நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டு அதை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு பத்திரிகை துறைக்கு உள்ளது! ஆனால், சமீபகாலமாக அந்த தவறுகளில் தானும் சம்பந்தப்பட்டு ஆதாயம் அடைகிறது ஊடகத் துறை! அது தான் தற்போதைய நூலகத்திற்கான பத்திரிகைத் தேர்வில் வெளியாகியுள்ளது. ஒரு நாடு சிறந்ததாக உள்ளதா என்பதன் அடையாளங்களில் ஒன்று, அந்த நாட்டில் நூலகங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதாகும். அந்த வகையில் தமிழகத்தில் நூலகங்கள் பெரும் வீழ்ச்சியை கண்டு வருவது தொடர்பாக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். ஆயினும், அது நாளுக்கு நாள் ...

‘ஜல்சா’ என்பதற்கு ஒன்று சேர்தல் எனப் பொருள்!  படு விறுவிறுப்பான இந்த இந்திப் படம் ஓடிடி தளத்தில் ஒடுகிறது! மனித நேயமின்றி மனசாட்சியை அலட்சியப்படுத்தும் போது, குற்றவுணர்வு எப்படி கொன்று போடுகிறது என்பதும், இப்படிப்பட்டவர்களை மன்னிப்பதா? வேண்டாமா? என்பதும் உயிர்ப்போடு சொல்லப்படுகிறது! மும்பையின் உயர் வகுப்பை சார்ந்த ஒரு ஊடகவியலாளராக வித்தியாமேனன் நடித்துள்ளார். இவர்  இரவில் ஒரு இளம் பெண் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி  விடுகிறார். அவரிடம் பணி புரியும் சமையலரின் பெண் தான் விபத்திற்குள்ளானவள்! தன்னிடம் உண்மையை மறைக்கும் முதலாளியம்மா  ...

கண்ணுக்கு கவர்ச்சியாக இருக்கும் உணவுகளை விரும்பி, வீழ்கிறோம் நோயில்! பல்வேறு விதமாக  உணவில் நாம் சேர்க்கும் நிறமூட்டிகள் எவ்வளவு ஆபத்தானவை எனத் தெரிந்து கொள்வோம். உணவு… உயிர்வாழ உதவுகிறது. `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால்,  தவறான உணவு சில நேரங்களில் நோய்களையும் உருவாக்குகிறது. உணவு உணவாக இருந்தவரைக்கும் பிரச்சினையில்லை, என்றைக்கு அது பெரும் வியாபாரப்பொருளாக மாறியதோ அன்றைக்கே அது தடம் மாறிவிட்டது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவில் சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் அளவுக்கு மீறி சேர்க்கின்றனர். ...

மருத்துவ வல்லுநர் குழுவின் எதிர்ப்பை பொருட்படுத்தால், மூர்க்கதனமாக குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன? மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிறார்களுக்கு கைவிடக் கூறி, மக்கள் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை! கடந்த  மூன்று அலைகளிலும் கொரானா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறார்களின் சதவீதம் 0.02 தான். இந்தத் தொற்று நோய் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  பாதிக்காது என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் சொன்ன பிறகும் “தடுப்பு மருந்து, தடுப்பு மருந்து “என்று இவர்கள் ஏன் அலைய ...

22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை  உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார்.  மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர்  பணியாற்றியுள்ளார்.  வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ...

நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கியுள்ள  தீர்ப்பில், ஆண் என்பவர் ஆண் தான். சட்டம் என்பதும் சட்டம் தான். பலாத்காரம் என்றால், அது பலாத்காரம் தான். பலாத்காரம் செய்வது கணவனாக இருந்தாலும், பலாத்காரத்திற்கு ஆளாவது மனைவியாக இருந்தாலும் பலாத்காரமே.’’ எனக் கூறியுள்ளார். ”என் மனைவி தானே. என் விருப்பத்திற்கு அவள் தட்டாமல் பணிந்து போக வேண்டும் என அதிகாரம் செய்வது மனிதாபிமானமற்றது! ஆகவே, விருப்பமில்லாத மனைவியை நிர்பந்தித்து உறவு கொள்வதோ, அதற்காக துன்புறுத்துவதோ ஏற்கதக்கதல்ல” என்கிறது தீர்ப்பு. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கிய ஒரு ...

பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள்,  ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது? தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement  என்றால், அது மிகையல்ல. அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF)  உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில ...

தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ? பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. திராவிட இயக்கம் தான் ...

ஒரு பத்திரிகையாளன் பார்வையில் சொன்னால், இது போன்ற ஒரு பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியை சென்னை கண்டதில்லை! தீவுத்திடலில் 500 நாட்டுப்புற கலைஞர்களின் அசத்தலான பல தரப்பட்ட கலை நிகழ்வுகளைக் கண்டு பரவசப்பட்டவர்கள் இதை ஆயுளுக்கும் மறக்க மாட்டார்கள்! தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “நம்ம ஊரு திருவிழா”,சென்னை தீவுத் திடலில் நேற்று (21.03.22) மாலை நடைபெற்றது. இந்த விழாவை பார்க்க  மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற போது மணி இரவு 8.00.சின்னப் பொண்ணு, ...

புகழ்மிக்க ஒரு  நடிகையின் துன்பமும், வலியும் நிறைந்த சொல்லப்படாத மறுபக்க வாழ்வை சித்தரிக்கும் சீரியலே Fame Game. நடிகையின் குடும்ப வாழ்க்கையும், திரையில் அவள் வளர்ந்த விதமும் மாறி, மாறி சொல்லப்படுகிறது. இது  நமக்குத் தெரிந்த பல திரை நட்சத்திரங்களின் வாழ்வை நினைவுபடுத்துகிறது. தொண்ணூறுகளில் வெளியான கல்நாயக் படத்தின் ‘சோளி கே பீச்சே கியா ஹை’ என்ற பிரபல பாடல் புகழ், மாதுரி திக்‌ஷித்தான், Fame Game என்ற இந்தித் தொடரில் அனாமிகா ஆனந்த் என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகையின் குடும்ப ...