தமிழ் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? எளியோரிடம் இரக்கம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை முன்வைத்து பலவித கலவரச் சூழல்கள் உருவாக்கப்படுவதும், ”உதைப்பேன், கையை வெட்டுவேன்” என்ற வன்முறை பேச்சுகள் அரங்கேறுவதும், தியேட்டர்களில் படம் பாதியில் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதும், சூரியாவின் பேனர்கள் கிழித்து எரிக்கப்படுவதும்… நடந்து கொண்டே இருக்கின்றன! இதை இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறது அரசாங்கம்? வன்முறை வளர்ந்து நடக்கக் கூடாத ஒன்று நடந்த பிறகு தான் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா? ...

சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4 தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது. உலகம் முழுவதுமே பெண்களுக்கான  பாலியல் சீண்டல்  பிரச்சனைகள்  இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும்  பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும்  சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது! தனியார் ...

கிரிப்டோ கரன்சி, பிட்காயின், என்றெல்லாம் சொல்லப்படும் குருட்டாம் போக்கிலான பணப்பரிவர்த்தனை முறையை தடை செய்வதா? இதன் விபரீத விளைவுகளை எப்படி கட்டுப்படுத்துவது..? என இந்திய அரசு தடுமாறுகிறது! இது தீவிரவாதிகளுக்கு உதவுகிறதா? அல்லது கறுப்பு பணத்தை பாதுகாக்கிறதா..? ஷேர் மார்கெட்டில் பணம் போடுவதைக் கூட ஒரு சூதாட்டமாக கருதும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் புதிதாக வந்துள்ள கிரிப்டோகரன்சி பற்றித் தெரிந்து கொண்டால் என்ன சொல்வார்களோ..? ”அய்யோ இந்த வினையே வேண்டாம்” என்று சீனா, ரஷ்யா, வியட்னாம், பொலிவியா, ஈக்குவாடர், கொலம்பியா போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சியை ...

கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி காமராஜர்_அண்ணா கலைஞர்_எம்.ஜி.ஆர் கலைஞர்_ஜெயலலிதா என்ற ஒப்பீட்டு வரிசையில் ஸ்டாலின்_….? காமராஜர், அண்ணா இருவரும் சுயம்புவாக உருவான தலைவர்கள்! கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் தமிழக அரசியலை ஒன்மேன் ஷோவாக மாற்றியவர்கள்! கலைஞர், ஜெயலலிதா ஒருவருக்கொருவர் ஈகோவில் உச்ச நிலையைத் தொட்டவர்கள்! ஸ்டாலுனுக்கு ஈடு கொடுப்பதில் தான் தற்போது நான்கு முனை போட்டி நிலவுகிறது இ.பி.எஸ், ஒ.பி.எஸ், சசிகலா போதாது என்று அண்ணாமலையும் களத்தில் நிற்கிறார்! கட்சியில் அடுத்தகட்ட தலைவர்கள் அடையாளம் பெற்று எழுவதை எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை மீறி எழுந்து தன்னை ...

காமராஜர் காலத்து மாணவரணித் தளபதிகளுக்கு தலைமை தாங்கியவர், கம்பீரமான பேச்சாளர், தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால் புலமை கொண்டவர், தீவிர புத்தக வாசிப்பாளர், சிறந்த  சோசலிஸ்ட், திராவிட இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் நெருக்கமான நண்பர்களைக் கொண்டவர், நேர்மையான வழக்கறிஞர், எளியோருக்காக பணம் வாங்காமல் ஆஜரானவர்.., பெரும் ஆளுமையாக இருந்தும் உரிய அங்கீகாரம் பெறாதவர்…என பலவாறாக சொல்லிக் கொண்டே போகலாம் நண்பர் தஞ்சை ராமமூர்த்தியைக் குறித்து! தஞ்சை இராமமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி இடியாய் இறங்கி என்னை வந்து தாக்கியது ! தஞ்சை இராமமூர்த்தி  மறைந்தார் ! ...

