அமரன் படம் தேச பக்தி, காதல் என்ற தளத்தில் ஆழமான உண்மை தன்மையோடு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இரு வேறு மதத்தின் காதலர்கள் ஒன்றுபடுகிறார்கள். சாதி கடந்து, மத நல்லிணக்கத்தை சொல்லிய இந்த படத்தின் நல்ல அம்சங்களை புறம் தள்ளி, தங்கள் சாதி அடையாளம் மறைக்கப்பட்டதாக பிரச்சினை  செய்கிறார்கள்: தற்போது இந்த படத்தை பற்றி ஒரு சர்ச்சையை ஒரு சாதி அமைப்பினர்  கிளப்பி காரசாரமாக சமூக வலைதளங்களில் எழுதியதோடு, தங்கள் சாதியினர் நடத்தும் தின இதழான ‘இந்து தமிழ் திசை’யிலும் நான்கு காலத் தலைப்பிட்டு ...

தேச பக்தியையும், உயிர்ப்பான காதலையும் ஆழமாக காட்சிப்படுத்தியதில் படம் முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சொந்த மக்களுக்கு எதிராக ராணுவம் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளை படம் ஏற்படுத்துகிறது; காதல், வீரம், தேசபக்தி, தியாகம்..என கலவையாக வெளிவந்துள்ள அமரன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைக் காவியம் என்பதில் சந்தேகமில்லை. மேஜர் முகுந்த்  தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது இயல்பாக மலரும் காதல், அதை இரு வீட்டார்களும் ...

சமீபத்திய கிராம சபை கூட்டங்களில் பல நூறு ஊராட்சிகளில், ”எங்கள் கிராம பஞ்சாயத்துகளை வாழவிடுங்கள். அதனை பேரூராட்சியோடோ, நகராட்சியோடோ, மாநகராட்சியோடோ இணைத்து விடாதீர்கள்” என  தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்துகிறார்கள்.! என்ன நடக்கிறது? தமிழ்நாடு அரசு தற்போது அதி வேகமாக கிராம ஊராட்சிகளை அதிரடியாக பேரூராட்சியுடனோ, நகராட்சியுடனோ, மாநகராட்சியுடனோ இணைத்த வண்ணம் உள்ளது. இப்படி கிராமங்களை வலிந்து நகரப்படுத்துவதால் இயற்கை அழிகிறது, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகிறது. விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள் அனைத்தும் அழிந்து மக்கள் நடுத்தெருவில் ...

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியூசி தோன்றி 105 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் தோற்றத்திற்கான காரணங்கள், எழுந்த எதிர்ப்புகள், தலைமை தாங்கிய மாபெரும் தலைவர்கள், போராட்டங்களின் வழியே பெற்ற உரிமைகள் போன்றவற்றை திரும்பி பார்த்தால், இவற்றுக்கு இன்று ஏற்பட்டுள்ள சவால்கள் விளங்கும்; 1920 அக்டோபர் 31 நாள் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முதல் மத்திய அமைப்பான ‘அகில இந்திய தொழிற்சங்க பேராயம்’ என்ற ஏஐடியூசி மும்பையில்  உருவானது. முதல் தலைவராக விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜவஹர் லால் ...

“மருதோன்றி” எனும்  மருதாணி ! திபாவளிக்கு வண்ணமய  வாழ்த்து ! மருதாணி சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலை நம்மை அழகுபடுத்திக் கொள்ள மட்டுமல்ல, இது ஆரோக்கியம் சார்ந்த இயற்கையான நிறமூட்டியாகும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, மனிதனுக்குப் பலனளிக்கும் மருதாணிக்கும், தீபாவளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது; மருதாணி இலையின்  சாறினால் சிவந்த நிறத்தில் மரு எனும் மச்சம் போன்ற சிறு புள்ளி,  தோன்றுவதால் அந்த இலைக்கு “மருதோன்றி” என்று பெயர் வைத்தனர். அதுவே பிற்காலங்களில் மருவி மருதாணி என்றாயிற்று. சித்த மருத்துவத்தில், ...

சின்னஞ் சிறிய உருவம்! கவிதை சீற்றமோ எரிமலை வடிவம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் கவிதை வானில் ஒளிவீசித் திகழ்ந்த இந்த பெருங்கவிஞர் போதுமான அளவு கவனம் பெறவில்லை. அவரது சமரசமற்ற குணங்கள் அவரை எந்த இயக்கத்திற்குள்ளும் கட்டுண்டு இருக்கவிடவில்லை. கவிஞரை பற்றிய ஒரு பார்வை; எளிய சொற்களில்  ஒரு எரிமலையின் வெப்பத்தை கடத்தும் ஆற்றல் பெற்ற கவிஞரும், ஒரு ஆற்றின் கரையோரம் பிறந்தவர் தான். அதனால் ஆறும் நீரும் நிலமும் வாழ்வும் பற்றி நிறைய அறிந்தவர். “காவிரியை கடக்க  ஓடம் தேவையில்லை .இனி  ஒட்டகம் ...

தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள்  என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும்.  வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது; விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு  வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே ...

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரு பெரும் அதிகார மையங்களை தன் எதிரிகள் என பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ளார். ஆக எதிர் நீச்சல் போடத் துணிந்து விட்டார். இன்றைய த.வெ.க மாநாடு தரும் செய்திகள் என்ன..? ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் என்ன…? எனப் பார்ப்போம்; இத்தனை வருடங்களாக விடுபடாத புதிராக தொடர்ந்த நடிகர் விஜய்யின் அரசியல் தற்போது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது! ஒரு நடிகனாக இருக்கும் வரை சினிமா வியாபார வெற்றி கருதி அவர் மனதில் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை ...

தமிழ் நாட்டில் பல்லாண்டுகள் நடைமுறையில் இருக்கும் தமிழ் தாய் வாழ்த்தை மாற்ற வேண்டும் என்ற சனாதனவாதிகளின் நோக்கத்திற்கு சாதகமாக இங்கே சூழல்கள் கட்டமைக்கப்பட்டு வரும் பின்னணியையும், இதை தடுக்கும் துணிவின்றி தமிழக ஆட்சியாளர்கள் தடுமாறுவதையும் இந்த கட்டுரை விளக்குகிறது; தற்போதைய தமிழ் தாய் வாழ்த்துப் பாடலுக்கு மாற்றாக  வேறொன்றை கொண்டு வர வேண்டும்…என்ற முன்னெடுப்புகள் வேகம் பெற்றுள்ளன. நடைபெற்று வரும் சம்பவங்களை கோர்வையாக வைத்துப் பார்க்கும் போது இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடல் வைக்கப்படும் எனத் தோன்றுகிறது. சென்னை ...

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன. இந்த ஏற்பாடுகளிலும், தன்னுடைய கடிதங்களிலும் விஜய் வெளிப்படுத்தியுள்ள அரசியல் சமிக்சைகள் என்ன? எதை நோக்கி விஜய் நகர்ந்து கொண்டுள்ளார்..? ஏன் பல விசயங்களில் இவ்வளவு ரகசியம் பேணுகிறார்? பல ஆண்டுகளாக தன் மனதில் கனன்று கொண்டிருக்கும் அரசியல் செயல் திட்டத்தை வரும் அக்டோபர்-27 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார் நடிகர் விஜய். பல லட்சம் பேர் திரள இருக்கும் இந்த அரசியல் மாநாடு பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லா தரப்பிலும் நிலவுவதை ...