நீதிபதி பணியின் காலி இடங்களை நிரப்புவதற்கு மாறாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து மீண்டும் பதவி தருவது என்பது சரியான அணுகுமுறையாகுமா? இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என அலசுகிறார் ஹரிபரந்தாமன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அமர்வு ஜனவரி- 30, 2025 அன்று அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி சூரிய காந்த் ...