ஜெய்பீம் ஏற்படுத்திய சமூக அதிர்வைப் போல அன்றும் சில படங்கள் ஏற்படுத்தின! அப்படியான சில முன்னோடிப் படங்ககளும், படைபாளிகளும் தமிழ்ச் சினிமாவின் பெருமிதங்களாக நினைவில் கொள்ள வேண்டியவைகளாகும்! சினிமா என்பது படைப்பாளியின் பிள்ளை! படைப்பாளி என்பவர்  சமுதாயத்தின் பிள்ளை! ஆகவே, சினிமா என்பது சமுதாயத்தின் பிள்ளை என்றாகிறது ! அந்தவகையில் சினிமாவும், சமுதாயமும் ஒன்றுக்கொன்று பெரிதும் கடமைப்  பட்டுள்ளன! அந்தக் கடமையை அண்மையில் வெளியான “ஜெய்பீம் “முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது. இருளர் எனப்படும் பழங்குடி இனம்,காலகாலமாக நம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாடுகிற இனம். ...

பழங்குடி மக்கள் அதிகார மையத்தால் அனுபவிக்கும் சொல்லப்படாத வலிகளை சொல்லும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் ஒரு புறம் மக்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில், மற்றொரு புறம் மதவாத, சாதிய அரசியல் செய்து வருபவர்களின் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த விமர்சனங்களுக்கான பதில்கள் படத்திற்குள்ளேயே இருக்கிறது என்ற வகையில் அமைதியாக கடந்து சென்றார் சூர்யா! ஆனால், அன்புமணி ராமதாஸ் மிக சூடாகி சூர்யாவிற்கு சில கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி ‘கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்’ என்றார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் ...

மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? பதற வேண்டாம், பணம் வேண்டாம்! யார் தயவும் தேவையில்லை! வரமாக வந்த மழையை வறண்டு கிடக்கும் நிலத்தடிக்குள் இதோ இந்த எளிய முறையை பின்பற்றி , அனுப்புங்கள்! வெள்ளத்தில் இருந்து உடனே விடுதலை! தொடர் மழை தமிழகம் முழுக்க சக்கை போடுபோட்டவண்ணம் உள்ளது! மழைவெள்ளத்தால் தண்ணீர் தேங்கி உள்ளதால் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், உற்பத்திக் கூடங்களும் தண்ணீரை வெளியேற்ற பகீரதப் பிரயத்தனம் செய்த வண்ணம் உள்ளனர்.முடிந்த வரை அரசு துரிதகதியில் இறங்கி நீரை வெளியேற்றினாலும் பல இடங்களில் அரசு உதவியை எதிர்பார்த்து ...

2015-ல் பெய்த மழையில் நான்கு மாவட்டங்களில் –சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் கடலூர் போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளச் சேதங்கள்- உயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டன. டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் தூத்துக்குடியிலும் பெரும் மழைச்சேதங்கள். இந்த நிகழ்வுகளின் மூலம் அன்றைய அரசாங்கத்தின் -அரசியல்வாதிகளின் – ஏன் தனிப்பட்டவர்களின் தவறுகள் மற்றும் குற்றங்கள் பல வெளியே அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. தற்போதைய பெருவெள்ளம் அவற்றை நினைவுபடுத்துகிறது. அன்றைய பேரழிவுகளில் இருந்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போதுமான பாடம் பெறவில்லை. இப்போதும் ஏன் தண்ணீர் சாலைகளில் இவ்வளவு ...

எம்.ஆதித்யா, பனைமரத்துப்பட்டி, சேலம் ”ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இடைத்தரகர் சூசேன்குப்தாவிற்கு ரூ65 கோடி தரப்பட்டுள்ளது பற்றி ராகுல் பதில் சொல்ல வேண்டும்” என்கிறதே பாஜக? இதைக் கண்டுபிடிக்க ஏழு ஆண்டுகளா..? இதைத் தெரிந்து கொள்ளாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டு 36 விமானங்கள் வாங்கபட்டதா? இந்த அளவுக்குத் தான் நிர்வாகத் திறமையா..? தவறு நடந்திருக்கிறதென்றால், தண்டிக்க வேண்டியவர்களே நீங்கள் தானே? சம்பந்தப்பட்டவர்களை எப்போது உள்ளே தள்ளப் போகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! விவகாரத்தை திசை திருப்பாமல் பதில் சொல்லட்டும். காங்கிரஸ் ஆட்சியில் ...